ஆந்திராவில் உருவாகிறது புது ரேஸ் டிராக்

தலைநகர் அமராவதி, கியா மோட்டார்ஸ் என தொழில் மற்றும் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களில் கண்ணாக இருக்கும் ஆந்திர மாநிலத்தில் இப்போது 3.3 கி.மீ ரேஸ் டிராக் உருவாகிறது. ரேஸ் டிராக்குக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தியுள்ளார்கள்.

ஆந்திரா ரேஸ் டிராக்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்பு ஆட்சிக்கு வந்தபோது நிதி மார்க்யூ ஒன் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் ஆந்திராவில் ஃபார்முலா 1 ரேஸ் டிராக் கட்ட ஒப்பந்தம் போட்டிருந்தார். 2004-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் வந்தவுடன் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் ரேஸ் டிராக் கட்டும் பணிகள் ஆரம்பித்துவிட்டன. இந்தமுறை ஃபார்முலா 1 டிராக் இல்லை. FIA கிரேட் 3 டிராக் கட்டப்படுகிறது. இந்த ரேஸ் டிராக் உருவாவதற்குக் காரணமாக இருப்பவர் ரேஸர் அனுஷ் சக்ரவர்த்தி. இவர் நிதி மார்க்யூ ஒன் மோட்டார்ஸின் நிறுவனர். நிஸான் ஜிடி அகாடமியில் இந்தியா சார்பாக லண்டன் சில்வர்ஸ்டோன் டிராக்கில் நடைபெற்ற ரேஸில் கலந்துகொண்டவர்.

ரேஸ் டிராக்குக்காக ஆந்திர அரசு இடம் கையகப்படுத்துவது முதல் கட்டுமான சலுகைகள் வரை உதவிகள் செய்கிறது. அனந்தபுரம் மாவட்டத்தில் 219 ஏக்கர் நிலத்தில் மூன்று கட்டங்களாக இந்த டிராக் கட்டப்படுகிறது. முதல் கட்டமாக 3.3 கி.மீ ரேஸ் டிராக் மற்றும் 40 ரூம் கொண்ட 3 ஸ்டார் ஹோட்டல் கட்டப்படுகிறது. இரண்டு மற்றும் மூன்றாம் கட்டத்தில் கோல்ஃப் கோர்ஸ், ஸ்போர்ட்ஸ் காம்பிலெக்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் தீம் பார்க் கட்டப்படவுள்ளது. இந்த மொத்த புராஜக்டின் மதிப்பு 149 கோடி ரூபாய். இதை 90 மாதங்களில் கட்டிமுடிக்க திட்டமிட்டுள்ளார்கள். ரேஸ் டிராக் உடன் இதே இடத்தில் Drag race strip, off-road course மற்றும்  rock crawl area போன்றவையும் வருகிறது. இதன் மூலம் பெர்ஃபார்மன்ஸ் பைக்-கார் வைத்திருப்பவர்கள் மட்டுமல்ல ஆஃப் ரோடு பைக்-கார் வைத்திருப்பவர்களுக்கும் குஷிதான்.

அனுஷ் சக்ரவர்த்தி

இதே டிராக்கை ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் டெஸ்ட் டிராக்காகவும் பயன்படுத்துவதற்காக skid pad மற்றும் Wet surface கட்டப்படவுள்ளது. FIA கிரேட் 3 டிராக்குகளில்  MotoGP, Formula 3, Formula E, Go Kart போன்ற போட்டிகளை நடத்தலாம். ஃபார்முலா 1 போட்டியை நடத்த முடியாது. சென்னை MMRT ரேஸ் டிராக் கிரேட் 2 வகையைச் சேர்ந்தது. சென்னை டிராக்கில் ஃபார்முலா 1 போட்டியை தவிர அனைத்துப் போட்டிகளையும் நடத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!