மொபைலுக்கு வருகிறது கால் ஆஃப் ட்யூட்டி... #PUBG-ஐ ஓவர்டேக் செய்யுமா?

மொபைலுக்கு வருகிறது கால் ஆஃப் ட்யூட்டி... #PUBG-ஐ ஓவர்டேக் செய்யுமா?

மொபைல் கேம்கள் எப்போதுமே பிரபலம்தான். ஆனால், ஷூட்டிங் மற்றும் ஆக்‌ஷன் கேம்கள் மொபைலில் பெரிதாய் வெற்றியடையவில்லை. அதை உடைத்தெறிந்தது பப்ஜி. ஸ்மார்ட்போனிலே பப்ஜி விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இந்தச் சூழலில் வீடியோகேமில் மாபெரும் வெற்றி பெற்ற கால் ஆஃப் ட்யூட்டியையும் மொபைலில் இறக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

கால் ஆஃப் ட்யூட்டி

பப்ஜி மீம்ஸ்

Call of dutyம் கன்சோல் கேமில் அதிகம் விற்ற ஒரு கேம். அதை, மொபைலுக்கேற்றதுபோல மாற்றி வெளியிட ஆக்டிவிஷன் ( Activision) மற்றும் டென்செண்ட் (Tencent) ஆகிய நிறுவனங்கள் கைகள் கோத்திருக்கின்றன. முன்னர் ஒரு முறை மொபைலில் வெளியிடப்பட்டுத் தோல்வியடைந்தது கால் ஆஃப் ட்யூட்டி. இந்த முறை அப்படி ஆகாது என உறுதியளித்திருக்கிறார்கள் இதன் படைப்பாளர்கள். முதலில் சீனாவில் மட்டுமே இந்த கேமை வெளியிடுகிறது டென்செண்ட். அங்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து மற்ற நாடுகளுக்கும் வெளியிடப்படலாம்.

பப்ஜி மொபைலும் டென்செண்ட் வெளியிடு என்பதால் இதுவும் பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!