கத்தியும் கையுமாகவே திரிகிறார் ஸ்ருதிஹாசன். சுந்தர்.சி இயக்கும் ‘சங்கமித்ரா’ படத்தில் இளவரசியாக நடிக்கிறார் ஸ்ருதி. அதற்காகத்தான் 24/7 வாள்வீச்சு, கத்திச் சண்டைப் பயிற்சிகள் ஆனால், பயிற்சிகள் நடப்பது சென்னையில் அல்ல, லண்டனில். மருதநாயகி

வெற்றி மாறன் இயக்கிக்கொண்டிருக்கும் 'வடசென்னை'யில் அமலாபால் நடிக்க இருந்த வேடத்தில் இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ். ``ஆறு வருடங்களாக சினிமாத்துறையில் இருக்கும் எனக்கு
இது பெரிய ஜம்ப்'' என சிலாகிக்கிறார் இந்த காமுக்காப்பட்டி அன்புச்செல்வி! அவார்ட் கன்ஃபார்ம்

அம்மாவாகப்போகிறார் செரீனா வில்லியம்ஸ். 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற செரீனா வில்லியம்ஸ் ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஒப்பனில் சாம்பியன் பட்டம் வென்றதோடு வேறு டென்னிஸ் போட்டிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. முழங்காலில் காயம் என்று மட்டுமே சொல்லிவந்த செரினா கடந்தவாரம் சோஷியல் மீடியாவில் `20 வாரங்கள்...' என தாய்மை சுமையைப் படத்தோடு வெளியிட்டார். ரெடிட் சமூக வலைத்தள அதிபரான அலெக்ஸ் ஓஹனைனுடன் இணைந்து வாழ்ந்துவரும் செரீனா, ஆஸ்திரேலிய ஓப்பனில் சாம்பியன் பட்டம் வெல்லும்போதே கர்ப்ப மாகத்தான் இருந்திருக்கிறார். சூப்பர் சாம்ப்!

மாஸ்டர் பிளாஸ்டரின் பயோபிக் சச்சின்: `ஏ பில்லியன் டிரீம்’ அடுத்த மாதம் ரிலீஸ். இந்தப் படத்தில் சேர்ப்பதற்காக, சச்சின் விளையாடிய முக்கியமான மேட்ச்களிலிருந்து சில வீடியோக்களை இலவசமாகப் பயன் படுத்திக்கொள்ள பி.சி.சி.ஐயிடம் அனுமதி கோரியது படத் தயாரிப்பு நிறுவனம். ஆனால், நோ சொல்லிவிட்டது பி.சி.சி.ஐ. தோனி பயோபிக் வெளியானபோதும், இதே கோரிக்கை எழுந்தது. அப்போதும், பி.சி.சி.ஐ `நோ’ சொல்லிவிட்டது. நேர்மைன்னா பி.சி.சி.ஐதான்!

இத்தாலிய தோழிகளுடன் உணவு அருந்தும் ராகுல் காந்தியின் படங்கள்தான் சென்ற வாரத்தின் ஆன்லைன் வைரல். டெல்லியில் மகளிர் காங்கிரஸ் முக்கிய நிர்வாகியான பர்க்கா ஷுக்லா, ``ராகுல் காந்திக்கு பார்ட்டி பண்ண நேரம் இருக்கிறது. ஆனால், தொண்டர்களை சந்திக்க நேரம் இல்லை. ராகுல் காந்தி தொண்டர்களைக் கண்டாலே ஓடி ஒளிகிறார். அவர் துணைத்தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும்'' என வெடிக்க, பர்க்காவை கட்சியில் இருந்தே நீக்கிவிட்டது காங்கிரஸ் மேலிடம். ஓ...பார்ட்டி நல்ல பார்ட்டிதான்

``இந்தியாவில் மாநிலக் கட்சிகளே இருக்கக்கூடாது. அவற்றை அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக செயல்படுகிறது. இதை எதிர்க்க மாநிலக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்'' எனக் கொந்தளிக்கிறார் மம்தா பானர்ஜி. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட, ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கைச் சந்தித்திருக்கிறார் மம்தா. குடியரசுத் தலைவர் தேர்தலில் எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்துப் பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதுதான் மம்தா-நவீன் பட்நாயக் கூட்டணியின் கோரிக்கை! எதிர்ப்புக்கூட்டணி

சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் 100 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்திருக்கிறார் ரியல் மாட்ரிட் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 94 கோல்களுடன் மெஸ்ஸி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஒரே போட்டியில் தொடர்ந்து மூன்று கோல்கள் அடித்து இந்த இலக்கை எட்டினார் ரொனால்டோ. கோல் மெஷின்!