வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (21/08/2018)

கடைசி தொடர்பு:17:42 (21/08/2018)

ஆன்லைன் முகவரியா, அது ஏன் முக்கியம்? - Exclusive Deal

"சைதாப்பேட்டையில் எங்க இருக்கீங்க?"

"நம்பர் 10, ஜெயராம் தெருவில் இருக்கேன்."

இப்படி நம் இருப்பிடம் அனைத்துக்கும் ஒரு முகவரி உண்டு. முகவரி என்பது இரு நபர்களின் சந்திப்பை சுலபமாக்கிவிடுகிறது. உதாரணமாக, உங்கள் முகவரியான --நம்பர் 10, ஜெயராம் தெரு--வில் நீங்கள் இருப்பதற்கு அதிக சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. அங்கே வந்து, (நீங்கள் அனுமதிக்கும் பட்சத்தில்) உங்களைப் பார்க்கலாம், சவுகரியம்போல காபி குடித்துக்கொண்டே உங்களோடு பேசலாம், உரையாடல் முடிவில் நாம் இருவரும் வாழ்நாள் நண்பர்கள் கூட ஆகலாம். எனவே, முகவரி என்பது நம் அடையாளத்தின் முக்கிய பங்காகும். அட்ரெஸ் இன்றி அலைபவரைவிட, அட்ரெஸ் உள்ளவரை எளிதில் தொடர்புகொள்ள முடியும். சில தெருக்களில் சில வீடுகள் பார்ப்பதற்கு டக்கராய் இருக்கும், அந்த வீட்டில் உள்ள மனிதர்களும் ஒருவேளை தங்களுடன் பேசும் அக்கம்பக்கத்தினரிடம் அன்பாக இருந்துவிட்டால் (கேட்கும்போதெல்லாம் ஒரு கப் சர்க்கரை கொடுக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம்), அந்த வீடு பிரபலம் ஆகிவிடுகிறது. 

முகவரி, வீட்டின் தோற்றம், வீட்டில் உள்ள மனிதர்களின் உதவும் சுபாவம் - இவையனைத்தும் சமுதாய உறவுக்கு உதவுகின்றன. இதுவே, இன்று இணைய உலகிலும் பிரதிபலிக்கிறது. இணையத்தைப் பொறுத்தவரை, உதாரணமாக www.ungalin.com எனும் இணையதளமே உங்களின் முகவரி, உள்ளே வந்து பார்ப்பவரின் விருப்பத்துக்கான அம்சம் - இணையதளத்தின் தோற்றம். உதவும் சுபாவம் என்பதை பயனர் இடைமுகம் (User Interface), அதாவது உங்கள் இணையதளத்தை பயன்படுத்துவபவரின் அனுபவத்தை உத்தேசிக்கும் செயல்முறைகள் எனலாம்.

நாம் முப்பரிமான உலகில் செய்துக்கொண்டிருந்த பலவற்றை இப்போது இணையத்திலும் செய்யமுடிகிறது. உதாரணத்துக்கு திண்டுக்கல்லில் உட்கார்ந்துகொண்டு திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா ஆர்டர் செய்யலாம், சான் பிரான்சிஸ்கோ-வில் பணிபுரியும் இன்பாவுக்கு, சேலத்தில் இருக்கும் யாழினியைப் பெண் கேட்கலாம், காய்கறிகள் விற்கும் ராஜாத்தி, கத்திரிக்காயைப் படம்பிடித்து இணையத்தில் போட்டு, இந்த விலை, இவ்வளவு டிஸ்கவுண்ட் எனக் கூறி விற்கலாம், 'கூறு பத்து ரூபாய்' என கூவும் காலமல்ல இது என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டியது அவசியம்...

இணையதளம் என்பது தனிமனிதர்களை வெற்றி எனும் விண்ணுக்குக் கொண்டுசெல்லும் ராக்கெட்டுகள் போல, சந்தேகம் இருந்தால் ஜாக் மா, ஜெப் பெசோஸ், லாரி பேஜ் எனும் பெயர்களை கூகுளில் தட்டித் தெரிந்துகொள்ளுங்கள். இனி தொழில் துவங்கும்போது, தொழிலுக்குத் தேவையான இடம் பிடிக்கிறீர்களோ இல்லையோ, உங்கள் தொழிலுக்கான இணையத்தளத்தை முதலில் வடிமைத்துக்கொள்வது மிக முக்கியம்!

இணையதளம் - ஏன், எதற்கு, எதனால்ல்ல்?

இணையம் சார்ந்தே இனிவரப்போகும் வியாபாரங்கள் வடிவமைக்கப்படும் என்பதால் உங்களின் கஸ்டமர்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்!
உங்களின் போட்டிகள் ஏற்கனவே சூப்பரான இணையதளம் வைத்திருக்கிறார்கள்! அதனால் தாங்களும் செய்யவேண்டும். இது மற்றவரைப் பார்த்து காப்பியடிப்பதல்ல, இணையதளம் ஒரு அத்தியாவசியம்!
முன்பு சொன்னது போல, இணையதளம்தான் இணையத்தில் உங்களின் முகவரி, உங்களின் தனி அடையாளம்!
நீங்கள் யார் என உங்கள் குரலில் சிறப்பாக எடுத்துச் சொல்லலாம்!
எந்நேரத்திலும் உங்களைப் பற்றிய விஷயங்களைக் கஸ்டமர்கள் தெரிந்துகொள்ளவும், நீங்கள் அளிக்கும் சேவைகளைப் பெறவும் வெப்சைட் உதவுகிறது.
கூகுள் தேடலில் நீங்களும் வருவீர்களே!

இசைக் கலைஞர்கள், பன்முக திறமைப் படைத்தவர்கள், எழுத்தாளர்கள், ஆன்லைன் வர்த்தகர்கள், தொழில் முனைவோர், தொழிலைப் பெருக்க நினைப்பவர்கள், 24 மணி நேர சேவை வழங்குவோர் என எல்லோருக்கும் இணையதளம் என்பது இன்றியமையாதது. நீங்கள் சிறப்பாக வேலை செய்பவர் என்றால், உங்களின் திறமைகளை, உங்கள் அனுபவங்களை எல்லாம் உங்களின் பிரத்தியேக இணையதளத்தில் வெளியிடலாம். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு மாற நினைத்தால், ரெஸ்யூமேவில் உங்களின் இணையதளத்தை ஹைலைட் செய்துகாட்டுங்கள், நிச்சயம் HR பிரதிநிதி அதை கவனிப்பார்!

ஏன் mywebbee.com?

சரி இணையதளம் தொடங்க வேண்டும், எங்கு செல்வது என இணையத்தில் தேடினால் ஆயிரம் டொமைன் விற்கும் இணையதளங்கள் மற்றும் வெப் ஹோஸ்டிங் தளங்களை நீங்கள் காண நேரிடும் இது மிகுந்த குழப்பத்தையே உங்களுக்கு ஏற்படுத்தக்கூடும். www.mywebbee.com எனும் வெப் ஹோஸ்டிங் நிறுவனம் தமிழகத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழக மக்களின் பல்ஸ் தெரிந்து நமக்கு ஏற்ற வெப்சைட்களை வடிவமைத்துக் கொடுக்கிறது www.mywebbee.com. ஹேக்கிங் மற்றும் முறையற்ற ஆக்ஸஸ் மூலம் நம் தகவல் மற்றும் பரிவர்த்தனைகள் வெளியாகாமல் பாதுகாக்கும் SSL ஹோஸ்டிங் சேவையையும் வழங்குகிறது www.mywebbee.com. இந்தியா மட்டுமல்ல உலகின் எந்த மூலையில் உட்கார்ந்துகொண்டும் உங்களின் இணையதளத்தை சொந்தமாக வாங்கலாம் (பராமரிப்பு செலவும் சில ஆயிரங்களே!). மேலும், சேவை சம்பந்தப்பட்ட அனைத்து ஆதரவையும் வருடம் முழுவதும் 24 மணி நேரமும், போன்/இ-மெயில்/லைவ் சாட் மூலம் உள்ளூர் மொழியிலேயே, எவ்விதக் கட்டணமும் இன்றி வழங்குகிறது mywebbee. 

விகடன் வாசகர்களுக்கு, சிறப்பு சலுகையாக .com டொமெய்ன்களை mywebbee இலவசமாக வழங்குவதால், இந்த நல்ல வாய்ப்பைத் தவறவிட வேண்டாம்! மேலும் விவரங்களுக்கும், சந்தேகங்களைப் போக்கிக்கொள்ளவும், கீழ்க்கண்ட படிவத்தைப் பூர்த்தி செய்யவும்...

விவரங்களைப் பெற

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க