Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

 * பாரீஸ் ஒப்பந்தத்துக்கு `டூ’ சொல்லிவிட்டுப் பிரிந்திருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். தொழில்புரட்சியின் காரணமாகத்தான் பூமி வேகமாக வெப்பமடைந்து வருகிறது. இதைக் கட்டுக்குள் வைப்பதற்காக உலக நாடுகள் இணைந்து உருவாக்கியதுதான் பாரீஸ் ஒப்பந்தம். இதில் கையெழுத்திட்ட நாடுகள் தங்களது கார்பன் வெளியீட்டைக் குறைத்தே ஆக வேண்டும். அதற்காக மாற்று எரிபொருளை நாட வேண்டியது அவசியம். இது தனது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் எனச் சொல்லி இதிலிருந்து வெளியேறியிருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். “என்னுடைய தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று” என டிரம்ப் சொன்னாலும்,  இந்த முடிவுக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்பு அதிகரித்திருக்கிறது. ட்ரம்ப்புனாலே டிஷ்யும்தான்!

இன்பாக்ஸ்

* இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் இடையே இருந்த முட்டல் மோதல்கள் இறுதிகட்டத்தை நெருங்கியிருக்கின்றன. கும்ப்ளேவின் பதவிக்காலம் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளோடு முடிவுக்கு வருகிறது. இதையடுத்து புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பதில் உத்வேகமாக இருக்கிறது பிசிசிஐ. வீரேந்திர சேவாக் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருப்பதாகச் செய்திகள் கசிய, ராகுல் டிராவிட் பயிற்சியாளர் இடத்தைப் பிடிப்பார் என்கிறது பிசிசிஐ ஏரியா. கோஹ்லி கோபம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்பாக்ஸ்

* உலகின் புகழ்பெற்ற நூறு விளையாட்டு வீரர்கள் பட்டியலைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது ஈஎஸ்பிஎன். இதில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருப்பவர் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.   இந்தப்பட்டியலில் இடம்பிடித்திருக்கும் நான்கு இந்தியர்களுமே கிரிக்கெட் வீரர்கள்தான். டாப் 20-க்குள் கோஹ்லியும் தோனியும் இடம்பிடித்திருக்கிறார்கள்! வாழ்த்துகள் மக்கா!

இன்பாக்ஸ்

* தமிழ் சினிமாப் பிரபலங்கள் எல்லாம் ட்விட்டர் ஃபேஸ்புக் என பிஸியாக இருக்க, நிவேததா பெத்துராஜ் மட்டும் புதுரூட் பிடித்து இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவாகிவிட்டார். தினமும் நாலைந்து பிரத்யேகப் புகைப்படங்கள் போடுவது, வீடியோவில் ஜாலி அரட்டை அடிப்பது, தன் ரசிகர்களுக்கு லைக் போடுவது என நிவி செம்ம பிஸி. இன்ஸ்டா கேர்ள்!

இன்பாக்ஸ்

* இங்கிலாந்து பிரதமர் ‘தெரேசா மே’யின் ஆட்சிக்காலம் முடிந்து அடுத்த தேர்தலுக்குத் தயாராகி விட்டது பிரிட்டன். தேர்தலுக்கான பிரச்சாரமும் சூடு பறக்கிறது. மீண்டும் தேர்தலில் போட்டியிடும் தெரேசா மே இம்முறை இந்திய வாக்களர்களின் ஓட்டுகளைக் குறிவைத்துப் பிரசாரம் செய்து வருகிறார். பிரிட்டனில் வசிக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை 16 லட்சம். இதற்கென `தெரேசா கி சாத்’ என்கிற பிரச்சாரப்பாடல் ஒன்றை இந்தியில் வெளியிட்டுள் ளனர். இதில் இந்தியர்களுடனான தெரேசாவின் அன்பையும் பிரியத்தையும் காட்டி வாக்குக் கேட்கிறார்கள்! இந்தியாவுக்குப் பிடிச்ச பெயர்!

இன்பாக்ஸ்

* இந்திய ரயில்வே கடந்த மூன்றாண்டுகளில் மூவாயிரம் கோடி ரூபாய்க்கு வருவாய் ஈட்டி இருக்கிறது. இது வெறும் கேன்சலேஷன் மூலமாக வந்த தொகைமட்டும்தான். ஆத்தாடி!

 * அக்‌ஷய்குமாருக்கும் சாய்னா நெஹ்வாலுக்கும் மாவோயிஸ்ட்டுகள் கொலைமிரட்டல் விடுக்க அதிர்ந்துபோய் இருக்கிறது செலிபிரிட்டி உலகம். மார்ச் மாதம் சுக்மாவில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலில் இறந்த 12 சி.ஆர்.பி.எஃப் படை வீரர்களின் குடும்பத்திற்கும் அக்‌ஷய் குமார் 5 லட்சமும் சாய்னா 50ஆயிரமும் வழங்கினர். இது மாவோயிஸ்டுகளைக் கோபப்படுத்த, இப்போது கொலை மிரட்டல் வரை வந்திருக்கிறது. ஓ காட்!

இன்பாக்ஸ்

யோகா குரு பாபா ராம்தேவின் நிறுவனமான பதஞ்சலியின் வருவாய் கடந்த ஒரேஆண்டில் பல மடங்கு அதிகரித்துப் பத்தாயிரம் கோடியை எட்டியிருக்கிறது. உணவு மற்றும் பானங்கள் சந்தையில் இதுவரை கோலோச்சிய நிறுவனங்களை முந்தி, இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது பதஞ்சலி. முதலிடம் எப்போதும் போலவே இந்துஸ்தான் லீவருக்கே. இந்தப் பத்தாயிரம் கோடி வருவாயில் அதிக பங்களிப்பைச் செலுத்திய பதஞ்சலியின் படைப்பு எது தெரியுமா? நெய். பதஞ்சலியின் நெய் மட்டுமே சென்ற ஆண்டு 1,467 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறதாம்! நெய்ஸ் ப்ரோ!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism