வெளியிடப்பட்ட நேரம்: 14:23 (16/07/2018)

கடைசி தொடர்பு:14:23 (16/07/2018)

மேம்படுத்தப்பட்ட Assurance TripleMax 2 டயர்களை அறிமுகப்படுத்தியது Goodyear!

மேம்படுத்தப்பட்ட Assurance TripleMax 2 டயர்களை அறிமுகப்படுத்தியது Goodyear!

Goodyear

அமெரிக்காவைச் சேர்ந்த Goodyear நிறுவனம், உலக அளவில் 120 ஆண்டுகளாக டயர் உற்பத்தியில் ஈடுபட்டுவருகிறது. மேலும், கடந்த 95 ஆண்டுகளாக இந்தியாவில் டயர்களைத் தயாரித்து (Ballabgarh, Aurangabad) விற்பனைசெய்துவரும் இந்நிறுவனம், நமது நாட்டில் டியூப்லெஸ் ரேடியல் டயர்களை முதன்முறையாக அறிமுகப்படுத்திய பெருமைக்குச் சொந்தக்காரர்கள். தவிர, நிலாவில் முதன்முதலில் கால்பதித்தது நீல் ஆம்ஸ்ட்ராங் என்றால், அங்கே முதன்முறையாக டயர்பதித்தது Goodyear நிறுவனம்தான்; ஃபோர்டு மாடல் T-ல் இருந்ததும் இந்நிறுவன டயர்கள்தான்! Assurance TripleMax... 2015-ம் ஆண்டில் அறிமுகமான இந்த Mid Passenger வகை டயரின் அடுத்த தலைமுறை மாடலை, சமீபத்தில் குட்இயர் டெல்லியில் அறிமுகப்படுத்தியது. 

 

Goodyear


போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, 5.6 மீட்டர் குறைவான Braking Distance, சிறப்பான ரோடு கிரிப் மற்றும் ஹேண்லிங், நீடித்த நம்பகத்தன்மை மற்றும் சொகுசு ஆகியவற்றை மனதில்வைத்து, இந்த டயர்களை வடிவமைத்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. குட்இயரின் பிரத்யேகமான HydroTred தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதால், ஈரமான சாலைகளிலும் இதன் செயல்திறன் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். தவிர, டயர் சத்தத்தையும் குறைக்குபடி இதன் டிசைன் இருக்கிறது. 10 சைஸ்களில் (14,15,16 இன்ச்) - 4,000 முதல் 7,000 ரூபாயில் களமிறங்கியிருக்கும் இந்த டயர்கள், இந்த மாதத்துக்குள்ளாக சந்தையில் கால்பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாசஞ்சர் மற்றும் விவசாயம் சார்ந்த டயர்களைத் தொடர்ந்து, கமர்ஷியல் மற்றும் எலெக்ட்ரிக் வாகனப் பிரிவில் புதிய டயர்களைக் கொண்டுவருவதற்கான சாத்தியங்களை ஆராய்ந்துகொண்டிருப்பதாக, குட்இயர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் வர்த்தகப் பிரிவின் துணைத் தலைவர் பி.கே. வாலியா தெரிவித்துள்ளார். 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க