லைட் கலர்ஸ்..டார்க் கலர்ஸ் வீட்டுக்கு ஏற்ற வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?! #Interior

லைட் கலர்ஸ்..டார்க் கலர்ஸ் வீட்டுக்கு ஏற்ற வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?! #Interior

கலர்ஸ் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். நம் ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவுகளில் ஒன்று, சொந்த வீடு. பார்த்துப் பார்த்து கட்டப்படும் வீட்டுக்கு ஆடையாக அழகூட்டுவது சுவரின் வண்ணங்கள். குறைந்த பட்ஜெட்டாகவும் இருக்க வேண்டும்; கல்யாண ஆடையைப் போலவும் ஜொலிக்க வேண்டும். அப்படி, எளிமையாக வீட்டுக்குத் தகுந்த வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி எனச் சொல்கிறார், கட்டடக்கலை வல்லுநர், பாலமுருகன்.

இன்டீரியரைப் பொறுத்தவரை, நிறம் மிகவும் முக்கியமானது. அது, சைக்காலஜியுடன் தொடர்புகொண்டது. ஒவ்வொருவரும் அவர்களுக்குப் பிடித்த வண்ணங்களைத் தேர்ந்தெடுத்தாலும், அதற்கும் சில வரைமுறைகள் உண்டு. அவற்றை எப்படித் தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்துப் பார்ப்போம்.

வரவேற்பறை :

பெரும்பாலானோர், கூல் வண்ணங்களையே விரும்புவார்கள். லைட் கிரீன், லைட் பிங்க், லைட் ப்ளூ போன்ற லைட் கலர்ஸ் அனைத்தும் கூல் கலர்ஸ். பணி முடிந்து களைப்புடன் வீட்டுக்கு வரும்போது, இந்த மாதிரியான வண்ணங்கள் கண்களுக்கு மட்டுமன்றி, மனதுக்கும் அமைதியைக் கொடுக்கும்.

மஞ்சள் போன்ற வண்ணங்கள் சிறிது நாள்களிலேயே முகம் சுளிக்க வைத்துவிடும். எனவே, இந்த மாதிரியான கலர்ஸ்களை பெரும்பாலானவர்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். 

லைட் கலர்ஸ் நம் அறையை வெளிச்சமாக எடுத்துக் காட்டும். டார்க் கலர்ஸ் வீட்டை டல்லாக காட்டும். ஆகவே, பெரும்பாலானோர்  லைட் கலர்ஸையே தேர்ந்தெடுப்பார்கள். லைட் கலர்ஸில் வரவேற்பு அறை இருக்கின்றது எனில், அதில் சிறிய பல்ப் போட்டாலும் வீடு பிரகாசமாகக் காட்சியளிக்கும். 

வீட்டின் முகப்பை வண்ணமயமாகக் காட்ட வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு டார்க் கலர்ஸ் ஸூட்டாகும். 

இன்டீரியர் டிசைன்

பெட் ரூம் டிசைன்ஸ் :

ஒரே இடத்தில் இரண்டு, மூன்று பெயின்ட்களை அடிப்பது இப்போதைய டிரெண்டு. பெட்ரூமின் மற்ற இடங்களில் லைட் கலர் அடித்துவிட்டு, தலைப்பகுதியில் பிரைட் கலர் அடிப்பார்கள். பிரைட் கலர்ஸ், பாசிட்டிவ் உணர்வைக் கொடுக்கும். இன்னும் சிலர், பட்டாம்பூச்சி பறப்பது, பூக்கள் எனக் கற்பனைகளால் உயிரூட்ட விரும்புவார்கள். சில பெயின்ட்களில் இந்த மாதிரியான டிசைன்கள் கலந்தே இருக்கும். அதைப் பயன்படுத்தலாம். இல்லையெனில், நேரடியாகவும் டிசைன் செய்யலாம்.

லைட் கலர்ஸ் அடித்துவிட்டு அதன் மீது பிரைட்டான புகைப்படங்களையோ, அலங்கார டிசைன்களையோ வைக்கும்போது ஆழ்ந்த உறக்கத்துக்குத் தேவையான ஓர் அமைதியை உணர முடியும்.

interior

குழந்தைகள் அறை :

3D வண்ணங்களை பெரும்பாலும் குழந்தைகள் அறைக்குப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்குப் பிடித்த பொம்மைகளை சுவரில் தத்ரூபமாக 3D மூலம் வரையலாம். இதனால் சுவரில் கிறுக்கும் பழக்கமிருக்கும் குழந்தைகள் சுவரை நண்பர்களாக நேசிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

பிரைட் கலர்ஸை குழந்தைகள் அறையில் அடிப்பது சிறந்தது. பிரைட் கலர்ஸ் அவர்களுக்குள் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். 

கிச்சன் அறை :

கிச்சனைப் பொறுத்த வரை டார்க் கலர்ஸ் ஏற்றது. ஏனெனில், லைட் கலர்ஸ் பயன்படுத்தும்போது சமையல் புகை வெளிப்படையாகத் தெரியும். பிரைட் கலர்ஸாக இருப்பின் இந்தப் பிரச்னைகள் ஏற்படாது.

கிச்சன்

போர் அடிக்கும் வண்ணங்கள் : 

கூல் கலர்ஸைப் பொறுத்தவரை, எவர்லாஸ்டிங் கலர். சீக்கிரம் போர் அடிக்காது. பிஸ்கட் கலர், லைட் ப்ளூ கலர் போன்றவை எத்தனை வருடங்கள் கடந்தாலும் பார்த்துக்கொண்டே இருக்க தோன்றும். அதே மாதிரி அடிக்கடி கலர் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் சிவப்பு, ஆரஞ்சு போன்ற கலர்கள் சீக்கிரமே போர் அடித்துவிடும். தொடர்ந்து பார்க்க முடியாது. ஒருவேளை, வருடம் ஒரு முறை வண்ணங்களை மாற்றி அடிக்க முடியும் என்பவர்கள் தாராளமாக பிரைட் கலர்ஸைத் தேர்ந்தெடுக்கலாம்.

வால்பேப்பர் டிசைன்ஸ் :

சுவரில் வால்பேப்பர் ஒட்டும் டிரெண்டு பழசு என்றாலும் இப்போதும் இதை பலர் தேர்ந்தெடுக்கின்றனர். சுவரில் வால்பேப்பர் ஒட்டும்போது அது சிறிதளவு டேமேஜ் ஆனாலும், முழுவதாக மாற்ற வேண்டியிருக்கும். வண்ணமடிக்கும்போது முழுவதுமாக வால்பேப்பரை ரிமூவ் செய்துவிட்டு வண்ணம் அடிக்க வேண்டியிருக்கும்.

wallpaper

தற்போது, வால்பேப்பர் ஒட்ட விரும்புபவர்களுக்காகவே பெயின்ட்களில் வால்பேப்பர் டிசைன்களும் வருகின்றன. அதைப் பயன்படுத்தலாம். இல்லையெனில் வீட்டில் சாதாரணமாக அடித்திருக்கும் வண்ணங்களின் மேலே வால்பேப்பர் டிசைன் ஸ்டிக்கர்களையும் ஒட்டிக் கொள்ளலாம்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!