பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

 `மெர்சலி’ல் மூன்று விஜய். விவசாயப் போராளி, மருத்துவர், மேஜிக் கலைஞர் என வெரைட்டி கேரக்டர்ஸ். இதில் மேஜிக் கலைஞர் கேரக்டருக்காக மேசிடோனியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற மேஜிக் கலைஞர் கோகோ ரீக்யூயமிடம் பயிற்சி பெற்று இருக்கிறார் விஜய். `‘ `மெர்சல்’ பட மேஜிக் உங்களைக் கண்டிப்பாக ஆச்சர்யப்படுத்தும். அவர் எதைச் சொல்லிக்கொடுத்தாலும் வேகமாகக் கற்றுக்கொள்கிறார். மேஜிக்கில் எந்த வித அனுபவமும் இல்லாத ஒருவர் இவ்வளவு வேகமாக கற்றுக்கொள்வது ஆச்சர்யமாக இருந்தது’’ என சிலிர்க்கிறார் கோகோ. #லாஜிக் கேட்டா மேஜிக்னு சொல்லிடலாம்!

இன்பாக்ஸ்

பீலேவைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் ரொனால்டோ. உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் ஹாட்ரிக் கோல்களை அடித்து சர்வதேசப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் கால்பந்து ஜாம்பவான் பீலேவை முந்தி ஐந்தாவது இடம் பிடித்திருக்கிறார் ரொனால்டோ. 144 போட்டிகளில் 78 முறை கோல் போஸ்ட்டுக்குள் கிக் அடித்திருக்கிறார்! #நீ ஆடு ராசா!

இன்பாக்ஸ்

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பட கோகுல்-விஜய்சேதுபதி காம்பினேஷன் மீண்டும் இணைகிறது. இந்தப் படத்தை விஜய் சேதுபதியே தயாரிக்கிறார். ஆனால், படம் செம காஸ்ட்லி பட்ஜெட்.  20 கோடி ரூபாய்க்கு மேல் எகிறும் என்கிறார்கள். ‘வனமகன்’ சயீஷாதான் ஹீரோயின். படத்தின் பெயர் `ஜங்கா’. இதன் 60 சதவிகிதப் படப்பிடிப்பு பாரீஸில் நடக்கிறது. மீதி போர்ஷன், சென்னை, தூத்துக்குடியில் நடக்கிறதாம். #ஹேப்பி அண்ணாச்சி!

இன்பாக்ஸ்

விக்ரம்-ஹரியின் கூட்டணியில் `சாமி-2’ காஸ்ட்டிங் ரெடி. ஹீரோயின் த்ரிஷாவோடு புது கதாநாயகியாக கீர்த்தி சுரேஷும் விக்ரமோடு டூயட் பாட இருக்கிறார். வில்லன்தான் சர்ப்ரைஸ். பாபி சிம்ஹாதான் நடிக்கணும் என விக்ரமே டிக் அடித்திருக்கிறார். செப்டம்பர் 15 முதல் ஷூட்டிங்காம். #வா சாமி... வா சாமி!

பீகாரில் மீண்டும் பா.ஜ.க-வுக்கு எதிராக ஒன்று கூடியிருக்கின்றன மாநிலக் கட்சிகள்.  ``பா.ஜ.க-வை விரட்டுவோம்... நாட்டைக் காப்போம்’’ என்கிற முழக்கத்தோடு லல்லுபிரசாத் யாதவ் பாட்னாவில் நடத்திய கூட்டத்தில் அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மாநாட்டுக்கு மக்கள் கூட்டம் லட்சங்களில் திரள, அடுத்தநாளே வருமானவரித்துறை இந்தப் பேரணியை நடத்தியதற்கான வரவுசெலவு விபரங்களைக் கேட்டு நோட்டீஸ் அனுப்ப, கடுப்பில் இருக்கிறது லாலு தரப்பு. #விடாது கறுப்பு!

 கோலிவுட்டில் சிவகார்த்தியேன்தான் பிளானிங்கில் பக்கா எனப் பெயரெடுத்தவர். ஆனால், அவருக்கே ஒரு சின்னச் சறுக்கல். ‘வேலைக்காரன்’ படத்தை ஆயுதபூஜைக்கு ரிலீஸ் செய்வதுதான் திட்டம். ஆனால், படம் இப்போது டிசம்பருக்குத் தள்ளிப்போயிருக்கிறது. இதனால் ‘கருப்பன்’, ‘சர்வர் சுந்தரம்’, ‘அறம்’, `செம’, `பலூன்’ எனப் பல படங்கள் விடுமுறை ரிலீஸுக்குப் போட்டி போடுகின்றன #ட்ரீட் டிசம்பர்ல!

 அரசியல் பன்ச் அடிக்கிற நடிகர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல... ஹாலிவுட்டிலும் இப்போதெல்லாம் அதிகரித்துவிட்டார்கள். அதிலும் ட்ரம்ப் வந்தபிறகு ஹாலிவுட்டே அரசியல்வுட்டாகிவிட்டது. அர்னால்ட் தொடங்கி லியானார்டோ டி காப்ரியோ வரை ஆளாளுக்கு ட்ரம்பை விமர்சிக்க... இந்த லிஸ்டில் இப்போது இணைந்திருப்பது அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் புகழ்பெற்ற கிம் கர்தாஷியன். ‘`ட்ரம்பைவிட என் நான்கு வயது மகளே நல்ல ஆட்சி தருவாள். ட்ரம்பை நினைத்தாலே பயமாக இருக்கிறது. அப்படி இருக்கிறது அவருடைய ஆட்சி’’ என்று கமென்ட் அடிக்க... ஆளாளுக்கு கிம்மை `அரசியலுக்கு வா தலைவி’ என அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்! #அரசியல் அழகி!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு