நீங்கள் அலுவலகத்தில் இருந்து வரும்வரை வீட்டில் பிள்ளைகள் தனியாக இருக்கிறார்களா?

படிக்கும் நேரம் போக, பிள்ளைகள் எங்கேஜ்டாக இருக்கும்படி, கேம்ஸ், புதிர்கள் மாதிரியான விஷயங்களை வீட்டில் வாங்கி வையுங்கள். 

ள்ளி முடிந்து வந்த பிள்ளைகள், அம்மாவும் அப்பாவும் அலுவலகத்திலிருந்து திரும்பும் வரை, வீட்டில் தனியாக இருக்கலாமா? அப்படி இருந்தால், எந்த வயதிலிருந்து இருக்கலாம்? தனியாக இருக்கும் குழந்தைகளுக்கு என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளை கற்றுத்தர வேண்டும்? விரிவாகச் சொல்கிறார், உளவியல் நிபுணர் ஜெயந்தினி. 

பிள்ளைகள்

''10 அல்லது 12 வயது வரை அவர்கள் குழந்தைகள்தான். அதுவரை அவர்களால் தங்களைத் தனிமையில் பார்த்துக்கொள்ள முடியாது என்பதே உண்மை. எனவே, 12 வயது வரை பிள்ளைகளை தாத்தா, பாட்டி போன்ற நம்பகமானவர்களின் பாதுகாப்பிலோ, நல்ல டே கேரிலோ விடுவதுதான் நல்லது. அந்த வயதுக்குப் பிறகு என்றால் ஓகே. வீட்டில் தனியாகப் பிள்ளையை விடுபவர்கள், பிள்ளைகள் அப்படித் தனியாக இருக்க விரும்புகிறார்களா அல்லது பதற்றப்படுகிறார்களா என்பதை அவர்களிடம் பேசி தெரிந்துகொள்ளுங்கள். இந்த டாஸ்க்கில் உங்கள் பிள்ளை பாஸ் மார்க் என்றால், நாளொன்றுக்கு 2 அல்லது 3 மணி நேரம், தனிமையில் இருப்பதற்குப் எப்படித் தயார்படுத்தலாம் எனத் தெரிந்துகொள்வோம்'' எனப் பட்டியலிடுகிறார்.

ஜெயந்தினி - உளவியல் நிபுணர்   * சாவியைப் பத்திரமாக வைத்திருக்கவும், அதைப் பயன்படுத்தி கதவைத் திறக்கவும் சொல்லித்தர   வேண்டும். 

   * கதவைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்தவுடன், மறக்காமல் மறுபடியும் கதவை மூடி லாக் பண்ண   சொல்லித்தர வேண்டும். அதோடு, சாவியை வழக்கமாக ஒரே இடத்தில் வைக்கவும்   சொல்லிக்கொடுக்கவும். 

  * ஸ்கூல் பேகை வீட்டில் வைத்துவிட்டு நண்பர்களுடன் விளையாடப் போகிறார்கள் என்றால், கதவைக்   கட்டாயம் பூட்டிவிட்டுச் செல்ல வேண்டும் எனச் சொல்லிக்கொடுங்கள். 

  * ஃபிரிட்ஜில் இருக்கும் பழச்சாற்றை எடுத்தால், சிறிது நேரம் வெளியில் வைத்துவிட்டுக் குடிக்கப்   பழக்குங்கள். பால்தான் குடிப்பார்கள் என்றால், கேஸ் ஸ்டவ், மைக்ரோவேவ் அல்லது இன்டக்‌ஷன் ஸ்டவ்வில் எப்படிக் காய்ச்சுவது எனச் சொல்லிக்கொடுங்கள். கேஸ் ஸ்டவ் என்றால், சிலிண்டர் நாபை மறக்காமல் ஆஃப் பண்ண கற்றுக்கொடுங்கள். 

* விளையாடும்போது அல்லது பென்சில் சீவும்போது ஏதாவது காயம்பட்டால், பிளாஸ்டர் போட கற்றுக்கொடுப்பது நல்லது.

* அம்மா, அப்பாவின் மொபைல் நம்பர்களோடு, வீட்டுக்கு அருகில் இருக்கும் நண்பர் அல்லது சொந்தக்காரர் ஒருவரின் நம்பரையும் பிள்ளைகளை மனப்பாடம் செய்யச் சொல்லுங்கள். இரண்டு, மூன்று மொபைல் நம்பர்களை அவர்களால் மனப்பாடம் செய்ய முடியவில்லையா? பேப்பரில் எழுதி, ஃபிரிட்ஜ் அல்லது கதவில் ஒட்டிவிடுங்கள்.

* பிள்ளை தனியாக வீட்டில் இருக்கும் வேளையில் சொந்தக்காரர்களோ, வெளியாட்களோ வந்தால், கதவைத் திறக்காமல், ஜன்னல் வழியாகவே பதில் சொல்லி அனுப்ப பழக்குங்கள். சொந்தக்காரர்களிடம் இந்தத் தகவலைச் சொல்லி, இதற்காக வருத்தப்படாதீர்கள் என்பதையும் முன்கூட்டியே சொல்லிவிடுங்கள். 

* பிள்ளைக்கு ஏதாவது உடம்பு சரியில்லை என்றால். அப்படியே படுத்திருக்காமல் உங்களுக்கு போன் பண்ணி சொல்ல வேண்டும் எனச் சொல்லுங்கள். நீங்கள் அலுவலகத்திலிருந்து சீக்கிரம் கிளம்பிவர இது உதவியாக இருக்கும்.

சிறுவன்அடுத்து, தனியாக இருக்கும் பிள்ளைகளின் பாதுகாப்புக்குப் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

* பிள்ளைகளுக்கு அரை மணி நேரத்துக்கு ஒருமுறை போன் செய்து, எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

* மிகவும் நம்பகமான பக்கத்து வீட்டுக்காரர்கள் இருந்தால், பிள்ளை ஹோம்வொர்க் செய்கிறார்களா, என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிக்க சொல்லலாம். 

* டிவியில் சைல்டு லாக் பயன்படுத்தி இந்தந்த சேனல்களை, இவ்வளவு நேரம்தான் பார்க்க வேண்டும் என்பது மாதிரியான விஷயங்களைக் கடைப்பிடிக்க வையுங்கள். 

* படிக்கும் நேரம் போக, பிள்ளைகள் எங்கேஜ்டாக இருக்கும்படி, கேம்ஸ், புதிர்கள் மாதிரியான விஷயங்களை வீட்டில் வாங்கிவையுங்கள். 

* 3 மணி நேரம் மகள் எப்படி தனியாக இருப்பாள் என்று யோசிக்கிறவர்கள், வீட்டுக்கு அருகே பாதுகாப்பான இடத்தில் டியூஷன் சேர்த்துவிடலாம். 

* சிசிடிவி வசதி இருப்பவர்கள், அதை ஆஃபீஸில் இருந்தபடியே போன் மூலம் கண்காணிக்கலாம்.  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!