வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (07/08/2018)

கடைசி தொடர்பு:22:00 (07/08/2018)

கிராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார்... டாடா நெக்ஸான் பாதுகாப்பில் அதிரடி!

கார்களின் பாதுகாப்பை சோதிக்கும் முறைதான், கிராஷ் டெஸ்ட். டாடாவின் காம்பாக்ட் எஸ்யூவியான நெக்ஸானின் கிராஷ் டெஸ்ட் முடிவுகள் வெளியாகியுள்ளன.  Global Ncap டெஸ்ட்டில் நெக்ஸான், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார் ரேட்டிங்கும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 ஸ்டார் ரேட்டிங்கும் வாங்கியுள்ளது. இதுவரை டெஸ்ட் செய்யப்பட்ட இந்திய கார்களிலேயே அதிக மதிப்பெண்ணை (13.56/17.00) வாங்கியுள்ளது நெக்ஸான்.

டாடா நெக்ஸான்

 Ncap-யின் டெஸ்ட் ரிபோர்ட்டின்படி காரில் பெரிய விபத்து ஏற்பட்டாலும், பயணிப்பவர்களின் தலை, கழுத்து மற்றும் மார்பகப் பகுதிகளுக்கு பாதிப்பு இருக்காது. காரின் ஒருபாதியை மட்டும் மோதி டெஸ்ட் செய்யும் ஆஃப்செட் டெஸ்ட்டிலும் நெக்ஸானின் பாடியை ஸ்டேபில் என்று குறிப்பிட்டுள்ளார்கள். நெக்ஸானின் அனைத்து வேரியன்ட்டிலும் 2 காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக் வருவது காரை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றுகிறது.

Tata Nexon

ஐஸோஃபிக்ஸ் மவுன்டுகள் வருவதால், குழந்தைகள் பாதுகாப்பில் டாடா நெக்ஸான் 3 ஸ்டார் பெற்றுள்ளது. ஆனால், ஐஸோஃபிக்ஸ்  XZ+ மற்றும்  XZA+ வேரியன்ட்டுகளில் மட்டுமே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. விட்டாரா பிரெஸ்ஸாவின் கிராஷ் டெஸ்ட் முடிவுகள் இன்னும் வெளியிடப்படாதநிலையில், டாடா நெக்ஸான் பாதுகாப்பில் பாஸ் மார்க் வாங்கியது, போட்டியை இன்னும் அதிகரித்துள்ளது.