Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குநராக அறிமுகமாகும் `லீ மஸ்க்’ படம் ரிலீஸுக்கு ரெடி. விர்ச்சுவல் ரியாலிட்டி சினிமாவாக உருவாகியிருக்கும் இந்தப் படம் முழுக்க முழுக்க ரோமில் எடுக்கப்பட்டிருக்கிறது. நோரா ஆர்னிஸெடர், பெர்னட், மரியன் உள்ளிட்ட பிரெஞ்சு நடிகர்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தை வி.ஆர் கண்ணாடி அணிந்து பார்த்தால், நேரடியாக அந்த இடத்தில் இருந்து பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தருமாம். ஆட்டைக்கு ரெடியா?

இன்பாக்ஸ்

ங்கனா ரனாவத் உடல் முழுக்கக் காயங்கள்! ‘மனிகர்னிகா’ என்னும் படத்தில் ஜான்சி ராணியாக நடித்துவரும் கங்கனா, வாள் சண்டைக் காட்சியில் வாழ் சுழற்ற எதிர்பாராதவிதமாக, வாள் கங்கனாவின் நெற்றிப்பொட்டில் அடித்து பலத்த ரத்தக்காயம். 15 தையல்கள் போடப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார் பவர் லேடி. கெட் வெல் கங்கனா!

இன்பாக்ஸ்

லக இசை ரெக்கார்டுகளை உடைத்து முன்னேறிக்கொண்டிருக்கிறது ‘டெஸ்பாசிட்டோ.’ லூயி போன்ஸி மற்றும் டாடி யான்கீ இசையமைத்துப் பாடியிருக்கும் இந்தப் பாடல் வீடியோ, உலக அளவில் இதுவரை 460 கோடி முறை ஸ்டீரிமிங் செய்யப்பட்டுக் கேட்கப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இதற்குமுன் ஜஸ்டீன் பைபரின் ‘ஸாரி’ பாடல்தான் 430 கோடி முறை கேட்கப்பட்டு சாதனை படைத்திருந்தது. உலகமே கேட்டு ரசிக்கும் இந்தப் பாடலுக்கு மலேசியா சமீபத்தில் தடை விதித்திருக்கிறது. பாடல் வரிகளில் ஆபாசச் சொற்கள் இருக்கின்றன என்பதே காரணம். ஸ்பானிஷ் மொழியில் பாடப்பட்டிருக்கும் இந்தப் பாடல் நம்ம ஊர் `வொய் திஸ் கொலவெறி’ போல உலகெங்கும் மொழிகள் கடந்து பாடப்படுகிறது. இன்னும் சில வாரங்களில் இது கங்ணம் ஸ்டைல் செய்த சாதனைகளை முறியடித்துவிடும். வைரல் உலகம்!

இன்பாக்ஸ்

‘`நான் ட்விட்டருக்கு அடிமையாகிவிட்டேன். காலையில் எழுந்ததுமே கை செல்போனைத்தான் தேடுகிறது. இன்று நாட்டில் என்ன பிரச்னை, அதற்கு நாம் என்ன கருத்து சொல்லலாம் என்ற சிந்தனைதான் ஓடிக்கொண்டே இருக்கிறது. போதைக்கு அடிமையானதுபோல ஓர் உணர்வு. ட்விட்டரிலேயே வாழ்க்கை ஓடிக்கொண்டு இருப்பதுபோல், உணர்வு ஏற்பட்டு வந்தது. அதனால்தான், ட்விட்டரில் இருந்து விலகியிருக்கிறேன்’’ என்று அறிவித்திருக்கிறார் குஷ்பு. அவரின் ஒன்பது லட்சம் ட்விட்டர் ஃபாலோயர்களும் அப்செட். குஷ்பு ஹேப்பி அண்ணாச்சி!

இன்பாக்ஸ்

கேரள சினிமாவில் வாரிசு நடிகர்களில் லேட்டஸ்ட் என்ட்ரி நடிகை சரிதா-முகேஷ் தம்பதியின் மகன் ஷரவன். படத்தின் பெயர் ‘கல்யாணம்.’ கேரள முதல்வர் பினராயி விஜயன் படப்பிடிப்பைத் துவக்கிவைக்க, முகேஷிடம் இருந்து விவகாரத்து பெற்ற நடிகை சரிதாவும்  கணவருடன் முண்டு கட்டி விழாவில் உற்சாகமாகக் கலந்து கொண்டார். டப்ஸ்மாஷ் புகழ் வர்ஷா பொல்லமாதான் படத்தின் ஹீரோயின். கலக்குங்க!

இன்பாக்ஸ்

ந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக வெற்றி பெற்றிருக்கிறார் ராம்நாத் கோவிந்த். மொத்தம் பதிவான 10,69,000  வாக்குகளில் 7,02,044 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் கோவிந்த். இதற்கிடையே தோல்வியடைந்த மீரா குமாரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் 50 ஆண்டுகளாக நீடித்துவந்த சாதனையை முறியடித்திருக்கிறார். 3.67 லட்சம் வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார் மீரா குமார். ஆனால், 1967-ல் குடியரசுத்தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் தலைமை நீதிபதி கோகா சுப்பா ராவ் 3.63 லட்சம் வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்ததே இதுவரையிலான சாதனையாக இருந்தது. கோகா ராவின் சாதனையை முறியடித்திருக்கும் மீரா குமாருக்கும் வாழ்த்துகள் சொல்லுங்க என ட்வீட்டுகிறது காங்கிரஸ். வரலாறு முக்கியம் மீரா குமார்!

இன்பாக்ஸ்

21 ஆண்டுகளாக சென்னையில் நடைபெற்றுவந்த சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டி இடம் மாறிவிட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ‘மராட்டிய ஓப்பன்’ போட்டியாக மாற இருக்கிறது. ரஃபேல் நடால், வாவ்ரிங்கா, கார்லோஸ் மோயா, மரின் சிலிச் எனப் பல ஜாம்பவான் வீரர்களைச் சென்னைக்கு அழைத்துவந்த இந்த டென்னிஸ் போட்டி திசை மாறக் காரணம், சரியான ஸ்பான்சர்கள் இல்லாததுதான். கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட சென்னை ஓப்பன் போட்டியில் இன்னும் அதிகப்படியான பரிசுத்தொகை வேண்டும் எனக் கேட்டு கடந்த ஆண்டே சென்னைக்கு வர மறுத்தார் வாவ்ரிங்கா. ஆனால், இந்த ஆண்டும் போதுமான ஸ்பான்சர்கள் வராததால் புனேவைத் தேர்ந்தெடுத்திருக்கிறது சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டியை நடத்திவந்த
ஐ.எம்.ஜி-ரிலையன்ஸ் நிறுவனம். மிஸ் யூ கய்ஸ்!