பிசினஸ் பிரச்னைகளுக்குத் தீர்வு...கோவையில் நாணய விகடன் பிசினஸ் கான்க்ளேவ்!

முதல் நாள் மதியம், இன்கவர்ன் ரிசர்ச் நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான ஶ்ரீராம் சுப்ரமணியன்,`பங்கு முதலீட்டாளர்கள் ஈடுபாடு எப்படி இருக்க வேண்டும்? `என்பது குறித்து உரையாற்ற இருக்கிறார். 

பிசினஸ் பிரச்னைகளுக்குத் தீர்வு...கோவையில் நாணய விகடன் பிசினஸ் கான்க்ளேவ்!

கோவையில் ஆகஸ்ட் 18, 19-ம் தேதிகளில் `நாணயம் விகடன்’ சார்பில் `ஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்’ நடைபெற உள்ளது. `விஷன் 2025’ என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற உள்ள இந்த இரண்டு நாள் கருத்தரங்கில், பங்கு முதலீட்டாளர்கள் ஈடுபாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இன்கவர்ன் ரிசர்ச் நிறுவனத்தின் நிறுவனரும், எம்.டி.யுமான ஶ்ரீராம் சுப்ரமணியன் சிறப்புரை ஆற்ற உள்ளார். 

கான்க்ளேவ்

கான்க்ளேவ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் இங்கே க்ளிக் செய்க....

உலகம் முழுக்க உள்ள தமிழர்களுக்கு நிதி தொடர்பான விஷயங்களில் நல்வழி காட்டிவரும் நாணயம் விகடன், கடந்த இரண்டு வருடங்களாக ஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்களை சென்னையில் வெற்றிகரமாக நடத்தியது. இதுபோன்ற கருத்தரங்குகளின் பலன், தமிழகத்தில் உள்ள மற்ற நகரங்களில் இருப்பவர்களுக்கும் கிடைக்க வேண்டும் எனும் நோக்கத்தில், கோவை மண்டல வாசகர்களின் விருப்பத்தை ஏற்று, ஆகஸ்ட் 18, 19-ம் தேதிகளில் கோவையில், இரண்டு நாள் ஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவினை நாணயம் விகடன் நடத்தவிருக்கிறது.  

`விஷன் 2025’ என்னும் கருப்பொருளை மையமாகக்கொண்டு, நிபுணர்கள் பலர் இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் உரையாற்ற உள்ளனர். இந்த கான்க்ளேவின் முதல் நாளன்று பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், சர்வதேச மற்றும் இந்தியப் பொருளாதார நிலை குறித்து பல்வேறு நிபுணர்கள் பேச உள்ளனர். 

பங்கு முதலீட்டாளர்கள் ஈடுபாடு எப்படி இருக்க வேண்டும்?

முதல் நாளன்று பங்குச் சந்தை நிபுணர் செளரப் முகர்ஜி, பங்குச் சந்தையின் போக்கு இனி எப்படி இருக்கும் என்பது பற்றி பேசுவார். மேலும், பங்குச் சந்தை நிபுணரான ஏ.கே.பிரபாகர் இந்தக் கருத்தரங்கில் பேச உள்ளார். நாணயம் விகடனில் இவர் எழுதிய போர்ட்ஃபோலியோ மிகவும் புகழ்பெற்ற பகுதி. இந்தக் கருத்தரங்கில் யூனிஃபை நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜி.மாறனும் பேசவிருக்கிறார். `புதிய ஆண்டில் நமது முதலீடுகளை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும்’ என்பது குறித்து நாணயம் விகடனின் புத்தாண்டு இதழில் இவர் எழுதும் கட்டுரை பலராலும் தேடிப் படிக்கப்பட்டுவருகிறது. 

கான்க்ளேவ்

இவர்களைத் தொடர்ந்து சுந்தரம் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனியின் எம்.டி சுனில் சுப்பிரமணியம் பேசுகிறார். அடுத்ததாக, அதாவது முதல் நாள் மதியம், இன்கவர்ன் ரிசர்ச் நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான ஶ்ரீராம் சுப்ரமணியன், `பங்கு முதலீட்டாளர்கள் ஈடுபாடு எப்படி இருக்க வேண்டும்' என்பது குறித்து உரையாற்ற இருக்கிறார். அவரைத் தொடர்ந்து சர்வதேசப் பொருளாதார நிபுணர் டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரனும் உரையாற்ற உள்ளார். 

இரண்டாம் நாள் கருத்தரங்கு

இந்தக் கருத்தரங்கின் இரண்டாம் நாளன்று, பிசினஸ் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது. அன்றைய தினம், தமிழ்நாடு சி.ஐ.ஐ. அமைப்பின் தலைவர் எம்.பொன்னுசுவாமி பேசுகிறார். ஆரஞ்ச்ஸ்கேப் நிறுவனரும், கிஸ்ஃப்ளோ நிறுவனத்தின் சி.இ.ஓ-வுமான சுரேஷ் சம்பந்தம் பேசுகிறார். சிறுதொழில் நிபுணர்களுக்கு வழிகாட்டும் ஆஸ்ஃபைர் நிறுவனரும், எம்.டி.யுமான ரமாஸ் கிருஷ்ணனும் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். 

இந்த இரண்டு நாள் கான்க்ளேவ், வாசகர்களாகிய உங்களுக்கு அறிவு விருந்தாக மட்டுமல்லாமல் நாட்டின் வளர்ச்சியில் உங்களுக்கான வாய்ப்புகளைக் கண்டறியும் ஒரு தளமாகவும் அமையும்.   

கான்க்ளேவ்

யார் யார் கலந்துகொள்ளலாம்? 

* பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள்

* பிசினஸ் லீடர்கள்

* சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவர்கள்

* கம்பெனி மேனேஜர்கள்

* தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் 

* பி.காம், எம்.காம் மற்றும் எம்.பி.ஏ மாணவர்கள் 

இந்த கான்க்ளேவ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புகிற பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர்கள், மாணவர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், கார்ப்பரேட் மேனேஜர்கள் http://bit.ly/nvconclave இந்த லிங்கினை உடனே க்ளிக் செய்து, கட்டணம் செலுத்தித் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்பவர்களுக்குத் தள்ளுபடி உண்டு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!