வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (31/07/2018)

கடைசி தொடர்பு:11:23 (01/08/2018)

டெஸ்டிங்கில் ஹூண்டாயின் காம்பாக்ட் எஸ்யூவி கார்லினோ!

2016 ஆட்டோ எக்ஸ்போவில் ஜெனிசிஸ், டூஸான் கார்களோடு ஹூண்டாய் ஸ்டாலில் நின்றிருந்த இன்னொரு கார்  HND 14 கார்லினோ. காம்பாக்ட் எஸ்யூவி காரான இதை இன்னும் 3 ஆண்டுகளுக்குள் சாலையில் பார்க்கலாம் என்று அப்போதே ஹூண்டாய் நிறுவனத்தினர் கூறியிருந்தார்கள். மூன்று ஆண்டு கெடு நெருங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் கார்லினோவின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளன.

ஹூண்டாய் கார்லினோ

Photo Credit: Motor1.com

ஃபோர்டு எக்கோஸ்போர்ட், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா போன்ற காம்பேக்ட் எஸ்யூவி கார்களுடன் போட்டிபோடுவதற்காக வரவிருக்கும் இந்த காம்பாக்ட் எஸ்யூவியின் கான்செப்ட் வடிவம் ஜீப் ரெனிகாடே போல பாக்ஸ் டிசைனில் இருந்தது. ஆனால், தற்போது டெஸ்டிங்கில் இருக்கும் கார் ஹூண்டாயின் கோனா மற்றும் க்ரெட்டா மாடல்களைப் போன்று இருக்கிறது. காரின் உருவம் க்ரெட்டாவைப் போலவே இருந்தாலும் ஸ்ப்ளிட் ஹெட்லைட் கொண்ட முன்பகுதி கோனாவை நினைவுபடுத்துகிறது. கஸ்காடிங் க்ரில் டிசைன் ஹூண்டாயின் தனித்தன்மை. பார்த்த உடனேயே ஹூண்டாய் கார் என்பதைக் காட்டிக்கொடுத்துவிட்டது. செவ்வக வடிவில் இருக்கும் டெயில்லைட்டுகள் கார்லினோவின் கான்செப்ட் காரிலிருந்து அப்படியே வந்துள்ளது.

ஹூண்டாய் கார்லினோ

Photo Credit: Motor1.com

இன்டீரியர் படங்கள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை. கார்லினோவில் 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் இன்ஜின் வரும் என்று ஹூண்டாய் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. டீசல் இன்ஜினைப் பொறுத்தவரை, எலீட் ஐ20 காரில் இருக்கும் 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புது சான்ட்ரோவில் ஆட்டோமெடிக் கொண்டுவரப்போவதாக கூறியுள்ளதால், இந்தக் காரிலும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமெடிக் கியர்பாக்ஸை எதிர்பார்க்கலாம். 

கார்லினோ

Photo Credit: Motor1.com

இந்தியாவில் காம்பாக்ட் எஸ்யூவி செக்மென்ட் அசுர வளர்ச்சி அடைந்துவருகிறது. டாடா நெக்ஸான், ஃபோர்டு எக்கோ ஸ்போர்ட், மஹிந்திரா டியூவி 300, மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா என காம்பாக்ட் எஸ்யூவி செக்மன்டில் ஏற்கெனவே பல கார்கள் உள்ளன. புதிதாக ஜீப், மஹிந்திரா, கியா போன்றவர்கள் கார்களை களமிறக்கவுள்ளார்கள். பெரும் போட்டி களத்தில் ஹூண்டாய் எப்படித் தனித்து நிற்கப்போகிறது என்பது அடுத்த ஆண்டு கார் விற்பனைக்கு வரும்போதுதான் தெரியும். 

அம்பாஸடர், பத்மினி, மாருதி 800 ... இந்திய சாலைகளின் சாகசப் பொக்கிஷங்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..