பனை மரத்தை அழிவிலிருந்து காக்க சாலையோரத்தில் விதைக்கப்பட்ட விதைகள்!

கும்பகோணத்தில் பனை மரத்தை அழிவிலிருந்து மீட்கும் முயற்சியாகச் சாலையோரம், குளம், ஏரி எனப் பல இடங்களில் ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்கபட உள்ளது. அதன் தொடக்கமாக இன்று இரண்டாயிரம் பனை விதைகள் விதைக்கபட்டன. மாவட்ட நிர்வாகம் மற்றும் வனம் தன்னார்வ அறக்கட்டளை ஏற்பாட்டில் கல்லூரி மாணவிகளைக் கொண்டு பனை விதைகள் விதைக்கும் பணி தொடங்கியது.

தமிழகத்தின் பாரம்பர்ய மரமான பனை மரத்தை அழிவிலிருந்து மீட்டெடுக்கவும், காவிரி டெல்டாவை வனம் மிகுந்த பகுதியாக மாற்றவும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பனை மரங்கள் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காகவும் கும்பகோணம் கோட்டத்தில் 20 இடங்களில் ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி பனை விதைகள் விதைக்கும் தொடக்க விழா கும்பகோணம் அருகே சாக்கோட்டை புறவழிச்சாலையில் நடைபெற்றது. இதில் சாலையோரத்தில் பனை விதைகளைக் கல்லூரி மாணவிகள் விதைத்தனர்.

இதில் கும்பகோணம் உதவி ஆட்சியர் பிரதீப்குமார் கலந்துகொண்டு பேசுகையில், `தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகமும், வனம் தன்னார்வ அமைப்பும் இணைந்து கும்பகோணம் கோட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்க திட்டமிடபட்டிருந்தது. இதன்படி சாக்கோட்டை செட்டிமண்டபம் புறவழிச்சாலையில் தொடங்கப்பட்டு சாலையில் இருபுறமும் பனை விதைகள் விதைக்கப்பட்டது. மேலும், கும்பகோணம் கோட்டத்தில் உள்ள குளம், ஏரி, அகலப்படுத்தப்பட்ட சாலை என 20 இடங்களில் பனை விதைகள் விதைக்கப்பட உள்ளது. இதன் முதல் தொடக்கமாக தற்போது 2,000 விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து ஒரு மாதத்துக்குள் மீதமுள்ள இலக்கை எட்டி பனை விதைகள் விதைக்கப்படும்’ என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!