`கும்கி 2’ படத்துக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார் பிரபுசாலமன். ஆனால், இந்தப் படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்காது. வேறு கதை, வேறு நடிகர்கள். சென்டிமென்ட்டாக இந்தப் படத்திலும் முழுக்க புதுமுகங்களை நடிக்க வைக்கத் திட்டம் போட்டிருக்கிறார் பிரபு சாலமன். படத்தின் நாயகியாக நடிக்க இருப்பவர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி! சாலமன் சாய்ஸ்!

`கவண்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த டி.ஆர். அடுத்து விஷாலுடன் இணைகிறார். இந்தப் படத்தை இயக்கப்போவது பேரரசு என்பதுதான் இன்னொரு ஹைலைட் #அடங்காதவன்... அசராதவன்!

ப்ரோ கபடி லீக் போட்டியின் ஐந்தாவது சீசன் தொடங்கப்போகிறது. இந்த முறை 12 அணிகள் 130 போட்டிகளில் மோத உள்ளன. முதல்முறையாக தமிழ்நாடு அணியும் கலந்துகொள்ள இருக்கிறது. `தமிழ் தலைவாஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் புது அணியை வாங்கி இருக்கிற பிரபலம் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர்! வா தலைவா!

ட்விட்டரில் 10 கோடி ஃபாலோயர்களைத் தொட்ட முதல் ட்விட்டர்வாசி, பாப் பாடகி கேட்டி பெர்ரி. இவரின் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 10 கோடியைத் தொட்டபோது, ட்விட்டர் நிறுவனம் கேட்டி பெர்ரியை வாழ்த்தி ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டிருக்கிறது. இரண்டாவது இடத்தில் 9 கோடியே 67 லட்சம் ஃபாலோயர்களுடன் ஜஸ்டின் பைபர் இருக்கிறார். சுமார் 9 கோடியே 8 லட்சம் ஃபலோயர்ஸ் உள்ள ஒபாமாவுக்கு, இந்த ரேங்கிங்கில் மூன்றாவது இடம். வொண்டர் உமன்!

அமீர்கான் நடிக்கும் அடுத்தபடம் `தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்.’ இந்தப் படத்துக்காக மீண்டும் எடையைக் குறைத்து ஸ்லிம் ஃபிட் ஆகியிருக்கிறார் அமீர். `` `தாரே ஸமீன் பர்’, `தூம்’, `தங்கல்’ என எதுவாக இருந்தாலும் நான் நடிக்கும் எல்லா படங்களும் எனக்கு மிகவும் பிடித்தவைதான். அதில் இப்போது நடிக்கும் `தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ படமும் அடக்கம். படத்துக்குத் தேவையென்றால், என்ன வேண்டுமோ அதை செய்துதானே ஆகவேண்டும்’’ எனச் சிரிக்கிறார் அமீர். விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கும் இந்தப் படத்தில், முதல்முறையாக அமிதாப் பச்சனுடன் இணைகிறார் அமீர்கான்! செம்ம காம்போ!

நடிகர் ஷாரூக் கான், புதிதாக ஓர் அணியை வாங்கியிருக்கிறார். இந்தியாவில் அல்ல; தென் ஆப்பிரிக்காவில். ஐ.பி.எல் மற்றும் பிக்பேஷ் டி20 தொடர்கள்போல தென்னாப்பிரிக்காவிலும் ஒரு டி20 லீக் உண்டு. அதில்தான் ‘கேப்டவுன் நைட் ரைடர்ஸ்’ என்கிற அணியை வாங்கியிருக்கிறார். ஏற்கெனவே ஐ.பி.எல்-லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு உரிமையாளராக இருக்கிறார். மேற்கிந்தியத் தீவுகளில் நடக்கும் டி20 தொடரான கரீபியன் பிரீமியர் லீக்கில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் எனும் அணிக்கு உரிமையாளராக இருக்கிறார். இது அவருக்கு ஹாட்ரிக் அணி! ரைட் ரைடர்!