மர்லின் மன்றோ நினைவு தினம்

ஹாலிவுட், ஒரு பெண்ணின் முகத்திற்கு 50000 டாலர்களும்...அவள் அகத்திற்கு வெறும் 50 சென்ட்டும் தரக்கூடியது" என்று அன்றே உள்ளதைச் சொல்லி ஒட்டுமொத்த ஹாலிவுட் ஜாம்பவான்களையும் திரும்பி பார்க்க வைத்தவர் அந்த நம்பிக்கை நாயகி!

மர்லின்..! 1950-களில் பலருக்கும்  கனவுத்தாரகை. கிளாசிக்கல் கண்ணம்மா..பாப் கலாச்சாரங்களின் லிட்டில் பிரின்சஸ்..பத்திரிக்கை அட்டைப்படங்களின் டியரஸ்ட் டார்லிங்!  தன் மஸ்காரா விழிகளால் உலகையே மயக்கிக் கிறங்கடித்த மர்லின் மன்றோ நினைவு தினம் இன்று.

இப்படி எத்தனையோ கோடி மக்களின் மனம் கவர்ந்திழுத்த மர்லினின் இளமைக்காலம் அவ்வளவு ஈஸியானதாக அமைந்துவிடவில்லை. மூன்று திருமணங்கள், ஜான் எஃப் கென்னடியுடனான கிசுகிசுப்புகள், முப்பத்தாறு வயதிலேயே மரணம் என்று சர்ச்சைக்குரிய 'செக்ஸ்' சிம்பலாகவே பேசப்படும் மர்லினின் மறுபக்கம் மறைக்கப்பட்ட மர்மம்!!!

 

மர்லின் மன்றோ

சிறுவயதிலேயே தந்தையும் இல்லை. தாய்க்கும் மனநலம் சரியில்லை. ஆதலால் தன்னுடைய குழந்தைப் பருவம் முழுவதையும் அநாதை இல்லங்களிலேயே கழித்திருக்கிறார் இந்த அழகிய 'லைலா'. 16 வயதிலேயே கட்டாயத் திருமணம்,  பாலியல் சீண்டல்கள் என பல இன்னல்களைச் சந்தித்தவர்.  தனக்கான அடையாளங்களை தன்னம்பிக்கையுடன் தேடியிருந்திருக்கிறார். பள்ளிக் கல்வி கூட முடிக்காவிட்டாலும், பின்னாளில் பல்வேறு அறிஞர்களின் புத்தகங்களை தேடித் தேடி வாசித்து தன் வீட்டில் தனக்கென ஒரு மினி லைப்ரேரியை அமைத்து தன்னை செதுக்கியிருக்கிறார். கைவிடப்பட்ட விலங்குகளிடமும் சாலைகளில் திரியும் செல்ல பிராணிகளிடமும் மனிதநேயத்துடன் அன்பு காட்டும் பழக்கமுடையவர்.

தன் கவர்ச்சியால் மட்டுமல்லாமல் காந்தக் குரலாலும் எண்ணற்ற பாடல்களையும் பாடி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் மர்லின்! கென்னடியும் இவரும் இணைந்து பாடிய, 'ஹேப்பி பர்த்டே மிஸ்டர் பிரசிடண்ட்' என்ற பாடல் ரசிகர்களின் ஏகபோக லைக்குகளை அள்ளியது. வெறும் 50 டாலர்களுக்கு அவரை போட்டோ எடுத்த நிலையை மாற்றி, அவர் அணிந்திருந்த உடையை மட்டுமே 1,267,500 டாலருக்கு விற்கச் செய்தது மர்லினின் வாழ்நாள் சாதனை!

"ஹாலிவுட், ஒரு பெண்ணின் முகத்திற்கு 50000 டாலர்களும்...அவள் அகத்திற்கு வெறும் 50 சென்ட்டும் தரக்கூடியது" எனச் சொல்லி ஹாலிவுட் ஜாம்பவான்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் அந்த நம்பிக்கை நாயகி!

மர்லின் மன்றோ! - சர்ச்சையல்ல.... சாதனை!!!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!