மீண்டும் விலை ஏறியது பஜாஜ் டொமினார்

பஜாஜ் தனது டொமினார் பைக்கின் விலையை மீண்டும் ஒருமுறை அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் எல்லா மாடல்களுக்கும் விலையேற்றம் கண்டபோது ஒருமுறை, மே மாதம் ஒருமுறை என ஏற்கெனவே இரண்டு முறை விலை கூட்டப்பட்டிருந்தது.                          6 மாதங்களில் மூன்றாவது முறையாக, இப்போது விலையை அதிகரித்துள்ளது.

பஜாஜ் டொமினார்

டொமினார் 400 பைக்கின் பேஸ் வேரியன்ட் தற்போது ரூ.1,66,900 எனும் விலையிலும், ஏபிஎஸ் வேரியன்ட ரூ.1,82,289 எனும் சென்னை ஆன்ரோடு விலையிலும் விற்பனையாகிறது. டொமினாரின் பேஸ் வேரியன்ட ரூ.1,802-ம், ஏபிஎஸ் வேரியன்ட் ரூ.1,932 விலையும் அதிகரித்துள்ளது. 

இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் டொமினாரில் மூன்று புதிய நிறங்களையும், தங்க நிற அலாய் வீல்களையும் அப்டேட்டாகக் கொடுத்திருந்தது பஜாஜ். அப்போது, டொமினாரின் விலை மாற்றப்படாமல் அப்படியே இருந்தது. ஆனால், அதற்குப் பிறகு இதோடு மூன்றாவது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதம் டொமினார் பைக்குகளை வாங்குபவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு இலவச சர்வீஸ் மற்றும் 5 ஆண்டுகளுக்கு வாரன்டி வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் டொமினார் விற்பனைக்கு வரும்போது, ரூ.1,55,000 என்ற விலையில் வந்தது. இப்போது இதன் விலை ரூ.10,000 வரை அதிகரித்துள்ளது. டொமினாரின் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லையென்றாலும், விலையை மட்டும் அதிகரித்துக்கொண்டேபோகிறது பஜாஜ். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!