Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

* ‘`மறுபடியும் பாண்டாக நடித்தால், என் மணிக்கட்டுகளை அறுத்துக்கொள்வேன்’’ என `ஸ்பெக்டர்’ படத்தில் நடிக்கும்போதே பொங்கி எழுந்து பேட்டி கொடுத்து இருந்தார் டேனியல் கிரெய்க். `ஸ்பெக்டர்’தான் அவர் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் கடைசிப்படம் என்றே எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க, மீண்டும் பாண்டாக நடிக்க ஒப்பந்தம் ஆக இருக்கிறார் என்கிற ஹாலிவுட் வட்டாரம். 1969-ல் வெளியான `ஆன்  ஹெர் மெஜெஸ்டீஸ் சீக்ரெட் சர்வீஸ்’ படத்தின் ரீமேக்காக இந்தப் படம் இருக்கும் என்கிறார்கள். பாண்ட் இஸ் பேக்!

* இயக்குநராகிறார் ஷாம்லி. கடந்த ஆண்டு விக்ரம் பிரபு உடன் ‘வீரசிவாஜி’ படத்தில் நடித்தார் ஷாம்லி. படம் சரியாகப் போகததால் தமிழுக்கு பிரேக் போட்டுவிட்டு தற்போது மீண்டும் ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்புகொண்டு இருக்கிறார். ஆனால் ஷாம்லிக்கு நடிப்பைவிட இயக்கமே விருப்பம். தமிழில் இயக்குநராக அறிமுகமாக தயாரிப்பாளர்களிடம் தீவிரமாக கதை சொல்லிக்கொண்டிருக்கிறார். சீக்கிரமே டைரக்டர் ஷாலினியைப் பார்க்கலாம். ஹீரோ தலதானே!

* ஜி.வி.பிரகாஷின் அட்ராசிட்டிகள் தொடர்கின்றன. ‘அன்பானவன், அடங்காதவன், அசராதவன்’  இயக்கி திகிலூட்டிய ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் இணைகிறார் ஜி.வி.பி. ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தின் பார்ட்-2 வாக இருக்குமாம் இந்தப் படம். ஆனால், இதில் பிரகாஷுக்கு நாலு ஹீரோயின்களாம். கெட் ரெடி ஃபோக்ஸ்!

இன்பாக்ஸ்

* ரஜினிகாந்த்-எஸ்.பி.முத்துராமன் காம்போபோல அஜித்- சிவா காம்போ தொடர்கிறது. ‘வீரம்’ என்ற கிராமத்துக் கதையில் தொடங்கிய நட்பு, ‘வேதாளம்’ கடந்து இப்போது ‘விவேகம்’ படத்தில் வந்து நிற்கிறது. அடுத்த படத்தையும் இவர்கள் இருவரும்தான் சேர்ந்து செய்கிறார்கள். ‘‘அஜித் சாருடன் நான்காவது படம் எனக்கே ஆச்சர்யம்’’ என கொண்டாடிக்கொண்டிருக்கிறார்  சிவா. இயக்குநர் ஓகே, படத்தின் தயாரிப்பாளராக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என இங்கி, பிங்கி, பாங்கி போட்டுக்கொண்டிருக்கிறார் தல! சாய்...சாய்!

இன்பாக்ஸ்

* ஆர்சனல் கால்பந்தாட்ட அணி வீரர் தியோ வால்காட் தன் முதுகில் ‘ஓம் நமசிவாய’ என்று பச்சைக் குத்திக்கொண்டது தான் சென்ற வார வைரல். புதிய டாட்டூவை ஆர்வத்தோடு ட்விட்டரில் பகிர்ந்துகொள்ள... ஓம் நமசிவாயவுக்குப் பதிலாக அது ஓம்நமசவாய என்று தவறாக இருந்தது. இந்திய ரசிகர்கள் ‘அண்ணா தெய்வக் குத்தம் ஆகிடுச்சுங்கண்ணா’ எனப் பொங்கித் தீர்த்தனர். பரிகாரம் பண்ணிடுங்க தியோ!

இன்பாக்ஸ்

* நூறு நாள்களுக்கு முன்பு மும்பையின் சமீர் சிங் ஒரு முயற்சியில் இறங்கினார். நூறு நாள்களில் தினமும் நூறு கிலோமீட்டர் வீதம், பத்தாயிரம் கிலோ மீட்டர்கள் ஓடுவது! 99 நாள்களாகத் தொடர்ந்த அவருடைய முயற்சி நூறாவது நாளில் தோற்றுப்போனது. 9,964 கிலோமீட்டர்கள்தான் அவர் ஓடி முடித்தார். இது உலக அளவில் மிக முக்கியமான முயற்சி. கிட்டத்தட்ட பூமியின் சுற்றளவை ஒன்றே முக்கால்முறைச் சுற்றி வருகிற அளவுக்கு ஓட வேண்டும்; அதுவும் தினமும். கடைசி நாளில் அவருக்கு உடல்நலக் குறைபாடு உண்டாக, அவரால் இந்தச் சவாலை வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. இருந்தாலும் அவருடைய முயற்சிக்கு உலக அளவில் வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்கின்றன. இதைவிடப் பெரிய முயற்சியை மீண்டும் செய்வேன் என்று உற்சாகம் குறையாமல் சொல்லி இருக்கிறார் சமீர். வாட் ஏ மேன்!

இன்பாக்ஸ்

* துல்கர் சல்மான், நிவின் பாலி, ஃபஹத் பாசில் வரிசையில் தமிழுக்கு வருகிறார் மலையாள நடிகர் டொவினோ தாமஸ். இவர் தனுஷ் தயாரிக்கும் மலையாளப் படமான ‘தரங்கம்’ பட ஹீரோ. இவர் பி.ஆர்.பந்துலுவின் மகள் விஜயலட்சுமி இயக்கும் ‘அபியும் அனுவும்’ படத்தில் நடிக்கிறார்.
வெல்கம் சேட்டா

இன்பாக்ஸ்

* பாட்மின்டன் சிந்து  இப்போது டெபுடி கலெக்டர். ‘`இந்த மக்களுக்காகப் பணியாற்றுவதையும், அவர்களுக்காக உழைப்பதையும் பெருமையாக நினைக்கிறேன்’’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பாட்மின்டனில் மட்டும்தான் கவனம் செலுத்த இருக்கிறாராம் சிந்து. அதற்குப் பிறகுதான் முழுநேர மக்கள் பணியாம். நைஸ் தோழி!

இன்பாக்ஸ்

* வெப்சீரிஸ் பண்ணுவதுதான் இப்போது ஃபேஷன். சீக்கிரமே ஒரு புதுமையான வெப்சீரிஸ் ஒன்றைத் தயாரிக்க இருக்கிறார் தனுஷ். ‘`இரண்டு வருடங் களாகவே இந்த புராஜெக்ட் கிடப்பில் இருக்கிறது. இந்த வெப்சீரிஸில் நானும் நடிப்பேனா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், `வட சென்னை’ முடிந்ததும் ஆரம்பித்து விடுவோம்’’ எனச் சொல்லியிருக்கிறார் தனுஷ். நீங்க நடத்துங்க ப்ரோ!