Published:Updated:

தென் மாவட்ட ரயில்களை எரிப்போம்-மிரட்டலால் பாதுகாப்பு அதிகரிப்பு

தென் மாவட்ட ரயில்களை எரிப்போம்-மிரட்டலால் பாதுகாப்பு அதிகரிப்பு
தென் மாவட்ட ரயில்களை எரிப்போம்-மிரட்டலால் பாதுகாப்பு அதிகரிப்பு
தென் மாவட்ட ரயில்களை எரிப்போம்-மிரட்டலால் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை: தென் மாவட்டங்களுக்கு செல்லும் குருவாயூர், கன்னியாகுமரி, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்களை தீ வைத்து எரிக்கப்போவதாக வந்த மிரட்டலால் ரயில்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலைய மேலாளர் உமா சங்கருக்கு நேற்று  ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், ஞாயிற்றுக்கிழமை முதல் வெள்ளிக்கிழமைக்குள் குருவாயூர், அனந்தபுரி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது, பெட்டிகளை தனித்தனியாக கழற்றி விடுவோம் அல்லது தீயிட்டு எரிப்போம். முடிந்தால் தடுத்துப்பார். நாங்கள் வியாபாரியாகவோ, திருநங்கையாகவோ, பொதுமக்களாகவோ, போலீசாகவோ வருவோம். ரயில்கள் காட்டுப்பாதைக்குள் வரும் போது எங்கள் திட்டத்தை நிறைவேற்றுவோம். சென்னை வருவதற்குள் கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என்று எழுதப்பட்டு இருந்தது.

மேலும் கடிதத்தில் தமிழ் வாழ்க என்றும், தமிழ் வீரப்படை, கடிதத்தை எழுதியவர் பெயர் செந்தமிழ் அழகன் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

##~~##
இது குறித்து ரயில்வே மேலாளர் உமா சங்கர் எழும்பூர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் புகார் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, ரயில்வே உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும் தென் மாவட்ட ரயில்களில் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஒவ்வொரு வண்டியிலும், ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், 2 ஆயுதம் ஏந்திய போலீசார் மற்றும் 2 போலீசார் பயணம் மேற்கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரயில்கள் நின்று செல்லும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு பணியில் ரயில்வே பாதுகாப்புபடை போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று ரயில்வே போலீஸ் எஸ்.பி.கயல்விழி தெரிவித்துள்ளார்.