காரின் கியர்பாக்ஸைப் பராமரிப்பது எப்படி?!

தற்போது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மீது மக்களின் ஆர்வம் அதிகரிப்பதைப் பார்க்க முடிகிறது. எந்தச் சத்தமுமின்றி கியர்களை மாற்றவும்/மாறவும், கியர்பாக்ஸை எப்படிப் பராமரிப்பது என்பதைப் பற்றியும் பார்ப்போம். 

காரின் கியர்பாக்ஸைப் பராமரிப்பது எப்படி?!

கியர்பாக்ஸ்... பெயருக்கு ஏற்றபடி இது காரில் கியர்களை மாற்றக்கூடிய அமைப்பு மட்டுமல்ல, இன்ஜினின் செயல்திறனை (பவர் மற்றும் டார்க்) தேவைக்கு ஏற்ப சக்கரங்களுக்குக் கடத்துவதே கியர்பாக்ஸின் பணி. கார்களில் FWD/RWD/AWD என டிரைவ் சிஸ்டம் எப்படி இருந்தாலும், கியர்பாக்ஸின் வேலை ஒன்றுதான். `ஒருவர் தனது காரை சர்வீஸுக்கு விடும்போது, அவர் பெரும்பாலும் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளாத விஷயம் கியர்பாக்ஸ்தான்' என ஆய்வுகள் சொல்கின்றன. 

காரில் இன்ஜின்போலவே கியர்பாக்ஸும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் பாகம் என்பதை அவர்கள் மறந்துவிடுவது ஏனோ? இதனாலேயே பல வாகனங்களில் கியர் போடும்போது காரில் ஒருவித சத்தம்/அதிர்வு ஏற்படுவதை உணர முடியும். மேனுவல் கியர்பாக்ஸ்தான் கார்களில் ஸ்டாண்டர்டாக இருந்தாலும், தற்போது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மீது மக்களின் ஆர்வம் அதிகரிப்பதைப் பார்க்க முடிகிறது. எந்தச் சத்தமுமின்றி கியர்களை மாற்றவும்/மாறவும், கியர்பாக்ஸை எப்படிப் பராமரிப்பது என்பதைப் பற்றியும் பார்ப்போம். 

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் செக் செய்யவேண்டியது என்ன?

கியர்பாக்ஸ்

இன்ஜினில் உராய்வுத்தன்மையை எப்படி இன்ஜின் ஆயில் கட்டுப்படுத்துகிறதோ, அதேபோல கியர்பாக்ஸுக்கும் தனியாக ஒரு திரவம் உண்டு. இது மேனுவல் கியர்பாக்ஸுக்குள் இருக்கும் பாகங்களைக் குளிர்வித்து, அவற்றின் உராய்வுத்தன்மையைக் கட்டுப்படுத்துகிறது. இதுவே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்றால், ஹைட்ராலிக் பவரைக் கடத்துவதே இந்தத் திரவத்தின் கடமை. எனவே, மேனுவல் கியர்பாக்ஸுடன் ஒப்பிடும்போது, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் வெப்பநிலை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

பராமரிப்பது

இதனால் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் சுத்தமான திரவம் இருப்பது அவசியம். அந்தத் திரவத்துக்கான காலக்கெடு, காரின் மேனுவலில் இருக்கும். எனவே, சரியான இடைவெளியில் திரவம் மற்றும் அதற்கான ஃபில்டர்களை மாற்றிவந்தால், கியர்பாக்ஸின் ஆயுள்காலம் கூடும். காரின் இன்ஜின் இயங்கிக்கொண்டிருக்கும்போது கியர்பாக்ஸ் திரவம் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்க்கக் கூடாது. பெரும்பாலும் கார் நிழலில் நிற்கும்போதோ அல்லது பார்க்கிங்கில் நியூட்ரலில் உள்ளபோதுதான் திரவத்தின் அளவைச் செக் செய்ய வேண்டும். இதற்கு அங்கே வழங்கப்பட்டிருக்கும் Dip Stick போதுமானது. திரவத்தின் நிறமும் தன்மையும் முக்கியம்.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் செய்யக் கூடாதவை என்ன?

எந்த வாகனத்தையுமே Breakdown Maintanence செய்வதைவிட, Preventive Maintanence செய்வதே சாலச்சிறந்தது. அதாவது, பிரச்னை வரும்போது காரை சர்வீஸ் செய்வதைவிட பிரச்னை வருவதற்கு முன்பே குறிப்பிட்ட காலத்தில் காரை சர்வீஸ் செய்வதே, நமது பர்ஸுக்கும் நமக்கும் நன்மை தரும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைப் பொறுத்தவரை, காரை நிறுத்திவிட்டே டிரைவ் அல்லது ரிவர்ஸ் மோடைப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், அது கியர்பாக்ஸுக்குக் கூடுதல் அழுத்தத்தைத் தந்து, அதன் செயல்திறனைப் பாதிக்கும்.

பராமரிப்பு

நெடுஞ்சாலைகளில் நிலையான வேகத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, கியர்பாக்ஸை நியூட்ரல் மோடுக்குக் கொண்டுவரக் கூடாது. இது மேனுவல் கியர்பாக்ஸுக்குச் சரியாக இருந்தாலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு இந்த விதிமுறை பொருந்தாது. அதேபோல நியூட்ரல் மோடில் இருக்கும்போது, ஆக்ஸிலரேட்டரை தேவையில்லாமல் அழுத்திக்கொண்டே இருப்பது தவறு. அது கியர்பாக்ஸுக்குள் இருக்கும் பாகங்களைப் பாதித்துவிடும். 

பராமரிப்பு

காரை ஆஃப் செய்யவோ அல்லது நிறுத்தப்போகிறீர்கள் என்றால், உடனடியாக பார்க்கிங் அல்லது நியூட்ரல் மோடுக்கு வராமல், டிரைவ் மோடிலேயே காரை நிறுத்த வேண்டும். இதனால் கியர்பாக்ஸில் ஏற்படும் அழுத்தம் கட்டுப்படுத்தப்படும். அதேபோல காரின் நிர்ணயிக்கப்பட்ட பே-லோடு அளவைவிட அதிக சுமையை, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கொண்ட கார் இழுக்க நேரிட்டால், அது காரின் கியர்பாக்ஸை விரைவிலேயே செயலிழக்கவைத்துவிடும். 

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் கோளாறு என்பதைத் தெரிந்துகொள்வது எப்படி?

பராமரிப்பு

போதுமான பவர் கிடைக்காமல் கார் திணறுகிறதா? கியர்கள் உடனே மாறாமல் ஸ்லிப் ஆகிறதா? கியர்கள் வழக்கம்போல உடனுக்குடன் மாறுவதில் தாமதம் ஏற்படுகிறதா? இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் `இன்ஜின் செக்' இண்டிகேட்டர் தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறதா? இந்தப் பிரச்னைகள் எல்லாம் உங்கள் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கொண்ட காரில் இருக்கின்றன என்றால், கியர்பாக்ஸில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கிறது என அர்த்தம். இந்த நேரத்தில் ஸ்பார்க் ப்ளக்/ஏர் ஃபில்டர் மற்றும் ஃப்யூல் இன்ஜெக்டர்/கேட்டலிட்டிக் கன்வெர்ட்டர் ஆகியவற்றையும் செக் செய்துவிடுவது நல்லது. பரிந்துரைக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் கியர்பாக்ஸை சர்வீஸ் செய்தால்தான், வாரன்ட்டி அல்லது க்ளெய்ம் கிடைப்பதில் எந்தச் சிக்கலும் ஏழாது.

மேனுவல் கியர்பாக்ஸில் செக் செய்யவேண்டியது என்ன?

பராமரிப்பு

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைவிட மேனுவல் கியர்பாக்ஸுக்குள் இருக்கும் மெக்கானிக்கல் பாகங்கள் அதிகம். அந்த மெட்டல் பாகங்களிடையே உராய்வுத்தன்மையைக் கட்டுப்படுத்த, கியர்பாக்ஸ் ஆயில் சுத்தமானதாக இருத்தல் அவசியம். எனவே, இன்ஜின் ஆயிலை மாற்றும்போதே, கியர்பாக்ஸ் ஆயிலையும் மாற்றிவிடுவது நன்மை தரும். 

பிரஷர் பிளேட் மற்றும் ஃப்ளைவீல் ஆகியவற்றில் ஆயில் இருக்கக் கூடாது. அதேபோல, க்ளட்ச்சும் சுத்தமாக இருத்தல் நலம். புதிதாக கார் ஓட்டப்போகிறீர்கள் என்றால், க்ளட்ச்சை முழுவதுமாக அழுத்தி, பிறகு தன்மையாக கியர் மாற்ற வேண்டும். உங்கள் பலத்தை கியர் லீவரில் காட்டுவது, கியர்பாக்ஸின் உள்ளே இருக்கும் பாகங்களைப் பாதிக்கும்.

மேனுவல் கியர்பாக்ஸில் கோளாறு என்பதைத் தெரிந்துகொள்வது எப்படி?

கியர்பாக்ஸில் வழக்கத்தைவிட இரைச்சல், அதிர்வுகள் அதிகமாகத் தெரிந்தால், கியர்பாக்ஸையும் க்ளட்ச்சையும் செக் செய்ய வேண்டும். அதேபோல டிஸ்க் மற்றும் பிரஷர் பிளேட்டில் துரு அல்லது அழுக்கு படிந்திருந்தால், அதன் அலைன்மென்ட் மாறுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

அதேபோல Dowel Pin மிஸ்ஸானால், ஒட்டுமொத்த மேனுவல் கியர்பாக்ஸின் அலைன்மென்ட்டே மாறிவிடும்! இதனால் கியர்பாக்ஸின் ஒருபுறம் மிகவும் தேய்ந்து, அது செயலிழந்துவிடுவதற்கான வாய்ப்புகளை உண்டாக்கிவிடும். 

பராமரிப்பு

க்ளட்ச்சின் தேய்மானம் அதிகமாக இருந்தால், கியர்கள் ஸ்லிப் ஆவது அதிகமாக இருக்கும். இன்ஜினின் பின்பக்க சீலைப் புதிதாக மாற்றினால், இந்தப் பிரச்னை தவிர்க்கப்படும். அதேபோல கேபினுக்குள் கியர் லீவரைச் சுற்றியிருக்கும் ரப்பர் பகுதியைப் பராமரிப்பதும் அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!