வெளியிடப்பட்ட நேரம்: 17:36 (12/07/2018)

கடைசி தொடர்பு:17:36 (12/07/2018)

Harrier.... டாடாவின் புதிய எஸ்யூவி-யின் பெயர் இதுதான்!

இந்த எஸ்யூவி-யின் ஸ்பை படங்கள், இணைய உலகில் வைரலாகப் பரவிவந்த நிலையில், தற்போது இதன் அதிகாரபூர்வமான பெயரை வெளியிட்டிருக்கிறது, டாடா மோட்டார்ஸ்.

Harrier

H5X.... கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் காட்சிப்படுத்தப்பட்ட பிரிமியம் எஸ்யூவி கான்செப்ட்தான் இது! LED ஹெட்லைட்ஸ் & டெயில் லைட்ஸ் மற்றும் Impact Design 2.0 பாணி டிசைனுடன் (Humanity Line மற்றும் Tri-Arrow Pattern), லேண்ட் ரோவரின் L550 ஃப்ளாட்பார்மில் தயாரிக்கப்போகும் இந்த எஸ்யூவி, அப்போது முதல் இப்போது வரை பலத்த அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது. டாடாவின் புனே தொழிற்சாலையில் உற்பத்திசெய்யப்பட உள்ள இந்த எஸ்யூவி-யின் ஸ்பை படங்கள், இணைய உலகில் வைரலாகப் பரவி வந்த நிலையில், தற்போது இதன் அதிகாரபூர்வமான பெயரை வெளியிட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ். ஐரோப்பிய கார்களைப் போன்ற கேபினைக் கொண்டுள்ள இந்த பிரிமியம் எஸ்யூவி-யின் 5 சீட்டர் மாடலுக்கு, Harrier எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதுவே 7 சீட்டர் மாடல், வேறு பெயரில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது.

Harrier

ஜப்பான், மலேசியா போன்ற உலக சந்தைகளில், இதே பெயரில் ஒரு மிட் சைஸ் எஸ்யூவி-யை, டொயோட்டா விற்பனை செய்துவருகிறது. ஆனால் அந்நிறுவனம் இந்தியாவில் அந்த எஸ்யூவி-யையும் விற்பனை செய்யவில்லை என்பதால், அந்தப் பெயரை பயன்படுத்திக்கொள்வதில் எந்த சிக்கலும் எழாது எனத் தெரிகிறது. தவிர, ஒரே காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தாலும், தனித்தனி பெயர்களில் புதிய எஸ்யூவி-களைக் களமிறக்கவே, எந்தவொரு கார் நிறுவனமும் விரும்பும். இந்நிலையில், தனது தயாரிப்புகளைப் போலவே தனது டீலர்ஷிப்களையும் பிரிமியமாக மாற்றும் நடவடிக்கைகளில் டாடா ஈடுபட்டுள்ளது. மேலும், மாடல்களின் எண்ணிக்கையைப் போல, டீலர்ஷிப்களின் எண்ணிக்கையையும் அந்நிறுவனம் உயர்த்த இருக்கிறது. ஜனவரி      2019-ல் அறிமுகமாக இருக்கும் 5 சீட்டர் Harrier எஸ்யூவி-யில், ஜீப் காம்பஸ் எஸ்யூவி-யில் இருக்கும் அதே 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் (140bhp) பொருத்தப்பட உள்ளது. 7 சீட்டர் மாடல், 170bhp பவருடன் வெளிவரும். 

Tata Premium SUV

நீங்க எப்படி பீல் பண்றீங்க