ராஜஸ்தானில் இணையதள சேவை துண்டிப்பு..! டெலிகிராம் ஆப்ரேட்டர் சங்கம் புகார்

இந்தியாவில் 2012-2017 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இண்டர்நெட் சேவை துண்டிப்பால் 87,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தி டெலிக்காரம் ஆப்ரேட்டர் சங்கம் தெரிவித்துள்ளது. 

ராஜஸ்தான் மாநில அரசு, தேர்வுகளில் விதிமீறல்களை தடுக்க, சமீபத்தில் மாநிலம் முழுவதும் இன்டர்நெட் சேவையை துண்டித்துள்ளது. இதை எதிர்த்து தி டெலிக்காரம் ஆப்ரேட்டர் சங்கம், செல்லுலார் ஆப்ரேட்டர் அசோசியேசன் ஆஃப் இந்தியா(COAI)தொலை‌தொடர்பு துறைக்கு புகார் கடித்தத்தை அனுப்பியுள்ளது.

அதில் கூறியதாவது இன்டர்நெட் சேவை கடந்த ஆறு மாதங்களில் 50 முறைக்கு மேல் ராஜஸ்தானில் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2017 முதல் இதுவரை 140 முறை இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது. இது போன்ற இ சேவை பல்வேறு அரசு தேர்வுகளின் போது முடக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 5, 2018ம் ஆண்டு ராஜஸ்தான் அட்மினிஸ்டேரேடிவ் சர்வீஸ் (RAS),மாநில காவல் துறை தேர்வு, மற்றும் பல போட்டித் தேர்வுகளின் போது மாநிலத்தில் இன்டர்நெட் ‌சேவை துண்டிக்கப்பட்டுள்ளன.

 இதுபோன்ற முடக்கத்தால் சேவை நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. Indian Council for Research on International Economic Relation(ICRIER) இதுதொடர்பான அறிக்கை ஒன்றை கடந்த ஏப்ரல் 25, 2018 அன்று வெளியிட்டது. அதில் 2012 - 2017 வரையில் இந்தியா முழுவதும் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்ட நேரத்தை கணக்கிட்ட போது சராசரியாக 680 நாள் ஆகும். இதனால் இந்திய மதிப்பு படி 87,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. "தொடர்ந்து இன்டர்நெட் சேவை துண்டிப்பால் மத்திய அரசின் 'டிஜிட்டல் இந்திய மிஷன்' பெரிதும் பாதிப்படையும்", என COAI தெரிவித்துள்ளது. 

இத்தகைய இன்டர்நெட் துண்டிப்பு நடவடிக்கை 'தற்காலிக டெலிகாம் சேவை துண்டிப்பு,  2017' விதிமுறைகளை மீறுவதாகும். இதுபோன்ற இன்டர்நெட் சேவை முடக்கம் தவிர்க்க முடியாத சூழலில் மாநில தலைமை செயலாளர் மட்டுமே உத்தரவு பிறபிக்க முடியும். ஆனால் இவற்றை மீறி ராஜஸ்தான் அரசு செயல்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!