Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

* கலகக்காரர் கங்கனா ரனாவத், சிலநாள்களுக்கு முன் முன்னாள் பாய் ஃப்ரெண்ட் ஹிரித்திக் ரோஷன் மீது அடுக் கடுக்கான புகார்களைச் சொல்லி அதிரவைத்தார். ஹிரித்திக் திரும்பிப் பொங்க வக்கீல்கள்மூலம் இருவரும் மோதிக் கொண்டனர். இந்த நிலையில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆதித்யா பஞ்சோலி மீதும் குற்றம் சுமத்தியிருக்கிறார் கங்கனா. ‘`ஆதித்யாவைத் தந்தைபோல நினைத் திருந்தேன். ஆனால், அவர் என்னை வீட்டில் பூட்டிவைத்து அடிமையைப் போல் நடத்தினார். பாலியல் தொந்தரவுகளும் அதிகம்’’ என்று சொல்ல அதிர்ந்துபோய் இருக்கிறது பாலிவுட். அதிரடிக்காரி...

இன்பாக்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

* இங்கிலாந்தின் குட்டி இளவரசர் ஜார்ஜ் திடீரென்று சென்றவாரம் வைரலானார். விஷயம் இதுதான்... இளவரசர் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்துள்ளார். லண்டனில் உள்ள கெனிங்ஸ்டன் மாளிகையில் அரச குடும்பம் வசிக்கிறது. அங்கிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள பள்ளியில் ஜார்ஜ் சேர்க்கப் பட்டுள்ளார். இங்கு படிக்க, ஆண்டுக்கு 18 லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. 560 குழந்தைகள் மட்டுமே இந்தப் பள்ளியில் படிக்கிறார்கள். ஃபீஸ் கம்மியாருக்கே!

இன்பாக்ஸ்

* யுவராஜ்சிங்கை இனி சர்வதேசப் போட்டிகளில் பார்க்க முடியாது எனப் புலம்புகிறது யுவிஆர்மி. ஃபிட்னஸ் டெஸ்ட்டான யோயோ-வில் ஏற்கெனவே தோல்வியடைந்து விட்ட யுவராஜ் சிங்கை இப்போது மேலும் அவமானப்படுத்தி இருக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம். ஆஸ்திரேலிய தொடருக்கான பரிசீலனைப் பட்டியலில் முதல் 74 வீரர்களில் கூட யுவராஜ் சிங்கின் பெயர் இல்லை. இதனால் யுவராஜ் சிங் இனி இந்திய அணிக்காக விளையாட மாட்டார் என ஃபீலிங் எமோஜிக்கள் நிரம்பிவழிகின்றன. மிஸ் யூ யுவி!

இன்பாக்ஸ்

* காற்றுவெளியிடை காலைவாரினாலும் அடுத்த படத்திற்குப் பரபரப்பாகத் தயாராகிவிட்டார் மணிரத்னம். படத்தில் விஜய்சேதுபதிதான் ஹீரோவாம். அவரோடு ஜோதிகா, அர்விந்த் சாமி, நானி, ஃபஹத்பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி ஆகியோரும் இருக்கிறார்களாம். அவருடைய ஆஸ்தான கலைஞர்களான ஏ.ஆர்.ரஹ்மான், சந்தோஷ்சிவன் என டெக்னிஷியன் டீமும் ரெடி! தமிழ்-தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராக இருக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சீக்கிரமே தொடங்குமாம்!  இந்தப்படை போதுமா?

* துபாய்-ஹைதராபாத்-சென்னை. இதுதான் ரஜினிகாந்த்-அக்ஷய்குமார்-ஷங்கர்-லைகா கூட்டணியில் தயாராகிவரும் ‘2.0’வின் ரிலீஸ் பிளான். அக்டோபரில் துபாயில் ஆடியோ ரிலீஸ், நவம்பரில் ஹைதராபாத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு, ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று சென்னையில் ட்ரெயிலர். இதைத்தொடர்ந்து ஜனவரி 25ம் தேதி படம் ரிலீஸ். பிளானிங் பக்கா!

* சைலன்ட்மோடில் இருந்த சன் பிக்ஸர்ஸ் மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கவுள்ளது. அடுத்தடுத்து இரண்டு பிரம்மாண்டப் படங்களுக்கான அறிவிப்புகள் வரவிருக்கின்றன. ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ‘காஞ்சனா-3’ படத்தைத் தயாரிக்க இருக்கிறார்கள். அதற்குப் பிறகு விஜய் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படமும் சன் பிக்ஸர்ஸ்தான்! வர்லாம்... வர்லாம் வா...