வெளியிடப்பட்ட நேரம்: 09:01 (19/07/2018)

கடைசி தொடர்பு:09:01 (19/07/2018)

”ஏலியன் நம்பியார், வேற்றுகிரகத்தில் எம்.ஜி.ஆர்!” - இந்தியாவின் முதல் ஸ்பேஸ் சினிமா இதுதான்

வேற்று மண்டலத்தின் தளபதியான நம்பியாரும் அவருடைய துணைவீரரும் பறக்கும் தட்டைவிட்டு வெளியே வருகிறார்கள். இரும்பினாலான உடைகள், துணைவீரனின்

”ஏலியன் நம்பியார், வேற்றுகிரகத்தில் எம்.ஜி.ஆர்!” - இந்தியாவின் முதல் ஸ்பேஸ் சினிமா இதுதான்

"தளபதி! இப்போது நாம் எந்த மண்டலத்திற்குச் செல்கிறோம்?"

"பூ மண்டலத்திற்கு (பால்வீதி மண்டலம்)... நம் மண்டலத்தில் விஞ்ஞானம் வளர்ந்த அளவுக்கு கலைகள் வளரவில்லை. அதனால் இந்த மண்டலத்திலிருக்கும் பூவுலகம் சென்று அங்கிருப்பதிலேயே சிறந்த கலையாகத் தேர்வுசெய்து அதில் தேர்ந்தவரை நம் மண்டலத்திற்கு அழைத்துச் செல்வோம்."

"பூவுலகம் செல்ல இன்னும் எவ்வளவு நேரமாகும்."

"சனி கிரகத்தை நெருங்கிவிட்டோம், அதைத் தாண்டினால் வெகு அருகில் தான் உள்ளது பூவுலகம். ஜாக்கிரதை, விஷ வாயுக்கள் நிறைந்த கிரகத்தைக் (வியாழன் கிரகத்தைக் குறிப்பிடுகிறார்கள்) கடந்து செல்லப்போகிறோம்."

(துணை வந்த வீரன் முகமூடியை அணிந்துகொள்கிறான்)

எம்.ஜி.ஆர் ஸ்பேஸ் சினிமா

பூமியின் வளிமண்டலத்தை அடைந்த அவர்களின் பறக்கும் தட்டு ஒவ்வோர் இடமாகச் சென்று அங்கிருக்கும் கலைகளை அவர்களின் பறக்கும் தட்டிலிருந்தபடியே அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலமாகத் திரையில் கவனிக்கிறார்கள். இறுதியாகத் தமிழகத்தின் ஒரு பகுதியில் பாடிக் கொண்டிருந்த பானுமதியின் பாடலில் மயங்கி அவரே அவர்களது மண்டலத்தில் இசையை வளர்க்கச் சரியானவரென்று முடிவுசெய்கிறார்கள். யாரும் பார்க்காத இடமாகத் தேர்ந்தெடுத்து பானுமதியைக் கடத்திச் செல்வதற்காகத் தரையிறக்குகிறார்கள்.
வேற்று மண்டலத்தின் தளபதியான நம்பியாரும் அவருடைய துணைவீரரும் பறக்கும் தட்டைவிட்டு வெளியே வருகிறார்கள். இரும்பினாலான உடைகள், துணைவீரனின் உடல் முழுவதும் வயர்கள்.

அது ஓர் இரவுநேரம். எம்.ஜி.ஆர் பானுமதியோடு டூயட் பாடிக் கொண்டிறார். பாடல் முடிந்து பானுமதி வீட்டிற்குக் கிளம்புகிறார். வழியனுப்பிவிட்டு எம்.ஜி.ஆர் திரும்பியவுடன் மறைந்திருந்த நம்பியார் பானுமதியைப் பிடித்து மயக்க மருந்து கொடுத்துப் பறக்கும் தட்டில் கடத்திச் செல்கிறார். உடன்வந்த துணைவீரனை பூவுலகிலேயே கண்காணிப்பிற்கு இருக்கவைத்துவிட்டுச் செல்கிறார் தளபதியான நம்பியார். பானுமதியைத் தேடித் திரியும் எம்.ஜி.ஆர் ஒரு வேற்று மண்டலவாசி இயந்திரங்களை வைத்துக்கொண்டு அவனது தளபதியிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிடுகிறார்.

"தளபதி தட்பவெப்பநிலையை என்னால் தாங்க முடியவில்லை விரைவில் வந்து அழைத்துச் செல்லுங்கள். இங்குள்ள..."
பேசிக்கொண்டிருக்கும் போதே அவனைத் தாக்கிய எம்.ஜி.ஆர் அவனைக் கொன்றுவிட்டு பறக்கும் தட்டு வருவதைக் கண்டு ஒளிந்துகொள்கிறார். பூவுலகிற்குத்  திரும்பிய நம்பியார், துணைவீரன் இறந்துகிடப்பதைக் கண்டு உடலைப் பறக்கும் தட்டில் போட்டுவிட்டு இயந்திரங்களை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். உடலை வெளியே இழுத்துப் போட்டு அந்த இடத்தில் எம்.ஜி.ஆர் அமர்ந்து தனது காதலியான பானுமதியைக் காப்பாற்ற வேறு மண்டலத்திற்குச் செல்கிறார். அங்கு செல்லும் எம்.ஜி.ஆர் தன்னைப் போலவே அங்கொரு ஏலியன் இருப்பதைக் கண்டு அவரது உதவியால் அங்கு தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறார். அங்குள்ள தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு தன்னைச் சரிபடுத்திக் காப்பாற்றிக் கொண்ட எம்.ஜி.ஆர் பானுமதியைக் கண்டுபிடித்தாரா! மீட்டுக் கொண்டுவந்தாரா! என்பதுதான் கதை.

எதனுடைய கதை? 1963-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் பானுமதி ஜோடியாக நடித்து, ஏ.காசிலிங்கம் இயக்கி வெளிவந்த "கலை அரசி" என்ற இந்தத் திரைப்படத்தின் கதை. தமிழின் முதல் விண்வெளித் திரைப்படம். பல்வேறு ஹாலிவுட் விண்வெளித் திரைப்படங்களில் ரெஃபெரன்ஸ் எடுக்கிறார்கள். அப்போது எந்த ரெஃபெரன்ஸும் இல்லாமல், அக்காலத்திய தமிழ் சினிமாவிற்கே உரிய பானியில் ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படத்தை வழங்கியுள்ளார் இயக்குனர் ஏ.காசிலிங்கம். இப்போது இந்தியாவின் முதல் விண்வெளித் திரைப்படமாக மார்தட்டிக் கொண்டிருக்கும் டிக் டிக் டிக் படக்குழுவினர் இந்தியாவிலேயே முதலாவதாக வெளிவந்த கலை அரசியை மறந்துவிட்டனரோ என்னவோ. இந்தியாவின் இரண்டாவது  விண்வெளித் திரைப்படம் 1967-ம் ஆண்டு வெளிவந்த "சந்த் பார் சடாயீ (Chan Par Chadayee)" என்பது குறிப்பிடத்தக்கது.

வேற்று மண்டலத்தின் புவியீர்ப்பு விசையைத் தாக்குப்பிடிக்க முடியாத எம்.ஜி.ஆர் அங்கு நடக்க முடியாமல் நடப்பதெல்லாம் குபீர் ரகம். இருந்தாலும் பறக்கும் தட்டு, அங்குள்ள மக்கள் சாப்பாட்டிற்குப் பதிலாக மாத்திரைகளை எடுத்துக் கொள்வது, எலான் மஸ்க்கின் (Elon Musk) ஃப்ளேம் த்ரோவரை (Flame Thrower) வேற்றுக் கிரகவாசிகளின் ஆயுதங்களாகக் காட்டியது என்றெல்லாம் அந்தக் காலத்திலேயே வருங்கால விஞ்ஞான வளர்ச்சியைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

பறக்கும் தட்டு

ஒவ்வொரு மண்டலமாக அவர்கள் கடந்து பறந்துவருவது பால்வீதி மண்டலத்தை அடைவது என்று அப்போதே விண்வெளி கிராஃபிக்ஸ் காட்டியுள்ளனர். எம்.ஜி.ஆர் அந்த மண்டலத்தின் இளவரசியைக் காதலிப்பதுபோல் நடித்துப் பறக்கும் தட்டை இயக்குவது, அதில் வானில் பறப்பது என்று தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடையாத காலத்திலேயே கிராஃபிக்ஸ் காட்ட முயன்றுள்ளனர். 

 


டிரெண்டிங் @ விகடன்