``என் பாலினத்தைக் காரணம் காட்டி வேலை தரவில்லை'' - வழக்கு தொடர்ந்த திருநங்கை ஷானவி

தமிழ்நாட்டைச் சேர்ந்த திருநங்கை ஷானவி பொன்னுசாமி, தான் திருநங்கை என்ற காரணத்தைக் காட்டி கேபின் க்ரூ (cabin crew)-வில் ஏர் இண்டியா ஏர் கேரியர் நிறுவனம் தன்னை வேலைக்கு எடுத்துக்கொள்ளவில்லை'' என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  

உச்ச நீதிமன்றம்

ஷானவி, 2010-ல் டாக்டர் ஆதித்தனார் கல்லூரியில் பொறியியல் முடித்தவர். தன்னை திருநங்கையாக உணர்ந்தவர், 2014-ல் பாலின மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டார். சதர்ன்லேண்ட் குளோபல் சர்வீஸில் (ஏர் லைன் செக்டார்) வேலை செய்துகொண்டிருந்தவர்,  சென்னையில் இருக்கிற ஏர் இண்டியாவின் கஸ்டமர் சப்போர்ட் துறையில் பெண் கேபின் க்ரூவாகப் பணிபுரிய அப்ளை செய்திருந்தார்.  அதற்கான தேர்வையும் எழுதியிருந்தார். ஆனால், ஏர் இண்டியா ஏர் கேரியரில் ஆண்கள் அல்லது பெண்களை மட்டும்தான் வேலைக்கு சேர்த்துக்கொள்ள முடியும் என்கிற பாலிசி இருப்பதால், ஷானவிக்கு வேலை கிடைக்கவில்லை. 

`வீடு, வேலையிடம், பொதுவெளி என்று எங்கும் எங்களுக்கான அங்கீகாரங்களை நாங்கள் போராடித்தான் பெற வேண்டுமா' என்று பொங்கியெழுந்த ஷானவி, பாலினத்தைக் காரணம் காட்டி எனக்கு வேலை மறுக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணையில், ''ஷானவி அவர் கேட்ட வேலையைப் பெறுவதற்காக எக்ஸாம் மற்றும் க்ரூப் டிஸ்கஷனில் செலக்ட் ஆகவில்லை. அதற்கான மதிப்பெண்ணை அவர் பெறவில்லை. வருங்காலத்தில் எங்கள் நிறுவனத்தில் திருநங்கைகளை வேலைக்கு அமர்த்தும்போது ஷானவி முயற்சி செய்யலாம் என்று சொல்லியிருக்கிறது ஏர் இண்டியா ஏர் கேரியர் நிறுவனம். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!