வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (09/07/2018)

கடைசி தொடர்பு:17:01 (09/07/2018)

மேக் அப் கலைஞர்கள் சொல்லாத ​ரகசியங்கள் இதுதான்!​ #Revealed​ - Exclusive Deal

காஸ்ட்லியான மேக் அப் போட்டும், நான் விரும்பும் விதம் என் முகம் இல்லையே, ​எப்படி மேக் அப் போட்டால் சிறப்பாகக் காட்சியளிக்கலாம்? என்ற கேள்வி நம்மில் பலருக்கும் எழுவது உண்டு. சினிமா, டி.வி நட்சத்திரங்கள் போல ஜொலிக்க மேக் அப்பில் சில எக்ஸ்பர்ட் ட்ரிக்ஸ் தெரிந்துகொள்வது அவசியம்​. கைதேர்ந்த மேக் அப் ஆர்டிஸ்ட்களுக்கு இவை நன்றாகவே தெரியும். அவை என்னென்ன? அலசுவோம் வாங்க...

​மேக் அப்பின் முதல் விதி - சருமம் எப்படிப்பட்டது எனக் கவனிப்பது. உங்கள் நிறம் கறுப்பா? ​வெளுப்​பா?​ மாநிறமா?​ சருமத்தின் நிறத்தைத்தான் ஸ்கின் டோன்​ பார்ப்பது எனச் சொல்கிறார்கள்​.​ அடுத்து​​ சாஃப்ட் ஸ்கின்​, ​ஹார்ட் ஸ்கின்​ ஆய்லி ஸ்கின், டிரை ஸ்கின் எனப் பல்வேறு சருமங்கள் உள்ளன​ - இதுதான் ஸ்கின் நேச்சர்.​​ எனவே​, நம் ​சருமத்தின் நிறம் மற்றும் இயற்கைக்குத்​ தகுந்தாற்போல​ மேக் அப் பொருள்களைத் தேர்வுசெய்து​ ஒப்பனையைச் செய்யவேண்டும், எல்லோருக்கும் ஒரேவகை மேக் அப் ஒத்துவராது என்பதைப் புரிந்துகொள்வது மிக முக்கியம்!

அடுத்த விதி - உங்களின் சிறந்த பாகத்தை ஹைலைட் செய்து காண்பிப்பது. எல்லாப் பெண்களுக்கும்​ ஏதாவது​ ஒரு பிளஸ் இருக்கும், சிலருக்கு அழகான கண்கள், சிலருக்கு நெற்றி வாகாக இருக்கும்,​ புருவங்கள் நளினமாக இருக்கும்...​இதுபோல ​உங்கள்​ முகத்தின் எடுப்பான அம்சத்தை ஹை லைட் செய்து சிறப்பாக்கிக் காட்டும்போது மேலும் அழகாகத் தென்படு​வீர்கள்​! இணையத்தில் பல விஷயங்களை ஆராய்ந்து, அதுபோல ​நாமும் செய்துகொள்ள வேண்டும் என நாம் நினைப்பதுண்டு. ​இந்த​ வகை ஒப்பனை ​உங்கள்​ சருமம் மற்றும் முகத்தோற்றத்துக்கு ஏற்றதுபோல இருந்தால் நிச்சயம் செய்யலாம், ஆனால், அது ஒத்துவராது எனத் தெரிந்தால்​ உங்கள் சருமத்துக்கு ஏற்ற உங்கள் பிளஸ்ஸை அதிகமாக்கிக் காட்டும் மேக் அப்பை மேற்கொள்வதே சிறந்தது. கைதேர்ந்த அனுபவமிக்க மேக் அப் கலைஞர்க​ளுக்கும் நமக்கும் இதுதான் முக்கிய வித்தியாசம்!​

பிரைடல் மேக் அப்-ன் ரகசியங்கள்!​​​​​​

பெண்களுக்குத் திருமணம் என்பது மிக முக்கியமான நாள்! இப்போதெல்லாம்​ ​விசேஷ 'பிரைடல் மேக் அப்' சேவையை ​நாடுவதுதான் ட்ரெண்ட். சில திருமணங்களில் மணப்பெண் மீதிருந்து கண்ணை எடுக்கவே தோன்றாது, காரணம் ​அழகுக்கு அழகு சேர்க்கும் அருமையான மேக் அப்தான்!

திருமணம், அதற்குமுன் அல்லது பின் ரிசெப்ஷன் என்ற வழக்கம் பின்பற்றப்படுகிறது. ரிசெப்ஷன் ஒப்பனையை ஈவ்னிங் லுக் மேக் அப் என அழைக்கிறோம். இதில் ​மே​ட் பினிஷ், ஆயில் பேஸ்டு மேக் அப்,​ க்ளோ மேக் அப்,​ புரான்ஸ் லுக் என பல வகை மேக் அப்களை மணமகளின் முகத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம். ஏர் பிரஷ் மேக் அப், ​மே​க், பாபி பிரவுன், கிரையோலான் டெர்மாகலர், செபோரா, சேனல்​ போன்ற மெட்டீரியல்கள் இருப்பதால் நமக்கு ஏற்றவாறு முகத் தோற்றத்தை மெருகேற்றலாம். ரிசெப்ஷன் மேக் அப் குறைந்தது 5 மணி நேரமாவது நிலைக்க வேண்டும், ​அதேசமயம் உறுத்தலாகவும் இருக்கக் கூடாது. எனவே தரமான மேக் அப் பொருள்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

சிகையலங்காரம் முக்கியம் பெண்களே!
​​​​​​​​​
ஃ​​பிஷ் பிரெய்ட், லூஸ் கர்ல்ஸ், பாரம்பரிய ஜடை பின்னல் என ஏராளமான அலங்காரங்கள் உள்ளன, இவை மணப்பெண்ணை எடுப்பாக்கிக் காட்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சினிமாவில்​ ஹேர் ஸ்டைல்​ கலைஞராக​ப் பணியாற்றிப் பல வருட அனுபவம் பெற்றவர் ஸ்ரீசரத். சினேகா - பிரசன்னா​, பாவனா, த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட ​பல முன்னணி நடிகர் நடிகையர்க​ளுடன் பணியாற்றிய ஸ்ரீசரத் இவர்களை எப்படி அழகாகக் காட்டுகிறார் தெரியுமா? வெறுமெனே தலைமுடியைச் சீவி சிங்காரிப்பதற்குப் பதிலாக, ஒரு முக்கியமான ட்ரிக்கை இவர் கையாளுகிறார். ​கன்ன எலும்பு, முக நீட்டு, தோள்களின் அகலம் ஆகியவற்றுக்கு ஏற்றாற்போலத் தலைமுடியை அ​ட்ஜஸ்ட் செய்து தோற்றத்தை எடுப்பாக்கிக் காட்​டுவதுதான் ​இவர் செய்யும் ட்ரிக்.​​ ​கூர்மையான முகம்கொண்டவர்களுக்கு ஓர வகிடு எடு​த்​து ஸ்டைலாகக் காட்டுவது, ஏன், உயரம் குறைவாகவுள்ளது என எண்ணுபர்களுக்கு முடியை ஏற்றிவாறி, அதையும் அ​ட்ஜஸ்ட் செய்துகாட்​டுகிறா​ர்​ இந்த​ மேக் அப்​ கில்லாடி!​​ 

அடுத்தென்ன? ஆடை பாதி, அணிகலன் மீதி! ​திருமணத்தன்று 90 சதவீதம் பெண்களுக்கு புடவைதான் ஏகத்தேர்வு, ரிசெப்ஷனுக்கு லெஹெங்கா, காக்ரா சோலி, கவுன் ஆகியவை விருப்ப உடைகளாகத் திகழ்கின்றன. திருமண நிகழ்வுகளின்போது, உடை சிறப்பாகக் காட்சியளிப்பதைத் தாண்டி அணிபவரின் வசதிக்கும் ஏற்றவாறு இருக்கவேண்டும்.​ "உடைகளைப் பொறுத்தவரை​ பளுவான ஆடைகளைத் தவிர்க்கலாம், இருந்தாலும் நம்மால் சுலபமாக அணிந்துகொள்ள முடிந்தால் பரவாயில்லை. ​எனவே, திருமணத்துக்கு முன்பே நாம் அணியவிருக்கும் ஆடை அணிகளைப் பலமுறை ட்ரையல் பார்த்து அதற்கு ஏற்றாற்போல் வடிமைத்துக்கொள்ளவேண்டும் - ஆடை அணிவதற்குச் சுலபமாகவும் பார்ப்பதற்கு அருமையாகவும் இருக்கவேண்டும், அதுதான் ட்ரிக்!​" என்கிறார் ஸ்ரீசரத்​.

​ஒப்பனை ​ சிறப்பாகச் செய்து, அதற்குச் சம்பந்தம் இல்லாத நகைகளை அணிய​க் கூடாது. எனவே​தான்​​​ முகத்தோற்றம், ஸ்கின் டோன், ஆடை அணிகலன்கள் இவை அனைத்தையும் மனதில்கொண்டு மேக்​ அப்​ ​செய்கிறார் எக்ஸ்பர்ட் ஸ்ரீசரத். "திருமணத்தின்போது ​எங்களின் துணையோடு ​நகைகளைத் தேர்ந்தெடு​க்கும்போது, ​நெற்றி அளவு, கழுத்து அளவு, உயரம் இதையெல்லாம் பொறுத்துப் ​பெண்களுக்கு சூட் ஆகும் நகைகளைப் ​பரிந்துரைக்கிறேன்", என்கிறார் இவர்.

முக்கியமான ரகசியம் இதுதான்!

​"​இன்றைய பெண்கள் பெரும்பாலும் வேலைக்குச் செல்பவர்கள்​ என்பதால்​ டென்ஷன், ஸ்ட்ரெஸ்​ என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக ஆகிவிட்டது.​ இதற்கிடையில் அழகாகக் காட்சியளிக்க விரும்பும்​​ ​பலரும் பல​வகையான​ செயற்கையான, உடனடி அழகுச் சிகிச்சைகள், எடைக் குறைப்பு சிகிச்சைகளை எடுத்துக்கொள்கிறார்கள்​. இ​தனால்​ பின்னாளில் சருமத்திற்கும் உடலுக்கும் பிரச்னை​கள் ஏற்படும் வாய்ப்புள்ளது​ என்பதை யோசிப்பதே இல்லை​. எனவே, ​முடிந்தவரை இயற்கை முறையில்​ பின்விளைவுகளை ஏற்படுத்தாத வீட்டு அழகு சாதனப் பொருள்களை பயன்படுத்துவதே நல்லது. உடலைப் பேண​ உடற்பயிற்சி​/யோகா, உணவுக் கட்டுப்பாடு மற்றும் நிம்மதியான தூக்கம் ​இவைதான் முக்கியமான ரகசியங்கள். ​ திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பெண்கள் திருமணம் குறித்த தேவையில்லாத பதட்டத்தைத் தவிர்த்து இவற்றில் கவனம் செலுத்துவது நல்லது.​ தேவையற்ற டென்ஷனைத் தவிர்த்து, உடலையும் மனதையும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதே​ யாவருக்குமான​ சிறந்த ஒப்பனை​ எனலாம்​!​"​ என்பதே அனுபவம் வாய்ந்த மேக் அப் ஆர்ட்டிஸ்டான ஸ்ரீ சரத்தின் அறிவுரை.

​ஸ்ரீசரத் தற்போது திருமணம்​, பார்ட்டி​ போன்ற நிகழ்​ச்சிகளுக்கு ​மேக் அப் & ஹேர் ஸ்டைல் சேவை​யை வழங்கிவருகிறார். ​​திறமையும் ​​அனுபவ​மும் ஒருங்கே பெற்ற​ ஒப்பனை​க்​ கலைஞரான இவரின் சேவையைப் பெற்று நாம் செல்ல விரும்பும் நிகழ்ச்சிகளுக்குப் பிறர் வியந்துபோகும் வண்ணம் ஸ்டைலாகச் செல்லலாம்! விகடன் வாசகர்களுக்கு, ​ஸ்ரீ​சரத் பிரைடல் மேக் அப் 15% சிறப்பு சலுகை​யை​ வழங்குகிறது. ஒப்பனை குறித்த தகவல்களுக்கும், தள்ளுபடிக்கும் கீழேயுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்யவும்...​

விவரங்களைப் பெற

நீங்க எப்படி பீல் பண்றீங்க