Published:Updated:

கிராம்... கிலோகிராம்... இன்ஸ்டாகிராம்!

கிராம்... கிலோகிராம்... இன்ஸ்டாகிராம்!
பிரீமியம் ஸ்டோரி
கிராம்... கிலோகிராம்... இன்ஸ்டாகிராம்!

ர.சீனிவாசன்

கிராம்... கிலோகிராம்... இன்ஸ்டாகிராம்!

ர.சீனிவாசன்

Published:Updated:
கிராம்... கிலோகிராம்... இன்ஸ்டாகிராம்!
பிரீமியம் ஸ்டோரி
கிராம்... கிலோகிராம்... இன்ஸ்டாகிராம்!

ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லாம் தாத்தா, பாட்டீஸ் ஏரியா... இன்ஸ்டாதான் இப்போ இளைஞர் ஏரியா. படமும் படங்கள் சார்ந்த இடமும்தான் இன்ஸ்டாகிராம்! இங்கே மொக்கை மொக்கையாக எழுதி எழுதிக்

கிராம்... கிலோகிராம்... இன்ஸ்டாகிராம்!

குவிக்காமல் விதவிதமான போட்டோக்கள், வீடியோக்கள் வழியாகத்தான் எல்லாமே! அமெச்சூர் போட்டோகிராபர்கள், ஸ்மூல் பாடகர்கள், டப்ஸ்மாஷ் நடிகர் திலகங்கள் என இன்ஸ்டா ஏரியாவில் இருக்கணும்னா, நிறைய எனர்ஜி முக்கியம் மக்கழே! இன்ஸ்டன்ட் கிராமத்தின் முக்கியமான பிரமுகர்கள் இவர்கள். இன்ஸ்டாவுக்குள் நுழைந்தால், இவர்களை முதலில் ஃபாலோ செய்யுங்க... இன்ஸ்டா இனிக்கும்... ஃபாலோயர்ஸ்  எண்ணிக்கை செழிக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிராம்... கிலோகிராம்... இன்ஸ்டாகிராம்!

செலினா கோமஸ் @selenagomez

இன்ஸ்டாகிராமின் முடிசூடா ராணி. பிரபல பாடகர் ஜஸ்டின் பைபருடனான பிரேக்அப்புக்குப் பிறகு, செலினா கோமஸ் காதலிப்பது இன்ஸ்டாவைத்தான். 123 மில்லியன் ஃபாலோயர்களுடன், சக பாடகிகளான டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் அரியானா கிராண்டே ஆகியோரை `பின்னால போங்க’ என மெர்சல் காட்டுகிறார்! இன்ஸ்டாவில் அதிக ஃபாலோயர்கள் கொண்டவர்கள் பட்டியலில் செலினாக்குவுத்தான் முதல் இடம். பெர்சனல் என ஒன்று செலினாவுக்கு இல்லவே இல்லை என்னும் அளவுக்குத் தனிப்பட்ட புகைப்படங்களை அப்லோடு செய்து லைக்ஸ் அள்ளுகிறார்!

கிராம்... கிலோகிராம்... இன்ஸ்டாகிராம்!

கே.ஸி.ஸ்டவ்ஃபர்  @kcstauffer

குழந்தைகள் இழுத்து இழுத்துப் பேசும்போது “பாட்டி மாதிரிப் பேசாதே” என சிலர் அதட்டுவதுண்டு. ஆனால், இன்ஸ்டாவில் இந்த இலக்கணம் எல்லாம் கிடையாது. அப்படி அழகாய் பேசும் மிலா மற்றும் எம்மா என்ற இரட்டையர்கள் இன்ஸ்டாகிராமில் செம ஹிட். இந்த இரட்டையர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வீடியோக்கள் ஒவ்வொன்றும் நம்மை மயக்கி ‘சோ க்யூட்ல?’  என்று சொல்லவைக்கும். இந்த ப்ரொஃபைலை யார் பார்த்துக்கொள்கிறார் தெரியுமா? இந்த இரட்டையர்களின் தாயான கேட்டி. சூப்பர் மாம்!

கிராம்... கிலோகிராம்... இன்ஸ்டாகிராம்!
கிராம்... கிலோகிராம்... இன்ஸ்டாகிராம்!

நிவேதா பெத்துராஜ்  @nivethapethuraj

`ஒரு நாள் கூத்து’ மூலம் அறிமுகமான இந்த மதுரைப் பொண்ணு நடித்து, இதுவரை வெளிவந்தது ஒரே ஒரு படம்தான்! ஆனால், அதற்குள்ளாகவே ‘அடியே அழகே’ என சோஷியல் மீடியாக்களில் டூயட் பாடிக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். ட்விட்டர், இன்ஸ்டா என எல்லா பக்கமும் ‘அமரேந்திர பாகுபலி’ நிவேதாதான். இவர் நடித்த படத்தைப் பார்த்து ரசிகர்களானவர்களைவிட இந்த அழகுக் குயிலின் இன்ஸ்டாகிராம் படங்கள், வீடியோக்கள் பார்த்து விசிறிகளானவர்கள்தான் அதிகம்!

கிராம்... கிலோகிராம்... இன்ஸ்டாகிராம்!

9கேக் @9gag

மீம்ஸ் முதன்முதலில் இன்டர்நெட்டில் வலம் வரத் தொடங்கியபோது, அந்தப் பெரும் சாம்ராஜ்யத்தின் அரியணையை சீக்கிரமே பிடித்துக்கொண்டது 9gag. அதன் ஆளுமை இன்றுவரை இன்ஸ்டாகிராமிலும் தொடர்கிறது. 41 மில்லியன் ஃபாலோயர்களுடன் கலகல போட்டோக்கள், குபீர் சிரிப்பை வரவைக்கும் வீடியோக்கள் எனக் கலக்கல் காம்போ மீல்ஸ் படைக்கிறது. எப்போது போனாலும் புதிதாக ஒரு போஸ்ட்டைப் பார்க்கலாம்.

கிராம்... கிலோகிராம்... இன்ஸ்டாகிராம்!

பிரநிதி @pranitiofficial)

சன் சிங்கரில் அறிமுகமான மழலை மேஸ்ட்ரோ இந்தப் பிரநிதி. இப்போது சினிமா பாடல்கள், விளம்பரங்கள் என ஓடிக்கொண்டிருக்கிறார். அதுபோக, இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தான் பாடும் வீடியோக்களைப் பதிவிடுகிறார். இரு வேறு ஜானர்களில் இருக்கும் பாடல்களை ஒரே தாளத்தில் கோத்து ஃபியூஷன் செய்து வெளியிடும் இவரின் பாடல் வீடியோக்கள் மிகவும் பிரபலம். தொலைக்காட்சி மூலம் பிரநிதியைக் கேட்டவர்களைவிட சமூகவலைதளங்கள் மூலம் பார்த்தவர்கள் பல மடங்கு.

கிராம்... கிலோகிராம்... இன்ஸ்டாகிராம்!

மை எல்லோ ப்ளேட்  @myyellowplate

புதியதோர் நகரம் சென்று உணவருந்தும்போது ‘அட சாப்பிட்டா போதும்’ என நினைப்பவர்கள்தான் அதிகம். இதற்கு இடையில் ஹிமான்ஷு ஒரு வித்தியாசமான மனிதர். எங்கே போனாலும் உடனே தன் மஞ்சள் நிறத் தட்டை எடுக்கிறார். அதில் உணவை வைத்து ஒரு போட்டோ கிளிக்கிவிட்டு இன்ஸ்டாகிராமில் அந்த உணவு மற்றும் அந்த நகரத்திற்கான விளக்கம் ஒன்றைக் கொடுத்து விடுகிறார். இன்ஸ்டாவில் பதிவிட்டால்தான், அந்த உணவே செரிக்கிறது என்கிறார். இந்தியாவில் இருக்கும் பல இடங்களுக்குச் சென்று அதன் உணவு கலாசாரத்தைப் பதிவு செய்பவருக்குக் குறைந்த காலத்திலேயே மிகப்பெரிய ரசிகர் கூட்டம். 
சட்டயர்க்ராம்  @satiregram

இன்ஸ்டாகிராம்னா, போட்டோதான் போடணுமா? இந்த ஒரு வித்தியாசமான யோசனைதான் இன்று Euzcil Castaneto என்பவரைப் புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. எல்லோரும் இன்ஸ்டாவில் போட்டோக்களை அப்லோடு செய்துகொண்டிருக்க, இவர் மட்டும், தான் கைப்பட எழுதிய வாக்கியங்களைப் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். இவர் ப்ரொஃபைல் போனால், ஒரு படத்தை விளக்கும் வாக்கியங்கள் மட்டுமே தெரிகிறது. ஆனால், படங்கள் இல்லை. அந்த வாக்கியங்களை வைத்து ஒரு படத்தை நாம் கற்பனை பண்ணிக்கொள்ள வேண்டியதுதான்.

கிராம்... கிலோகிராம்... இன்ஸ்டாகிராம்!

பிரகதி ராய்  @praginsta

டப்ஸ்மாஷ் உலகில் இந்தக் குட்டி பிரகதியைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. வடிவேலுவின் ரியாக்‌ஷன்கள் அனைத்தையும் அப்படியே பிரதி எடுக்கும் திறன், இயற்கையாகவே வரும் நடிப்பு என  இவரின் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் இன்ஸ்டாவில் செம ஹிட்! பல்வேறு டப்ஸ்மாஷ் ஸ்டார்கள், ``என்னுடன் நீங்கள் டப்ஸ்மாஷ் செய்யுங்களேன்” என்று கேட்கும் அளவுக்கு அப்ளாஸ் அள்ளிக் கொண்டிருக்கிறார். 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் இந்தக் குட்டிப்பெண், இன்ஸ்டாகிராமில் 75 ஆயிரம் ஃபாலோயர்களைத் தொடவிருக்கிறார்.

கிராம்... கிலோகிராம்... இன்ஸ்டாகிராம்!

முராத் ஒஸ்மான்  @muradosmann

`இவள் உனக்கானவள், இவள் கைகளை விடாமல் பற்றிக்கொள்!’ என்று சொல்வார்கள். அப்படித் தன் காதலியின் கையைப் பிடித்துக்கொண்டு உலகம் முழுவதும் சுற்றிவருகிறார் முராத் ஒஸ்மான். அந்தப் படங்களை ‘#FollowMeTo’ என்ற ஹேஷ்டேக்குடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட, இதுவரை 4.6 மில்லியன் ஃபாலோயர்களைச் சேர்த்துவிட்டார். ‘Follow Me Couple’ என்று அழைக்கப்பட்ட இருவரும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு ஊரிலும் இவர் எடுக்கும் போட்டோவில் தன் காதலி இவரின் கை, காலைப் பிடித்து அழைத்துப்போவதுபோல் இருக்கும்.

கிராம்... கிலோகிராம்... இன்ஸ்டாகிராம்!

ரகதி குருப்ரசாத் @pragathiguru

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியரில் அறிமுகமான பிரகதி, இன்ஸ்டாகிராமில் குடியிருக்கிறார். ஒரு போட்டோவிற்கு முப்பதாயிரம் லைக்குகள் வரை வாங்கி விடும் இவர், அவ்வப்போது தான் பாடும் வீடியோக்களையும் பதிவிடுகிறார்.

கிராம்... கிலோகிராம்... இன்ஸ்டாகிராம்!

ஹரிஜா @harija_off

``என்னது...எரும சாணி தெரியாதா?” என ‘உலக அழகி ரியாக்‌ஷன்கள்’ தருவதுதான் இன்றைய நெட்டிசன்௧ளின் பார்ட் டைம் ஜாப். யூடியூபில் மாஸ் ஹிட் அடித்திருக்கும் இந்த எருமசாணி டீமின்  மித்தாலி ராஜ் ஹரிஜாதான். ஒவ்வொரு ஃபிரேமையும் ‘தன் சோ கியூட்...சோ ச்ச்வீட்’ ரியாக்‌ஷன்களால் அழகாக்க, இவர் போடும் போஸ்ட்களுக்கெல்லாம் யுவன்-யுவதிகளிடம் இருந்து ஹார்ட்டின்கள் கொட்டுகின்றன. இன்ஸ்டாகிராமில்  32 ஆயிரம் ஃபாலோயர்கள் மேல் வைத்திருக்கும் ஹரிஜா இதுவரை பதிவிட்டது என்னவோ வெறும் 27 போஸ்ட்டுகள்தான். ஆனால், அதற்குள்ளாகவே மெர்சல் கேர்ள் ஆகிவிட்டார் ஹரிஜா!