68,000 ரூபாயில் அறிமுகம்: 2018 சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்! #SUZUKIBurgman

ஆக்ஸஸைவிட 9,000 ரூபாய் (டெல்லி எக்ஸ்-ஷோரூம்) அதிகமாக, இந்த ஸ்கூட்டரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது அதிகமே!

 

சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், தான் காட்சிப்படுத்திய பிரிமியம் 125சிசி ஸ்கூட்டரான பர்க்மேன் ஸ்ட்ரீட்டை, 68,000 ரூபாய்க்குக் (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை) களமிறக்கியுள்ளது சுஸூகி. உலகச் சந்தைகளில் பல்வேறு இன்ஜின் திறன்களில் (125சிசி, 200சிசி, 250சிசி, 400சிசி, 600சிசி) விற்பனை செய்யப்படும் பர்க்மேன் ஸ்ட்ரீட், இந்தியாவில் கைனடிக் ப்ளேஸ் ஸ்கூட்டருக்கு அடுத்தபடியாக வெளிவந்துள்ள மேக்ஸி ஸ்கூட்டராகப் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. 5,000 ரூபாய் செலுத்தி, சுஸூகி டீலர்களில் 3 கலர்களில் (வெள்ளை, கறுப்பு, கிரே) கிடைக்கும் இந்த ஸ்கூட்டரை புக் செய்யலாம்.

 

சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்

அந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக, பெரிய விண்ட் ஸ்க்ரீன்  - க்ரோம் வேலைப்பாடுகளுடன் கூடிய முன்பக்க Apron - ஸ்டைலான LED ஹெட்லைட் & நீளமான ஆனால் சொகுசான சீட்டின் டிசைன் அமைந்திருக்கின்றன. LED டெயில் லைட் என்பது போனஸ்; ஹெட்லைட்டுக்கு அருகே இண்டிகேட்டர்கள் அழகாக ப்ளேஸ் செய்யப்பட்டிருக்கின்றன. ஜிக்ஸரில் இருப்பதுபோன்ற டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் ரியர் வியூ மிரர்கள், இந்த ஸ்கூட்டரில் உள்ளன. பலவித அம்சங்களுடன் கூடிய கீ-ஸ்லாட், சீட்டுக்கு அடியே 21.5 ஸ்டோரேஜ் ஸ்பேஸ், பைகளை மாட்ட 2 Hook, USB சார்ஜிங் பாயின்ட், பாட்டில் ஹோல்டர் எனப் போதுமான வசதிகளும் இருக்கின்றன. ஆனால் 5.6 லிட்டர் பெட்ரோல் டேங்க்கின் மூடி, இன்னமும் சீட்டுக்கு அடியே இருப்பது நெருடல். ஆனால் CBS & Side Step ஸ்டாண்டர்டாக அளிக்கப்பட்டுள்ளது. க்யூட்டான எக்ஸாஸ்ட்டில் உள்ள சில்வர் வேலைப்பாடு அழகு. அதற்கு அலாய் புட் பெக்ஸும் நல்ல மேட்ச்.

 

 பர்க்மேன் ஸ்ட்ரீட்


ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரில் இருக்கும் அதே 124.3 சிசி, சிங்கிள் சிலிண்டர், SEP இன்ஜின்தான், பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரிலும் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, இது வெளிப்படுத்தும் 8.7bhp பவர் மற்றும் 1.02kgm டார்க்கிலும் மாற்றமில்லை; அதேபோல, முன்பக்க டெலிஸ்கோபிக் ஃபோர்க் - CBS டிஸ்க் பிரேக் - 12 இன்ச் வீவில் 90/90 டியூப்லெஸ் டயர் மற்றும் பின்பக்க மோனோஷாக் - CBS டிரம் பிரேக் - 10 இன்ச் வீலில் 90/100 டியூப்லெஸ் டயர் என மெக்கானிக்கல் செட்-அப், அப்படியே ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரில் இருப்பதுதான். ஆனால், அந்த ஸ்கூட்டரைவிட 7 கிலோ கூடுதல் எடையைக் கொண்டிருக்கிறது பர்க்மேன் ஸ்ட்ரீட் (108 கிலோ). இது பர்ஃபாமென்ஸில் என்ன பாதிப்பைத் தரும் என்பதற்கு, சில காலம் காத்திருக்க வேண்டும். மேலும் ஆக்ஸஸைவிட 9,000 ரூபாய் (டெல்லி எக்ஸ்-ஷோரூம்) அதிகமாக, இந்த ஸ்கூட்டரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது அதிகமே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!