சமையல் அறைக்கு அடர்நிறங்களைத் தேர்வு செய்வது சரியா?#interior

ஒரு வீட்டுக்கான மொத்த இடத்தில் இருபது சதவிகிதமாவது அந்த வீட்டின் கிச்சனுக்கு ஒதுக்க வேண்டும்.

சமையல் அறைக்கு அடர்நிறங்களைத் தேர்வு செய்வது சரியா?#interior

டி ஓடி அலைந்து திரிந்து வீட்டுக்கு வரும்போது கிடைக்கும் நிம்மதிக்கு அளவுகோல் கிடையாது. அது சொந்த வீடாக இருந்தால் கேட்கவே வேண்டாம் நமக்கென்று ஒரு கூடு என்ற பேரானந்தம் கிடைக்கும். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் பெண்கள் சமையல் அறை ஏரியாவுக்கான இன்டீரியரில் அதிகம் மெனக்கிடுவார்கள். நம் வீட்டின் சமையல் அறை எப்படியெல்லாம் இருக்கலாம் என்கிற இன்டீரியர் டிப்ஸ்களை தருகிறார் சென்னையைச் சேர்ந்த டிசைனர் ஶ்ரீராம். ஶ்ரீ ராம்

சமையலறை வகைகள்:

ஒரு வீட்டுக்கான மொத்த இடத்தில் இருபது சதவிகிதமாவது அந்த வீட்டின் சமையலறைக்கு ஒதுக்க வேண்டும். சமையலறையில் இருக்கும் மேடையைப் பொறுத்தே அந்த வீட்டின் சமையலறை வடிவமைப்பைக் கண்டுபிடித்துவிடலாம். சமையலறை மேடை `எல்' ( L)  வடிவத்தில் அமைக்கப்பட்டால் அது எல் வடிவ சமையலறை. எதிர் எதிரே இரண்டு மேடைகள் அமைக்கப்பட்டால் அது கேலரி சமையலறை. மூன்று பக்கமும் மேடைகள் அமைக்கப்பட்டிருப்பது `யு' ( U) வடிவ கிச்சன். ஆங்கில எழுத்தான G போன்று வடிவமைக்கப்பட்டால் அது `ஐ லேண்ட் சமையலறை ( EyeLand) ' என நான்கு மாடல்களில் நம் பட்ஜெட்டுக்கு ஏற்ப சமையலறை இன்டீரியரை பிளான் செய்யலாம்.

யாருக்கு எது பெஸ்ட்:

* உங்கள் சமையலறையை 6 அடி அகலம் 8 அடி நீளத்துக்குச் சிறிய அளவில் பிளான் செய்கிறீர்கள் எனில், `எல் வடிவ' சமையலறையைத் தேர்வு செய்தால் சிம்பிள் அண்ட் நீட் லுக் கிடைக்கும்.

* 10 அடி அகலம் 8 அடி நீளம் எனச் சற்றுப் பெரிய சமையலறையாக பிளான் செய்கிறீர்கள் எனில் `யூ வடிவ' சமையலறை அல்லது கேலரி சமையலறையைத் தேர்வு செய்வதன் மூலம் கம்பஃர்டபிளாக வேலை செய்யலாம். 

* 12 அடி அகலம் 12 நீளம் அல்லது இதற்கும் அதிகமான நீள -அகலம் எனில் `ஐ லேண்ட் ( EyeLand) கிச்சன் உங்கள் வீட்டுக்குக் கூடுதல்  அழகைச் சேர்க்கும்.

சமையலறைக்கான பெயின்ட்:

சமையல் அறை

குறைவான பட்ஜெட் எனில் பெயின்டிங்கே பெஸ்ட் சாய்ஸ். சமையலறைக்கான நிறத்தைத் தேர்வு செய்யும் போது, அழுக்காகும் என நினைத்து நிறைய பேர் அடர் நிறங்களைத் தேர்வு செய்கிறார்கள். அப்படிச் செய்தால் சமையலறை பார்ப்பதற்கு சற்று இருட்டாகவே இருக்கும். எனவே, எப்போதும் வெளிர் நிறங்களைத் தேர்வு செய்யுங்கள்.

டைல்ஸ்:

சமையலறையில் டைல்ஸ் பதிக்கப்போகிறீர்கள் என்றால் தரையிலிருந்து ஏழு அடி உயரத்துக்கு டைல்ஸ்கள் இருப்பதுபோல பயன்படுத்தலாம். இது சமையலறையை எளிதாகச் சுத்தம் செய்ய உதவியாக இருக்கும். கொஞ்சம் டிரெண்டி வேண்டும் என்பவர்கள் கிளாஸ் பேக் ஸ்பிளாஷ் ( glass back splash) எனப்படும் கண்ணாடியினை சுவர்களில் பதிக்கலாம்.

சமையலறை வடிவமைப்பு:

பெரும்பாலும் காலையில் தெற்கு நோக்கி காற்று வீசும். எனவே, வீட்டினுடைய தென் கிழக்கு பக்கம் சமையலறை அமைவது நல்லது. இந்த அமைப்பு வெப்பத்தை கிச்சனிலிருந்து வெளியே தள்ளி, குறைவான வெப்பத்தை சமையலறையில் தக்கவைக்கும்.

சிங்க்:

பாத்திரம் கழுவும் சிங்க் மூன்றரை அடி உயரம் இருப்பது நல்லது. அதற்குக் குறைவான உயரம் எனில், குனிந்து பாத்திரம் கழுவுவது போன்று இருக்கும். இது முதுகு வலியை ஏற்படுத்தும். மூன்றரை அடிக்கு அதிகமான உயரம் எனில் கை வலி ஏற்படும். சமையலறையில் அடுப்பு வைக்கும் மேடைக்கு இடது புறம் பாத்திரம் கழுவும் இடம் இருக்க வேண்டும். அதாவது சிங்க். வலதுபுறம் மளிகைப் பொருள்கள் வைக்கும் அலமாரியும் இருக்க வேண்டும். இது உங்கள் வேலையைச் சுலபமாக்கும். மாடுலர் சமையலறை இல்லை. ஆனால், எங்கள் வீட்டு அலமாரியில் எல்லா சமையல் பொருள்களையும் அடுக்குவேன் என்பவர்கள் அடுப்புக்கு வலதுபுறம் இருக்கும் அலமாரியில் அத்தியாவசிய சமையல் பொருள்களை அடுக்குங்கள். மாடுலர் சமையலறை இருப்பவர்களும் இதையே ரேக்கில் ஃபாலோ செய்யலாம்.

அடுப்புக்குக் கீழ் மாடுலர் சமையலறை ரேக் வேண்டாம் என்று நினைப்பவர்கள் பாத்திரம் கழுவும் இடது புறமும், வலது புறமும் மளிகை பொருள்கள் வைக்க பிளான் செய்யலாம். இதே போன்று சமையலறையின் ஜன்னல், கிழக்குப் பக்கமாகப் பார்த்து இருப்பது நல்லது. பாத்திரம் கழுவும் இடத்துக்கும் அடுப்புக்கும் குறைந்த பட்சம் 4 அடி இடைவெளியாவது இருக்க வேண்டும். சமையலறையில் அழகுக்காகப் பொருள்களை வைக்க வேண்டாம். அதன் பக்கம் நம் கவனம் சென்று சமையலில் கவனம் பிசகும் என்பதால் அழகு பொருள்களுக்குச் சமையலறையில் நோ ஸ்பேஸ்.  

சிம்னி :

சமையல் அறை

சமையலறையில் சிம்னி வைக்கிறீர்கள் எனில், சிம்னி வைக்கும்போது அடுப்பிலிருந்து குறைந்தது மூன்று அடி உயரத்துக்கு மேல்தான் வைக்கவேண்டும். எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன் தரையிலிருந்து ஆறு அடி உயரத்துக்கு மேல்தான் வைக்க வேண்டும். லைட்டை பொறுத்த வரை சுவரில் மாட்டுவதை விட ஸீலிங்கில் மாட்டுவதே சிறந்தது. இதனால் வெளிச்சம் அறை முழுவதும் பரவலாக இருக்கும்.

சின்ன சமையலறைக்கு பிளான் செய்பவர்கள் சமையலறையில் வாஷ்பேசினை தவிர்க்கலாம். பெரிய கிச்சன் எனில் கிச்சனிலிருந்து வெளியேறும் கதவுக்கு அருகில் வைப்பது சிறந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!