பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

 சூப்பர் ஸ்டாரின் போயஸ் தோட்டம் வீட்டுக்குப் பக்கத்திலேயே வீடு வாங்கிக் குடிபோயிருக்கிறது ஸ்போர்ட்ஸ் ஜோடி தினேஷ் கார்த்திக் - தீபிகா பலிக்கல். ட்ரிப்பிள் பெட்ரூம், நீச்சல்குளம், ஜிம் உள்ளிட்ட வசதிகள்கொண்ட இந்த அப்பார்ட்மென்ட்டைக் கிட்டத்தட்ட எட்டு கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்களாம் இந்த சாம்பியன்ஸ் தம்பதி. ஸ்டார்ஸ் தோட்டம்!

இன்பாக்ஸ்

 ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஆனால், படம் ரொம்ப நீ......ளமாக இருக்கிறதாம். அவ்வளவு எடுத்துத் தீர்த்திருக்கிறார்கள். இப்போது அத்தனை மேட்டர்களையும் என்ன செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இறங்கியிருக்கிறார் சிம்பு. யோகா, தியானம் எல்லாம் செய்து ஒருவழியாகப் படத்தை இரண்டு பகுதிகளாக வெளியிடலாம் என முடிவெடுத்திருக்கிறதாம் சிம்பு தரப்பு. ஆஹான்!

இன்பாக்ஸ்

‘வணக்கம் சென்னை’ படத்தை இயக்கிய கிருத்திகா, இரண்டாவது இன்னிங்ஸ் ஆட ரெடி. இந்த முறை தயாரிப்பாளர், கணவர் உதயநிதி ஸ்டாலின் அல்ல. விஜய் ஆண்டனி தயாரித்து நடிக்கிறார். படத்தின் பெயர் `காளி’. கெட்டப்பயலா சார் காளி?

ங்களுக்கு நீரிழிவுநோய் இருக்கிறதா? சர்க்கரை அளவை அறியும் பரிசோதனைக்கு ரத்தம் எல்லாம் தரத் தேவையில்லை. அடுத்த ஆண்டு ஆப்பிள் வாட்ச்சோ, மேக் லேப்டாப்போ வாங்கிக்கொள்ளலாம். இதற்காக ஆப்பிளின் சீக்ரெட் குழு `டயாபடிக் டெஸ்டிங் சென்ஸார்’ ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறது. தோலின் மீது ஒளியைப் பாய்ச்சி, அதன்மூலம் ரத்தத்தில் இருக்கும் குளூக்கோஸ் அளவை அறிய முடியுமாம். கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்த இந்தச் சோதனை, இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. கொஞ்சம் காஸ்ட்லி. ஆனால், ரத்தம் கொடுக்கத் தேவையில்லை என்பது ஆச்சர்யம்தானே. இன்னும் என்னவெல்லாம் இருக்கோ!

இன்பாக்ஸ்

15 மாதத் தடை முடிந்து, ஏப்ரல் மாத இறுதியில் மீண்டும் டென்னிஸ் களத்தில் இறங்குகிறார் மரியா ஷரபோவா. போர்ஷே கிராண்ட் ப்ரீதான், 15 மாதத் தடைக்குப் பிறகு மரியா ஷரபோவா களம் இறங்கும் முதல் பந்தயம். ரேங்கிலேயே இல்லாத மரிய ஷரபோவாவுக்கு வைல்டு கார்டு என்ட்ரி இல்லாமல், இந்தப் போட்டியில் நேரடியாகக் கலந்துகொள்ளும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது டென்னிஸ் அமைப்பு. இதனால் மற்ற டென்னிஸ் வீராங்கனைகள் எல்லாம் கடுப்பாகி ஸ்டேட்டஸ் போட, ‘நானே ஒப்புக்கொண்டு ஒரு தண்டனையை அனுபவிக்கிறேன். என்னை மேலும் தண்டிப்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா என மற்ற வீராங்கனைகள் தேடினால் நான் என்ன செய்வது?’ என வருத்தப்பட்டிருக்கிறார் ஷரபோவா. இன்னிங்ஸ்-2 இனிக்கட்டும்!

இன்பாக்ஸ்

ஜூலை மாதம் ஓய்வுபெறுகிறார் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. ஓய்வுக்குப் பிறகு, இளைஞர்களுக்கு உதவுவதற்காக ஓர் அமைப்பைத் தொடங்குகிறார் பிரணாப். ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நிதி உதவி செய்வதுதான் இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாம். ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படவிருக்கும் இந்த அமைப்புக்கான வேலைகளை, அவரது செயலாளர் ஒமிதா பால் என்கிற பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி செய்துவருகிறார். சிறப்பா செய்யுங்க!

புழல் சிறையில் தீவிர புத்தக வாசிப்பில் பிஸியாக இருக்கிறார் வைகோ. சிறைக்குள் போகும்போதே `என் வழக்குரைஞர்கள் தவிர வேறு யாரும் சிறைக்கு வந்து என்னைச் சந்திக்கக் கூடாது’ என கண்டிஷன் போட்ட வைகோ, வழக்குரைஞர்களிடம் ஒரு பெரிய புத்தக லிஸ்ட்டைக் கொடுத்திருக்கிறார். அவற்றுள் மல்யுத்த வீரர் தாராசிங் பற்றிய புத்தகம், வரலாற்று ஆய்வு நூலான ‘நீலம் மஞ்சள் சிவப்பு’, சிவாஜி கணேசன் பற்றிய ஆய்வு நூல் என வைகோ கொடுத்த லிஸ்ட்டின்படி புத்தகங்கள் சிறைக்குள் சென்றுவருகின்றன. கம்பிகளுக்குள் வெளிச்சம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு