வந்துவிட்டது யமஹா R15 V3.0 மோடோ ஜிபி எடிஷன்

யமஹா தனது R15 வெர்ஷன் 3.0 பைக்கின் மோடோ ஜிபி எடிஷனை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. இதன் விலை சாதாரண R15 V3.0-வைவிட 3,000 ரூபாய் அதிகம். இந்த லிமிடட் எடிஷன் மாடல் பைக்கின் முன்பதிவுகள் யமஹாவின் இணையதளத்தில் தொடங்கிவிட்டன. 10,000 ரூபாய் செலுத்தி இணையதளத்திலேயே பைக்கை முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு செய்த 40-45 நாள்களில் பைக் டெலிவரி செய்யப்படும் என்று கூறியுள்ளார்கள்.

யமஹா R15

மோடோ ஜிபி-யில் பயன்படுத்தப்படும் யமஹா  M1 பைக்கின் ரேஸிங் ப்ளூ நிறத்தில் மட்டுமே இந்த பைக் கிடைக்கும். மோடோ ஜிபி பைக்கில் வருவதுபோலவே மோவிஸ்டார் மற்றும் ENEOS ஸ்டிக்கர்கள் வருகிறது. ஹெட்லைட் மற்றும் ப்யூயல் டேங்க் கிராஃபிக்ஸும் மாற்றப்பட்டுள்ளது. யமஹா லோகோவும்கூட தங்க நிறத்தில் தனித்து தெரிகிறது. 

FZS Matte green

பைக்கின் ஸ்டைல் மட்டுமே மாறியுள்ளதே தவிர மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இல்லை. யமஹா  R15 V3.0 பைக்கில் நான்கு வால்வ், லிக்விட் கூல்டு,  FI,ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் வேரியபல் வால்வ் ஆக்சுவேஷன் தொழில்நுட்பம் கொண்ட 155cc சிங்கில் சிலிண்டர் இன்ஜின் மற்றும் அதன் கூட்டணியாக 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. இந்த இன்ஜின் 19.3bhp பவர் மற்றும் 15Nm டார்க் தருகிறது. 

FZS-FI Darknight

 R15 V3.0 மோடோ ஜிபி எடிஷனுடன் FZS-FI பைக்கின் இரண்டு டிஸ்க் பிரேக் கொண்ட மேட் க்ரீன் மற்றும் டார்க் நைட் வேரியன்டுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் ஆர்மடா ப்ளூவைவிட இதன் விலை 1,000 ரூபாய் அதிகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!