Published:Updated:

"அப்போ ப்ளூவேல்... இப்போ மோமோ!" - அலர்ட் குறிப்புகள் #MomoChallenge

விகடன் விமர்சனக்குழு
"அப்போ ப்ளூவேல்... இப்போ மோமோ!" - அலர்ட் குறிப்புகள்  #MomoChallenge
"அப்போ ப்ளூவேல்... இப்போ மோமோ!" - அலர்ட் குறிப்புகள் #MomoChallenge

ஒருபுறம் விதவிதமாக டைட்டில் போட்டு இதுதான் மோமோ சேலஞ்சா!! என யூடியூபில் பீதியை கிளப்ப, மறுப்புறம் அதையே 'கண்டெண்ட்' ஆக எடுத்துக்கொண்டு கலாய்க்க ஆரம்பித்துவிட்டது 'மீம் கிரியேட்டர்' சமூகம்.

அர்ஜென்டினாவில் 12 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். என்ன காரணம் என்ற போலீஸ் விசாரணையில் அந்த சிறுமியின் மொபைல் மூலம் மிகப்பெரிய அதிர்ச்சி.சமீப காலமாக அவளின் வாட்ஸஅப்பிற்கு ஏதோ முகம் தெரியாத நபர்கள் புதுப்புது கட்டளையிட்டு மிரட்டியுள்ளனர். அதை ஏற்க வேண்டும்.மறுக்கும் விதத்தில் மனிதன்-விலங்கு-ஏலியன் என்ற கலவையில் கொடூரமான உருவம் பல்வேறு விதமான அலறல்களுடன் அச்சுறுத்தும். இறுதியில் உங்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவோம் என்று மிரட்டி தற்கொலை எண்ணத்தைத் தூண்டும்...கதம்!. இதுதான் காரணமாக இருக்கும் என்கிறார்கள்.இதோ டீனேஜ் தலைமுறையை மிரட்ட வந்துள்ளது அடுத்த சவாலான 'மோமோ சேலஞ்ச்'.

ஒரு வழியாக ஒழிந்தது 'ப்ளூ வேல்' என்று சந்தோஷப்பட்ட  நெட்டிசன்களை கதறவிட அதன் தங்கையான மோமோ வந்துவிட்டாள்.'மிடோரி ஹயாசி' என்ற ஜப்பானிய பொம்மை வடிவமைப்பாளரால் வடிவமைக்கப்பட்ட மனிதன் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவையைத்தான் மோமோக்கான குறியீடாகச் சொல்கிறார்கள். அது இன்று ஹாக்கர்களின் வினையால் உயிரோடு விளையாடிக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, அமெரிக்கா, மெக்ஸிகோ போன்ற மேற்கத்திய நாடுகள் இதனால் பாதிப்படைந்துள்ளது என்று கூறப்பட்டாலும் அர்ஜென்டினா சிறுமி தற்கொலைக்கு பிறகே விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இணையத்தில் பலவீனமான இளைய தலைமுறையினரையே இதுபோன்ற தற்கொலை சவால்கள் மீண்டும் மீண்டும் குறிவைக்கின்றன. 

மோமோ சேலஞ்ச் என்பது என்ன?
அடையாளம் தெரியாத நபர்களால் சில எண்களிலிருந்து வாட்ஸ்அப் மூலம் நாம் தொடர்பு கொள்ளப்படுவோம். அவர்கள் இடும் கட்டளைகளை நாம் ஏற்று அதன்படி செய்ய வேண்டும். மறுத்தால் முதலில் அகோரமான படங்கள், வீடியோக்கள் கொண்டு மிரட்டப்படுவோம். கடைசியில் நம் தனிப்பட்டத் தகவல்களை இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டப்படுவோம். அவர்கள் சொல்லும் அத்தனை சேலஞ்சையும் நாம் செய்தாக வேண்டும் என்பதே மோமோ சேலஞ்ச். முதலில் ஃபேஸ்புக்கில் தொடங்கிய இந்த சேலஞ்ச் பின்னர் வாட்ஸ்அப் வழி அதிகம் பரவியதாக சொல்லப்படுகிறது. 

ஃபேஸ்புக்,ட்விட்டர்,வாட்ஸ் அப் போன்று பல தளங்களில் லிங்க் பகிரப்படுகிறது.  அப்படி என்னதான் இருக்கும் என்ற ஆர்வம் இறுதியில் நமக்கே ஆபத்தாய் முடிகிறது. இதனைச் செய்பவர்களின் நோக்கம் நமது தகவல் மூலம் நம்மை மிரட்டி நம்மிடமிருந்து கொள்ளையடிப்பதே என்று எச்சரிக்கிறது ஒரு நாட்டு போலீஸ். ஆனால், சைபர் க்ரைம் போலீஸோ மோமோ சேலஞ்ச் என்ற ஒன்று இல்லவே இல்லை. அது வதந்தி என அடித்துச் சொல்கிறது.

இந்தியாவில் மோமோ சேலஞ்ச் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்ல. ஆனாலும் காவல்துறை இது குறித்து எச்சரிக்கிறது. காரணம், இணையத்தில் எந்த விஷயமும் நொடிகளில் பரவிவிடும் ஆபத்து இருப்பதுதான். 

இன்ஸ்ட்டா போட்டோ முதல் பேஸ்புக் கட்டுரை வரை தினம் புதுப்புது சுவாரஸ்யங்களை நோக்கி பயணப்படும் நெட்டிசன்களுக்கு அதில் ஏற்படும் ட்ரெண்டிங்கும், சவால்களும் ஆர்வங்களைப் பரவலாக தூண்டுகிறது. அதில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஏற்படும் ஆசையை உணர்ந்தே ப்ளூவேல் முதல் மோமோ வரை பல சவால்கள் உள்ளே வருகின்றனர்.இதே ரகமான 'கிகி சேலஞ்' சமீபத்தில் அனைவரையும் கவர்ந்து உலக வைரல் ஆனது. எனவே,சமூக வலைத்தளங்களில் முடிந்த அளவிற்குக் கவனமாகவும் விழிப்புஉணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே உலக நலன் விரும்பிகளின் கோரிக்கை. இணையம் என்று வந்துவிட்டால் சுற்றி எந்தவொரு இரும்புத் திரையும் கிடையாது. நெட்டிசன்கள் எல்லோருமே ஒரு வகையில் விவேக்தான்.  'நீங்க மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சி சத்தமா பேசிக்கிட்டு இருக்கீங்க...'

ஒருபுறம் விதவிதமாக டைட்டில் போட்டு இதுதான் மோமோ சேலஞ்சா!! என யூடியூபில் பீதியைக் கிளப்ப, மறுபுறம் அதையே 'கன்டென்ட்' ஆக எடுத்துக்கொண்டு கலாய்க்க ஆரம்பித்துவிட்டது 'மீம் கிரியேட்டர்' சமூகம். சில நாட்களாக மோமோ அக்காதான் மீம் தமிழனின் செல்ல ராட்சசி. 


 

அடுத்த கட்டுரைக்கு