Published:Updated:

இன்றே பாருங்கள் இன்ஸ்டா லைவ்!

இன்றே பாருங்கள் இன்ஸ்டா லைவ்!
பிரீமியம் ஸ்டோரி
News
இன்றே பாருங்கள் இன்ஸ்டா லைவ்!

கருப்பு

சென்ற மாதம் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியை பல லட்சம் ரசிகர்கள் நேரலையில் பார்த்து ரசித்தார்கள். அந்த லைவ் பேட்டி ஒளிபரப்பானது தொலைக்காட்சிகளில் இல்லை, இன்ஸ்டாகிராமில். உலக பிரபலங்கள் கூடி கும்மியடிப்பது இப்போதெல்லாம் இன்ஸ்டாவில்தான்... லைவில்தான்!

இன்றே பாருங்கள் இன்ஸ்டா லைவ்!
இன்றே பாருங்கள் இன்ஸ்டா லைவ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சமூக வலைதளங்களில் இளைஞர்களின் முதல் சாய்ஸாக இன்ஸ்டா மாறிக் கொண்டிருக்கிறது. எதையும் எழுதவேண்டாம், பேசவேண்டாம், எல்லாமே புகைப்படங்களும் வீடியோவும்தான்! காட்சிகளின் தலைமுறைக்கு இதுதான் பிடித்திருக்கிறது. கூடவே, இது பிரபலங்களின் செல்லப்பிள்ளையாகவும் மாறிவிட்டது. இன்ஸ்டாவின் அடுத்தகட்ட பாய்ச்சல்தான் இந்த லைவ் வீடியோக்கள். ஃபேஸ்புக் தொடங்கி, பல சமூக வலைதளங்கள் லைவ் வசதி தந்தாலும், இன்ஸ்டாகிராம் லைவ்தான் `கூல்' என்கிறார்கள் இளைஞர்கள். இன்ஸ்டாகிராம் `லைவ்' வந்த பிறகு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெறும் நான்கே மாதங்களில் பயனாளிகள் எண்ணிக்கை 60 கோடியிலிருந்து, 70 கோடியாக  அதிகரித்திருக்கிறது.

ஏன் இவ்வளவு ரீச்? இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோ முடிந்தபின், ஒளிபரப்பியவர் மட்டுமே அதைச் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். வேறு எங்கும் அது சேமித்துவைக்க முடியாது என்பது இதன் மிகப்பெரிய ப்ளஸ். எதைப்பற்றி லைவ் வீடியோ செய்கிறோம் என்பதை கமென்ட் செய்து, அதை பின் (Pin) செய்து வைத்துக்கொள்ள முடியும். இதனால் புதிதாக வீடியோவைப் பார்க்க வருபவர்கள் அதைப்படித்து அதன்படி உரையாட முடியும். பிரபலங்களுக்குத் தங்களுடைய திரைப்படங்கள், நிகழ்வுகள், விளம்பரங்களை ப்ரமோட் செய்ய இது பெரிய பலம்! அதனால், ட்விட்டரில் இதற்கு முன் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பிரபலங்களின் சமீபத்திய சாய்ஸ் இன்ஸ்டாகிராம்தான்!

இன்றே பாருங்கள் இன்ஸ்டா லைவ்!

தொழில் நிறுவனங்கள் தங்களது புதிய பொருள் குறித்த அறிவிப்புகளை உடனுக்குடன் அறிவிக்கவும், விளம்பரங்களை நேரடியாகப் பயனாளர்களிடம் கொண்டு சேர்க்கவும் இந்த லைவ் வீடியோக்களைப் பயன்படுத்துகின்றனர். இன்ஸ்டாகிராமின் வீச்சை உணர்ந்துதான், சுமார் 10 லட்சம் நிறுவனங்கள் அங்கு கடைவிரித்திருக்கின்றன.

இந்த லைவ் வீடியோக்களில் காலை நேரங்களில் உடற்பயிற்சிகளைக் கற்றுத் தருகிறவர்கள் நிறைகிறார்கள். இரவு நேரங்களில் கையில் கிதாரோடு ஜப்பானிய இளைஞர்கள் பாடுகிறார்கள். நகங்களில் எப்படி நெயில் பாலிஷ்களை விதவிதமாகப் போடுவது எனக்கற்றுத்தருகிறார்கள். நடனம் சொல்லித்தருகிறார்கள். வெட்டியாக மணிக்கணக்கில் அரட்டை அடிக்கிறார்கள். ஏதாவது இசைநிகழ்ச்சி, விளையாட்டுப் போட்டியில் அமர்ந்துகொண்டு லைவ்வில் கலகலக்கலான கமென்ட்ரி கொடுக்கிறார்கள். சாப்பிடும்போது துணைக்கு ஆள் இல்லை என்றாலும்கூட லைவ்வில் வந்து நண்பர்களோடு பேசிக்கொண்டே சாப்பிடுகிற விநோதமெல்லாம் நடக்கிறது.

இன்றே பாருங்கள் இன்ஸ்டா லைவ்!

நடிகை பார்வதிமேனன், நிவேதா பெத்துராஜ் முதலான நடிகைகள், ரசிகர்களோடு உரையாடுகிற இடமாக இன்ஸ்டா லைவ்வைப் பயன்படுத்து கிறார்கள். ராபின்ஷர்மா மாதிரியான தன்னம்பிக்கை எழுத்தாளர்கள் இன்ஸ்டா லைவ்வில் இன்ஸ்பிரேஷன் பிரசங்கங்களும் செய்கிறார்கள். சமீபத்தில் இரண்டாவது முறையாக இரான் தேர்தலில் போட்டியிடும் அந்த நாட்டு அதிபர் ஹசன் ரவ்ஹானி தேர்தல் பிரசாரத்தை இன்ஸ்டாகிராம் லைவ்வில் முன்னெடுத்தார். அதுவும் அதிகாலை மூன்று மணிக்கு!

ஆனால், இந்த இன்ஸ்டா லைவ் பார்க்கும் பழக்கம் போதையாக மாறி நம்மை அடிமைப்படுத்துகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. எனவே, இன்ஸ்டாவில் நுழைந்தாலும் கட்டுப்பாட்டைக் கடைபிடித்தால் இன்ஸ்டா நிச்சயம் இனிக்கும் ஃப்ரெண்ட்ஸ்!