வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (31/07/2018)

கடைசி தொடர்பு:15:12 (31/07/2018)

`பூமிக்கு மிக அருகில் வருகிறது செவ்வாய்'- 15 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் நிகழும் அதிசயம்!

வானியலில் ஓர் அதிசய நிகழ்வாக, 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் தோன்ற உள்ளது. 

செவ்வாய்

பூமியில் இருந்து சுமார் 35.8 மில்லியன் மைல் தொலைவில் செவ்வாய் கோள் உள்ளது. செவ்வாய், அதன் நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும்போது, பூமிக்கு மிக அருகில் வரும் நாள்களில் தெளிவாக கண்களுக்குத் தெரியும். ஆனால், எப்போதும் இல்லாத அளவுக்கு  இந்தமுறை மிக அருகிலும் பெரியதாகவும் அதிகப் பிரகாசமாகவும் தெரிய உள்ளது. இந்த அரிய நிகழ்வு, 15 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த 2003-ம் ஆண்டு இதே நிகழ்வு நடைபெற்றது. 

பிறகு, ஆகஸ்ட் மாதத்தின் இறுதி வாரங்களில் இந்த செவ்வாய்க் கிரகம் கொஞ்சம் கொஞ்சமாகக் கண்களை விட்டு மறையத் தொடங்கும். ஏனெனில், இது பூமியை நோக்கி விலகத் தொடங்குவதால் தொலைவில் தெரியும். எனவே, இப்போது அருகில் வரும் செவ்வாயை வெறும் கண்களால் பார்க்கலாம் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இன்று மாலை 7 மணி முதல் 9 மணி வரை இந்த அரிய நிகழ்வு தென்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.