டாக்டராகும் ஆசை நீட் தேர்வுக்குப் பின் நீர்த்துப் போகுமா? - Exclusive Deal

நீட் தேர்வு முடிவல்ல, இதோ சில வழிகள் மருத்துவராக...

நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பெற்ற பின்னரும், மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது? ​எனும் கேள்வி​ நம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனதில்​ எழுகிறது. மருத்துவக் கல்வி பெற விரும்பும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் கடந்த 15 ஆண்டுகளாக அறிவுரையும் பரிந்துரையும் வழங்கி வரும் சென்னை லிம்ரா நிறுவனத்தின் இயக்குநர் திரு முகமது கனி ​இதற்கு விடை தருகிறார்.

​நீட் தேர்வில் ​தகுதி மதிப்பெண் பெற்ற பின்னரும் இடம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவராகும் எண்ணத்தைக் கைவிட வேண்டியதில்லை. நல்ல மதிப்பெண் எடுத்தும் போட்டியின் காரணமாக​வே ​இங்கு இடம் கிடைக்​காமல் போகிறது. எனவே, மருத்துவராக வேண்டும் என்பது உங்கள் இலட்சியம் மற்றும் விருப்பம் ​என்றால் அடுத்த வழி என்ன என்பது குறித்து யோசியுங்கள். இங்குள்ள தனியார் கல்லூரியில் செலவாகும் பணத்தைவிட மிகக் குறைவான செலவில், இப்போது வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. 

நீட் தேர்வில் தடுமாறும் மாணவர்களுக்கும்​, அவர்களின்​ பெற்றோர்களுக்கும் அனைத்து வழிகளையும் எடுத்துக் கூறி, வெளிநாட்டில் உள்ள நல்ல மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்றுத் தரும் சேவையை எங்கள் நிறுவனமான லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் கடந்த 15 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்​கிவரும்​உலகப்புகழ் பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்றுத் த​ருகிறோம். படிக்கும்போது தேவையான உதவிகளை வழங்க அந்த நாட்டிலேயே மாணவர்களுக்​காக​ ​சேவை​ அலுவலகம் ஒன்றை​யும்​ இயக்கி​வருகிறோம். மாணவர்கள் டாக்டர் படிப்பு முடித்த பின்னர், இந்தியாவில் அவர்கள் பிராக்டிஸ் செய்திடவும் தேவையான அனைத்து உதவிகளையும் லிம்ரா நிறுவனம் வழங்குகிறது. 

பிலிப்பைன்ஸ் நாட்டு மருத்துவக் கல்லூரிகள்:

அமெரிக்க முறையிலான மருத்துவக் கல்வி, பிலிப்பைன்ஸ் நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் ஆங்கில வழியில் நடத்தப்படுகிறது. ​71 ஆண்டாக இயங்கி வரும் சவுத் வெஸ்டர்ன் மருத்துவ பல்கலை, 48 ஆண்டு லைசியம் பல்கலை மற்றும் 41 ஆண்டு அனுபவம் உள்ள தவோ மருத்துவப் பல்கலைக்கழகங்களில், மாணவர் விரும்பும் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுக் கொடுத்து லிம்ரா அனைத்து உதவிகளையும் செய்கிறது. 

பெண்கள் பாதுகாப்பு:

மூன்று கல்லூரிகளிலும் பெண்களுக்கு எனத் தனி விடுதி உண்டு. இவை தவிர, எங்கள் நிறுவனம் இதே பாதுகாப்பு வசதிகளுடன், குளிரூட்டப்பட்ட அறைகளுடன், விடுதியை நடத்தி வருகிறது. தென் இந்திய உணவும் வழங்கப்படுகிறது. 

அட்மிஷன்:

+2 பாடத்தில், உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் 50% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். நீட் தேர்வில் OBC பிரிவினர் 96 / ​OC​ பிரிவினர் 119 மார்க் எடுத்திருந்தால் போதும்.

நீட் தேர்வு எழுதவில்லை மற்றும் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளோர்க்கு மருத்துவராகும் வாய்ப்பு உள்ளது. இவர்கள் எங்களது அலுவலகத்தை நேரடியாகத் தொடர்புகொண்டால், அவர்களுக்குத் தேவையான அறிவுரைகள் வழங்கப்படும். 

படிப்புக்கு ஆகும் செலவு:

லைசியம் பல்கலையில் படித்து முடிக்க ஐந்தாண்டுகளுக்கு ரூ. 26 லட்சம், சவுத் வெஸ்டர்ன் பல்கலையில் ரூ. 28 லட்சம் மற்றும் தவோ மருத்துவப் பல்கலையில் ரூ. 32 லட்சம் செலவாகும். இது கல்விக் கட்டணம், உணவு மற்றும் விடுதிக்கான செலவையும் சேர்​த்ததாகும்.

``தவோ மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்து, இந்தியாவில் எம்.சி.ஐ. தேர்வு எழுதுவோருக்கு, சென்னை லிம்ரா பயிற்சி மையம், ஒரு கலங்கரை விளக்கம் என்றால் அது மிகையாகாது. 5 ஆண்டு படிப்பை, மிகத் தெளிவாக, எதனையும் ஒதுக்காமல், அனைத்தையும் கற்றுத் தரும் ஒரே பயிற்சி மையம் இதுதான். என் வாழ்நாள் முழுவதும், லிம்ரா தந்த எம்.சி.ஐ. தேர்வுப் பயிற்சியை மறக்காமல் நன்றி கூறுவேன். "​ - ​Dr. SOWMIYA RAMESH (217/300) ALL INDIA TOPPER​,​ DECEMBER 2017

படித்து முடித்த பின்னரும் லிம்ரா-வின் உதவி:

வெளிநாடுகளில் மருத்துவம் படித்து முடித்த பின்னர், ஒருவர் எம்.சி.ஐ. நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த MCI-FMG தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை மாணவர்கள் படிக்கும்போதே பிலிப்பைன்ஸ் நாட்டிலும், படித்து முடித்த பின்னர், ஐந்தரை மாதங்கள் சென்னையிலும் லிம்ரா நடத்துகிறது. ரூ. 75,000 செலுத்தி டில்லியில் மட்டுமே படிக்கக் கூடிய இந்த பயிற்சி வகுப்புகளை, சென்னையில் தன் மாணவர்களுக்குக் கட்டணம் எதுவும் இல்லாமல் லிம்ரா வழங்குகிறது. தென் இந்தியாவில் இந்த பயிற்சி வகுப்புகளை நடத்தும் ஒரே நிறுவனம் லிம்ரா மட்டுமே. சென்ற டிசம்பர் 2017ல், 59 லிம்ரா மாணவர்கள் MCI தகுதித் தேர்வில் வெற்றி பெற்றனர். மூன்று மருத்துவர்கள், அனைத்திந்திய அளவில் ரேங்க் எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வகுப்பு July 15ம் தேதி ஆரம்பிக்கவுள்ளது. 

நீட் தேர்வு குறித்தும், பிலிப்பைன்ஸில் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் அனுப்பி, இடம் பெற்று, படிப்பது குறித்தும் மேலும் தகவல்கள் தேவைப்படுவோர் அந்நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம். 

 

விவரங்களைப் பெற

Do you like the story?

Please Appreciate the Author by clapping!