பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

 கால்பந்தாட்ட உலகின் `தல' லியோனல் மெஸ்ஸிக்கு சிறை தண்டனை விதித்திருக்கிறார்கள்.  வரி ஏய்ப்புக் குற்றத்திற்காக 21 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும் என ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், கால்பந்தாட்ட ரசிகர்கள் எல்லாம் சோகத்தில் மூழ்க, மெஸ்சி சிறை செல்லவேண்டிய அவசியம் இல்லை என்று ஆறுதல் கொடுத்தி ருக்கிறது மெஸ்ஸி தரப்பு. வன்முறை அல்லாத குற்றச்செயல்களில் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும்பட்சத்தில் அதை ரத்து செய்யும் நடைமுறை ஸ்பெயினில் இருக்கிறதாம்! சட்டத்துல இல்லாத ஓட்டையா?

இன்பாக்ஸ்

 கஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் `விவேகம்' படத்தில் அஜித்தின் பெருமைகளைப் பேசும் தீம் சாங் ஒன்று இடம் பெறுகிறது. ட்ரெய்லரில் அஜித் பேசிய `never ever give up' வசனத்தைப் பின்னணியாகக் கொண்டு கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் இந்தப் பாடல், அஜித்தின் 25 ஆண்டுகால சினிமா பயணத்தைப் பிரதிபலிக்கும் விதமாக உருவாகியிருக்கிறது. தெறிக்கவிடுவாங்களே தல ஆர்மி

இன்பாக்ஸ்

 தெலுங்கு சினிமாவின் ரொமான்டிக் ஜோடி சமந்தா - நாகசைதன்யா அக்டோபரில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள். திருமணம் முடிந்ததும் ஹனிமூனுக்கு நியூயார்க்கிற்குப் போகிறார்களாம். ஏன் நியூயார்க்? என விசாரித்தால், `விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு வெர்சன் ஷூட்டிங் நியூயார்க்கில் நடந்தபோதுதான், சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் காதல் மலர்ந்ததாம்! ஆராமலேய்ய்ய்...

 ஆசிட்வீச்சால் முகம் சிதைந்துபோனவர் மும்பையைச் சேர்ந்த லலிதாபென். அவரைக் காதலித்துக் கரம்பிடித்திருக்கிறார் ராஞ்சியைச் சேர்ந்த ரவிசங்கர். மிஸ்டுகாலில் ஆரம்பித்த நட்பு, காதலாகி கசிந்துருகி கல்யாணம் வரை வந்திருக்கிறது. அன்புக்கு முன்னால் அழகெல்லாம் அவசியமில்லை என்று நிரூபித்திருக்கிற இந்த இளம் ஜோடியை பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நேரில் வந்து வாழ்த்தி ஒரு ஃபிளாட் ஒன்றையும் பரிசளித்திருக்கிறார்! நெகிழ்ச்சி மகிழ்ச்சி

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

மீபத்தில் சீனாவில் ரிலீஸான அமீர்கானின் `டங்கல்', இதுவரை 1523 கோடி ரூபாய் வசூல் செய்தி ருக்கிறது. இந்திய சினிமாவின் புலிப்பாய்ச்சல் இது என்கிறார்கள். `பாகுபலி', இன்னும் சீனாவில் திரையிடப்படவில்லை. `டங்கல்' வெற்றியில் `பாகுபலி' டீம் செம உற்சாகத்தில் இருக்கிறது. பாகுபலியின் வெளிநாட்டு விற்பனை உரிமையை வைத்திருக்கும் Francois Da Silva, ‘சீனாவுக்கு நாங்கள் வேறொரு திட்டம் வைத்திருக் கிறோம். சீனா ரிலீஸும் முடிந்த பிறகு, `பாகுபலி' இந்தியத் திரைத் துறையின் வரலாற்றுச் சாதனை யாக அமையும் பாருங்கள்’ என்று சொல்லி இருக்கிறார். ஜெய்மகிழ்மதி!

 பாடகர் அட்னான் சாமிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. மெடீனா என்று பெயர் சூட்டப்பட்ட அந்த மகளுக்குப் பரிசாக, தன்னுடைய 20 ஆண்டுகால புகைப்பழக்கத்தைக் கைவிட்டிருக்கிறார்! ஏற்கெனவே தன்னுடைய தந்தையின் அன்புக்காகக் குண்டுப்பையனாக இருந்த சாமி கஷ்டப்பட்டு டயட் இருந்து, ஜிம்மில் போராடி 167 கிலோவைக் குறைத்திருக்கிறார். இப்போது இது! அன்பு அடிக்ட் சாமி!

இன்பாக்ஸ்

குலுமணாலியில் இக்லூதான் இப்போது ட்ரெண்ட். ஆர்டிக் மக்களின் இக்லூ என்கிற பனிவீடுகள் பற்றி நூல்களில்தான் படித்திருப்போம். இப்போது மணாலியின் பனிமலைப்பகுதிகளில் இத்தகைய இக்லூ வீடுகளை உருவாக்கி தங்குவசதிகளைச் செய்து தருகிறார்கள் தனியார் நிறுவனங்கள். கூடவே ஸ்கையிங் ஸ்னோபோர்டிங் கூட செய்யலாம். குளுகுளுஹவுஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு