Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

* சமீபத்தில் `மிஸ்.துருக்கி’ பட்டம் வென்றவர் இட்டிர் எஸன். பட்டத்தை வென்ற சில மணி நேரங்களிலேயே அவருடைய அழகிப் பட்டத்தை பறித்துவிட்டது தேர்வுக்குழு. காரணம் அவர் ட்விட்டரில் எழுதிய சர்ச்சைக்குரிய ட்வீட். சென்ற ஆண்டு துருக்கியில் அரசுக்கு எதிராக நடைபெற்ற ராணுவப் புரட்சியில் உயிர் நீத்தவர்களைப் பற்றி ட்விட்டரில் எழுதியிருந்தார் எஸன். அந்த இரண்டு வரிகளுக்குத்தான் இந்தத் தண்டனை! நீ பற்றவைத்த நெருப்பொன்று...

இன்பாக்ஸ்

* த்ரில்லர் கதைகள் வைத்திருந்தால் உடனடியாக நயன்தாராவிடம் ஓ.கே வாங்கலாம். அந்த அளவுக்கு `த்ரில்’ விரும்பியாக மாறிவிட்டார் நயன். ஈரம், வல்லினம் படங்களின் இயக்குநர் அறிவழகனின் படத்தில் நடிக்க ஓ.கே சொல்லியிருக்கிறார். படம் சைக்கலாஜிகல் த்ரில்லர் என்பதுதான் நயன்தாராவின் யெஸ்ஸுக்குக் காரணம். `இமைக்காத நொடிகள்’ படம் முடிந்ததும் அடுத்து இந்தப்படம்தான்! சூப்பர் காம்போ... கலக்குமே!

இன்பாக்ஸ்

* ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கான ஹாட்ரிக் என்பது 26 வருடங்களுக்குமுன் கபில்தேவ் எடுத்தது. அதற்குமுன் சேத்தன் ஷர்மா எடுத்திருந்தார். இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு குல்தீப் யாதவ் கடந்த வாரம் ஆஸிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் எடுத்திருக்கிறார். கொல்கத்தாவில் நடந்த ஒருநாள் போட்டியில் 33-வது ஓவரில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். டிரஸ்ஸிங் ரூமில், கோஹ்லி உள்ளிட்ட வீரர்கள் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள் குல்தீப் யாதவை! 33-வது ஓவரில் மூன்று விக்கெட்!

* இந்தியா சார்பாக இந்த ஆண்டு ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படம் `நியூட்டன்.’ `டங்கல்’ உள்பட பல படங்கள் போட்டியில் இருந்தும் `நியூட்டன்’ வென்றிருக்கிறது. இந்தியத் தேர்தல்கள் குறித்து விமர்சிக்கிற இந்தத் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி விமர்சகர்களாலும் பல்வேறு திரைப்பட விழாக்களிலும் பாராட்டுகளைப்பெற்றது. சென்றுவா வென்றுவா...

* புயல் வேகப் பயிற்சிகளில் இருக்கிறார் லியாண்டர் பெயஸ். டென்னிஸ் வீரர்கள் பொதுவாக 35 வயதுக்குள்ளாகவே ஓய்வு பெற்றுவிடுவார்கள். ஆனால் பெயஸுக்கு வயது 44. இன்னமும் இரவு பகல் பாராமல் தீவிர பிராக்டீஸில் இருக்கிறார். `என் உடம்பு எப்போ ஓய்வெடுக்கணும்னு சொல்லுதோ அப்போதான் ஓய்வு. அதுவரை டென்னிஸை என்னிடமிருந்து பிரிக்க முடியாது’’ என்கிறார் பெயஸ். சல்யூட்!

இன்பாக்ஸ்

* தமிழ் பிக்பாஸைப்போலவே இந்தி பிக்பாஸும் செம ஹிட் ப்ரோகிராம். இங்கு கமல் கலக்குவதைப்போலவே அங்கே சல்மான்கான் 10 சீசன்களாகப் பிரமாதப்படுத்திக் கொண்டிருக்கிறார். அக்டோபரிலிருந்து 11-வது சீசன் தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இதுவரை ஒரு சீசனுக்கு 8 கோடி என வாங்கிக்கொண்டிருந்த சல்மான் இந்தமுறை தன்னுடைய சம்பளத்தை 11 கோடியாக உயர்த்தி இருக்கிறார். உள்ளே இருக்க ஊதியம் உண்டுங்களாண்ணா!

இன்பாக்ஸ்

* பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய்க்கு `கேன்சலேஷன் ஸ்டார்’ எனச் செல்லப்பெயர் வைத்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராய் சந்திக்கலாம் என நேரம் கொடுத்தால் அது எந்த நேரமும் கேன்சல் செய்யப்படலாம் என்பதுதான் இந்தக் கலாய் கமென்ட்டுக்குக் காரணம். அவர் முதல்முறை சந்திக்க ஓகே சொல்லி, அப்படியே நடந்தது லட்சத்தில் ஒருவருக்குத்தான் என்கிறார்கள் நொந்தவர்கள். சினிமாவில் இதெல்லாம் சாதாரணமப்பா!