வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (16/07/2018)

கடைசி தொடர்பு:16:00 (16/07/2018)

`ஸ்ட்ரீட் ராலி'- யமாஹா ரே- ZR ஸ்கூட்டரின் புது எடிஷன்

யமஹா தனது ரே- ZR ஸ்கூட்டரில் `ஸ்ட்ரீட் ராலி' எனும் புதிய எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு, யமஹாவின் புதிய ஸ்கூட்டர் மற்றும் பைக்குகள் எதுவும் வெளியிடத் தயாராக இல்லாத நிலையில், தனது பழைய ஸ்கூட்டர்களின் தோற்றத்தை மாற்றிப் பல ஸ்பெஷல் எடிஷன்களையும், புதிய நிறங்களையும் அறிமுகப்படுத்திவருகிறது.

யமஹா ரே

ஸ்ட்ரீட் ராலி எடிஷன் யமஹாவின் புதிய  R15 V3.0 பைக்கின் நிறங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முன்பு  FZ பைக்கின் நிறங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது ரே- ZR. யமஹாவின் சூப்பர் பைக்கான எம்டி 09 பைக்கில் இருப்பது போன்ற wing style ஃபேரிங்குகளை ஹெட்லைட் ஆப்ரானில் வைத்துள்ளார்கள். இது ஸ்கூட்டரை ஸ்போர்ட்டியாக காட்டுவது மட்டுமில்லாமல் ஸ்கூட்டரின் வின்ட் பிளாஸ்ட்டை குறைக்கிறது. ஹேண்டல்பாரில் Knuckle guard பொருத்தியுள்ளார்கள். இது கைகளுக்கு வரும் விண்ட் பிளாஸ்டை குறைக்கிறது. மேலும், முன்பைவிட டெயில் பகுதியை இன்னும் உயர்த்தியுள்ளார்கள். ஸ்போர்ட்டியான மிரர்களும், கூடவே ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலும் வந்துவிட்டது. இதெல்லாம் ஸ்கூட்டரை மேலும் ஸ்போர்ட்டியாகவும், ஸ்டைலாகவும் காண்பிக்கிறது. குறைந்த வேகங்களில் இன்ஜின் பவர் தாராளமாகக் கிடைக்க இன்ஜினில் ரோலர் ராக்கர் ஆர்ம் மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் பவர் வீணாவதைக் குறைக்க முடியும் என்று யமஹா நிறுவனத்தினர் கூறுகிறார்கள்.

யமஹா ray ZR

இன்ஜினில் வேறு எந்த மாற்றமும் இல்லை. அதே 7.2 bhp பவர் மற்றும் 8.1 Nm டார்க்தான் இந்த ஸ்கூட்டரிலும் கிடைக்கிறது.