"நான்கு, ஐந்து முறை பாடல்களைக் கேட்பேன்.. நானாகவே டியூன் போட ஆரம்பிச்சிருவேன்..!" - சிறுமி அஷ்ரிதா | Child Ashritha talks about her passion for music

வெளியிடப்பட்ட நேரம்: 10:33 (16/07/2018)

கடைசி தொடர்பு:10:33 (16/07/2018)

"நான்கு, ஐந்து முறை பாடல்களைக் கேட்பேன்.. நானாகவே டியூன் போட ஆரம்பிச்சிருவேன்..!" - சிறுமி அஷ்ரிதா

சை..பாடல் மீது அனைவருக்குமே தீராக் காதல் இருக்கும். முறையான பயிற்சி இல்லாமல் பாடலுக்கு ஏற்றவாறு இசை அமைப்பது யாராலும் முடியாது என்ற கருத்தை மாற்றியிருக்கிறார், நான்காம் வகுப்பு மாணவியான அஷ்ரிதா. ஒரு பாடலை நான்கு அல்லது ஐந்து முறை கேட்டு, பாடலின் மெட்டை உன்னிப்பாக கவனிக்கிறார். பிறகு, தன்னுடைய கீபோர்டில் பிழையின்றி வாசிக்கிறார். அஷ்ரிதா கீபோர்டு வாசிக்கும் வீடியோவை அவரின் தந்தை வீடியோ எடுத்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அது, சமூக வலைதளத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

பாடல் இசையமைக்கும் அஷ்ரிதா

''எங்க சொந்த ஊர் மதுரை. வேலைக்காக கத்தார் வந்துட்டோம். 9 வருஷமா கத்தாரில்தான் இருக்கோம். எங்க செல்லப் பொண்ணு அஷ்ரிதா, நான்காம் வகுப்பு படிக்கிறாங்க. சின்ன வயசிலிருந்தே அர்ஷிதாவுக்கு  மியூசிக் மேல ஆர்வம். நானும் என் மனைவியும் கேட்கும் பாடலை அழகா பாடிக் காட்டுவா. அவளுக்கு கர்நாடக சங்கீதம் கத்துக்கொடுக்கலாம்னு கிளாஸில் சேர்த்தோம். அவளுடைய மியூசிக் டீச்சர் ஜெயஶ்ரீ, சொல்லிக்கொடுக்கிறதை உன்னிப்பா கேட்டுப்பாள். சரிகமப தாளம் அவ மனசுல அவ்வளவு ஆழமா பதிஞ்சிருக்கு. எந்தப் பாடலையும் ஸ்வரத்துடன் பாடுவாள். திடீர்னு ஒருநாள், 'என்னை கீபோர்டு கிளாஸ் சேர்த்துவிடுங்க'னு சொன்னாள். 'முதல்ல, ஒரு சம்மர் கிளாஸ் அனுப்புறேன். அங்கே ஒழுங்கா கத்துக்கிட்டா கீபோர்டு கிளாஸ்ல சேர்த்துவிடறேன்னு சொன்னேன்.

ஒரு மாசம் சம்மர் கிளாஸில் பேஸிக் விஷயங்களை சொல்லிக்கொடுத்தங்க. அந்த பேஸிக் நோட்ஸை நல்லா கவனிச்சுட்டு, கீபோர்டு வாங்கிக்கொடுக்க சொன்னாள். போன வருஷம் அவள் பிறந்தநாளுக்கு கீபோர்டு கிஃப்ட் பண்ணினேன். அவளுக்குத் தெரிஞ்ச நோட்ஸை வாசிச்சு காட்டினாள். இளையராஜா சாரின் கீ-நோட் கொடுத்து வாசிக்கச் சொன்னோம். அவளுக்கு வாசிக்கத் தெரியலை. சீக்கிரமே கீபோர்டு கிளாஸ் சேர்த்துவிடறேன்னு சொல்லியிருந்தேன். ஒருநாள் நானும் மனைவியும் பேசிட்டிருக்கும்போது திடீர்னு, 'கோ' படத்தின் 'என்னமோ ஏதோ' பாடலை வாசிச்சு காண்பிச்சா. எங்களுக்குப் பயங்கர ஷாக்கிங் சந்தோஷம். அப்பவும், ஏதோ வாசிக்க அந்தப் பாட்டு வந்துருச்சுன்னுதான் நினைச்சோம்'' என மகிழ்ச்சியுடன் சொல்ல, மனைவி ஶ்ரீதேவி தொடர்ந்தார்.

அஷ்ரிதா

''அவளுக்கு ஞாபகசக்தி அதிகம். ஒரு தடவை டியூன் போட்டால் மறக்கவே மாட்டாள். அந்தப் பாட்டின் ஸ்வரத்தை வெச்சு நோட் போடுவாள். ஒரு பாட்டு பாடினதும் தொடர்ந்து ஒரு சில பாட்டுகளை வாசிக்கச் சொன்னோம். நான்கு, ஐந்து முறை அந்தப் பாட்டை கேட்டுப்பாள். ஒருமுறை பிளே பண்ணி பார்த்துப்பாள். அடுத்த முறை வாசிச்சிருவா. இதில் கூடுதல் பிளஸ், கீபோர்டில் வாசிக்கும்போது, பிஜிஎம்முடன் வாசிப்பாள். எங்க ஃப்ரண்ட்ஸிடம் இதைச் சொன்னப்போ அவங்க நம்பவே இல்லை. அவள் வாசிக்கிறதை வீடியோ எடுத்து ஃபேஸ்புக்ல அப்லோடு பண்ணினோம். சூப்பர் ரெஸ்பான்ஸ். நம் தேசியகீதத்தை வாசிச்சதுக்கு வரவேற்பு கிடைச்சது. சமீபத்தில், 'விஸ்வரூபம்' பாடல் வாசிச்சதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். அர்ஷிதாவின் ஸ்கூலில் நடந்த போட்டியில், 'என் காதலே..என் காதலே' பாட்டை வாசிச்சு மூன்றாவது பரிசு வாங்கினாள். அது இன்டர்நேஷனல் ஸ்கூல். அங்கே தமிழ் பாடல் பரிசு பெற்றதே பெரிய அங்கீகாரமா நினைக்கிறோம். அவங்களே ஒரு ஆங்கிலப் பாட்டை எழுதி வாசிச்சிருக்காங்க'' என்றார் பெருமிதத்துடன்.

 

 

'அக்காகிட்ட நான் பேசுறேன்'' என்றபடி போனை வாங்கி பேசுகிறார் அர்ஷிதா. ''எனக்கு மியூசிக் வாசிக்குறதுன்னா ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அம்மாவும் அப்பாவும் நிறைய பாடல்களை வாசிக்கச் சொல்லி அசைன்ட்மென்ட்ஸ் கொடுப்பாங்க. பாட்டின் ஸ்வரம் மனசுல பதியுற வரை மறுபடியும் மறுபடியும் கேட்பேன். எந்த நோட் வாசிச்சா எந்த சவுண்ட் வரும்னு தெரியும். ஒருதடவை அந்தப் பாட்டை சரியா பிளே பண்ணிட்டேன்னா, அதை என் கீ-நோட் மறக்கவே மறக்காது. நானாகவே கீபோர்டு வாசிக்கிறேன்னு சொன்னா, யாருமே நம்பமாட்டேங்கிறங்க. எனக்கு இளையராஜா சாரின் பாடல்கள் ரொம்ப பிடிக்கும். இன்னும் நல்லா பிராக்டீஸ் பண்ணி நிறைய பாடல்களை வாசிப்பேன்'' என மழலை குரலில் மகிழ்வைப் பகிர்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்