வெளியிடப்பட்ட நேரம்: 14:23 (17/08/2018)

கடைசி தொடர்பு:14:23 (17/08/2018)

புதிய சான்ட்ரோவின் டிசைன் இப்படிதான் இருக்கும்... டீசர் வெளியிட்ட ஹூண்டாய்!

சிறிய குடும்பங்களின் ஃபேவரைட்டாக இருந்த சான்ட்ரோவை தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ப மாற்றியமைத்து, மீண்டும் கொண்டுவரப்போகிறது என்ற தகவல் வந்து சில மாதங்களே இருக்கும். இப்போது, அந்த காருக்கான டீசராக அதன் டிசைன் ஸ்கெட்ச் படத்தை வெளியிட்டுள்ளது ஹூண்டாய். இந்த காரை  AH2 குறியீடு எண் வைத்து அழைக்கிறார்கள்.

ஹூண்டாய் சான்ட்ரோ ஸ்கெட்ச்

படங்களை வைத்துப்பார்க்கும்போது  AH2-வின் டிசைன் சிறிய கார் போல இருந்தாலும், அதன் ஷார்ப்பான பாடி லைன்கள் காரை எஸ்யூவி போல கம்பீரமாகக் காட்டுகிறது. பெரிய வீல் ஆர்ச் இருக்கும் என்று தெரிகிறது. ஹூண்டாயின் இந்த  AH2 கார், தற்போது இருக்கும் இயான் காருக்குப் பதிலாகக் களமிறக்கப்படுகிறது. டிசைன் மற்றும் இதுவரை வெளியான ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, சான்ட்ரோ போல உயரமானதாக இருக்கும் என்று தோன்றுகிறது. மேலும், இதன் பாடி லைன்களும் பாடியின் டிசைனும் கார்லினோ போல இருப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு. சான்ட்ரோ ஜிங் காரில் இருந்த 1.1 லிட்டர் பெட்ரோல் இன்ஜினினை பிஎஸ்-  VI விதிமுறைகளுக்கு ஏற்றார்ப்போல அப்டேட் செய்து வெளியிடுவார்கள். கூடவே, விலை குறைவான 5 ஸ்பீடு   AMT கியர்பாக்ஸ் வரும் என்ற எதிர்பார்ப்புகளும் உண்டு. டாடா டியாகோ மற்றும் மாருதி சுஸூகி செலிரியோ கார்களுடன் போட்டிக்கும் வரும்  AH2 காருக்கு, மீண்டும் சான்ட்ரோ என்ற பெயர் வைப்பார்கள் என நினைத்தோம். ஆனால், இந்த காருக்கு பெயர் வைக்கும் பொறுப்பை மக்களிடமே விட்டுவிட்டது ஹூண்டாய்.

டெஸ்டிங்கில் சான்ட்ரோ

புதிய காருக்கான பெயர்களை  www.HyundaiNaamkaran.com எனும் இணையதளத்திலும் 8652000388 / 8652000399 என்ற வாட்ஸ்ஆப் எண்களிலும் அனுப்பலாம். யார் வைத்த பெயரை ஹூண்டாய் தேர்ந்தெடுக்கிறதோ, அவர்களுக்கு புதிய காரின் பேஸ் வேரியண்ட்டை பரிசளிப்பதாகக் கூறியுள்ளார்கள். ஆல் தி பெஸ்ட் ஹூண்டாய் பிரியர்களே.