வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (30/07/2018)

கடைசி தொடர்பு:07:00 (30/07/2018)

பணப்பரிமாற்ற சேவைக்கு அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் வாட்ஸ்அப்!

உலக அளவில் 1.3 பில்லியன் பயனாளர்களைக் கொண்ட வாட்ஸ் அப் ஆப்-க்கு இந்தியாதான் மிகப்பெரிய சந்தையாகும். இங்கு மட்டும் 200 மில்லியன் பயனாளர்கள் இருக்கிறார்கள். இவர்களிடையே மிகவும் பாதுகாப்பான, நம்பகத்தன்மைவாய்ந்த பணப்பரிமாற்ற சேவையை வாட்ஸ்அப்பில் கொண்டுவருவதுதான் பேஸ்புக் நிறுவனத்தின் சமீபகால இலக்காக உள்ளது. 

ஃபேஸ்புக் நிறுவனத்தின் அங்கமான வாட்ஸ்அப் நிறுவனம், தனது ஆப் மூலமாக பணப்பரிமாற்றம் செய்யும் சேவையை அதிகாரபூர்வமாகத் தொடங்குவதற்கு இந்திய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக சோதனை முயற்சியாக வாட்ஸ்அப் மூலமாக பணப்பரிமாற்றம் செய்வது இந்தியாவில் சோதிக்கப்பட்டு ஒரு மில்லியன் பயனாளர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

வாட்ஸ் அப்

உலக அளவில் 1.3 பில்லியன் பயனாளர்களைக் கொண்ட வாட்ஸ்அப் ஆப்-க்கு இந்தியாதான் மிகப்பெரிய சந்தையாகும். இங்கு மட்டும் 200 மில்லியன் பயனாளர்கள் இருக்கிறார்கள். இவர்களிடையே மிகவும் பாதுகாப்பான, நம்பகத்தன்மைவாய்ந்த பணப்பரிமாற்ற சேவையை வாட்ஸ்அப்பில் கொண்டுவருவதுதான் ஃபேஸ்புக் நிறுவனத்தின் சமீபகால இலக்காக உள்ளது. 

இதுகுறித்து இந்நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் தங்களது முதலீட்டாளர்கள் மத்தியில் பேசும்போது, ``வாட்ஸ்அப்பானது மிக எளிய முறையில் தன் பயனாளர்களுக்குப் பணப்பரிமாற்றம் செய்ய உதவும்வகையில் அதன் சேவையைத் தரும். அச்சேவையானது மிகமுக்கியமான நிதித்தீர்வாக இருக்கக்கூடும். தற்போது அச்சேவையை அதிகாரபூர்வமாகத் தொடங்குவதற்காக இந்திய அரசின் ஒப்புதலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். அதுவரை மற்ற நாடுகளில் இத்திட்டத்தை விரிவுபடுத்தும் வேலைகளில் கவனத்தைச் செலுத்துவோம். அதன்மூலம் மிகவும் அதிக பயனாளர்களுக்கு இத்திட்டத்தின் பயன் கிடைக்கக்கூடும்" என்றார். 

இத்திட்டத்தை மிகவும் நன்முறையில் செயல்படுத்துவதற்காக, ஃபேஸ்புக் நிறுவனமானது, இந்தியாவில் மேலும் அதிக பயனாளர்களுக்கு இச்சேவையைக் கொண்டுசெல்வதற்காக, இந்திய அரசோடும், தேசிய பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அமைப்போடும், மேலும் பல வங்கிகளோடும் இணைந்து செயல்படுவதற்கான முனைப்பில் இருப்பதாகவும் தெரிகிறது.