Published:Updated:

தட்கல் முன்பதிவு கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

தட்கல் முன்பதிவு கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
தட்கல் முன்பதிவு கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
தட்கல் முன்பதிவு கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

புதுடெல்லி: ரயில் பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்வதற்கான கட்டணமும், சரக்கு கட்டண உயர்வு ஆகியவை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.

மத்திய ரயில்வே பட்ஜெட்டில், தட்கல் முன்பதிவு கட்டணமும், அதிவிரைவு ரயிலுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டது.

அதன்படி, ஏ.சி வகுப்புகளுக்கான முன்பதிவு கட்டணம், தற்போது உள்ளதை விட 15 முதல் 25 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

##~~##
தட்கல் கட்டணம், இரண்டாம் வகுப்புக்கான அடிப்படை கட்டணத்தில் 10 சதவீதமும், அனைத்து ஏ.சி., வகுப்புகளுக்கும் 30 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
உறுதி செய்யப்பட்ட டிக்கெட்களை ரத்து செய்வதற்கான கட்டணம் 10 முதல் 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட்களை ரத்து செய்வதற்கு, படுக்கை வசதிக்கு ஐந்து ரூபாயும், ஏ.சி., வகுப்புகளுக்கு 10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன.
சரக்கு கட்டணமும் 5.7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.