`வீட்டுக் கண்ணாடி வேலைப்பாடுகள் எளிதில் உடையுமா...’ விவரங்களும் விளக்கமும்! #HomeInterior

``தற்போது, அதிகம் பயன்படுத்தப்படும் 'டஃப்பன் கிளாஸ்' வகைகள் உறுதியானது என்பதால், பாதுகாப்புக்குப் பயப்படத் தேவையில்லை."

`வீட்டுக் கண்ணாடி வேலைப்பாடுகள் எளிதில் உடையுமா...’ விவரங்களும் விளக்கமும்! #HomeInterior

ட்ஜெட் வீடுகள் முதல் ஆடம்பர வீடுகள் வரை வெரைட்டியான இன்டீரியர் வேலைப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அதிகரித்து வருகிறது. அதில், கண்ணாடி வேலைப்பாடுகளுக்கு (Glass Work) தனி முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எந்த வீட்டுக்கு, எத்தகைய கண்ணாடி வேலைப்பாடுகளைச் செய்யலாம், அவற்றின் பராமரிப்பு மற்றும் பட்ஜெட் விவரங்களை விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த 'கிரியேட்டிவ் கிளாஸ் ஸ்டுடியோ' நிறுவன கிரியேட்டிவ் ஹெட் கார்த்தி.

* பட்ஜெட்தான் வீட்டின் இன்டீரியர் வேலைப்பாடுகளைத் தீர்மானிக்கிறது. அது, கண்ணாடி வேலைப்பாடுகளுக்கு அதிகம் பொருந்தும். வீட்டின் வரவேற்பறை, பூஜை அறை, பெட்ரூம், கிச்சன், பாத்ரூம், பால்கனி, படிக்கட்டுகள், அவற்றின் இருபுறமோ ஒருபுறமோ அமைக்கப்படும் தடுப்புகள் ஆகியவற்றில்தான் பெரும்பாலும் கண்ணாடி வேலைகள் செய்யப்படுகின்றன. எந்த இடத்துக்கு எந்தப் பட்ஜெட்டில், எத்தகைய டிசைன்களில் வேண்டும் என்பதைப் பொறுத்து, கண்ணாடி வேலைப்பாடுகளைச் செய்யும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

இன்டீரியர்

* இன்டீரியர் வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் வீடுகள் எதுவானாலும், அவற்றில் கதவு, ஜன்னல் (french window), டீப்பாய்களில்தான் பிரதானமாகக் கண்ணாடி வேலைகள் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில், பிரதானமாக ஜாமெட்ரிக்கல் டிசைன் அல்லது டிரெடிஷனல் ஃப்ளோரல் டிசைன்களே பயன்படுத்தப்படுகின்றன.

* சுவர்களில் வைக்கப்படும் அல்லது அழகுக்காகப் பயன்படுத்த, ஆர்ட் கிரியேட்டிவிட்டி முறையில் கண்ணாடி வேலைகள் செய்யப்படுகின்றன. தற்போது, இவைதான் ட்ரெண்டிங். அவற்றில் கடவுள் மற்றும் விலங்குகளின் உருவங்கள் மற்றும் தேவையான டிசைன்கள் மியூரல் வேலைப்பாடுகளுடன் செய்யப்படுகின்றன.

* மாடுலர் கிச்சனில், அடுப்பு மேடைக்கு மேலிருக்கும் அப்பர் யூனிட் பகுதிகளில்தான் பெரும்பாலும் கண்ணாடிகளைப் பயன்படுத்துகிறார்கள். அப்பர் யூனிட் ரேக்குகளின் உள்ளே வைக்கப்படும் பொருள்களை வெளியிலிருந்து பார்ப்பதற்காக, கண்ணாடிக் கதவுகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. அவை, சமையலறையின் தோற்றத்தைக் கூடுதல் அழகாக்குகின்றன.

* படுக்கை அறையில், கட்டிலின் பின்புறம், மியூரல் வேலைப்பாடுகள் கொண்ட லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட வித்தியாசமான உருவங்களைப் பயன்படுத்தலாம். பாத்ரூம்களில்தான் அதிகமான கண்ணாடி வேலைப்பாடுகள் இருக்கும். அவற்றில் பாதுகாப்புக்கு (பிரைவசி) முக்கியத்துவம் கொடுக்கப்படும் வகையில், வெளிப்புறத்திலிருந்து பார்த்தால், உள்புறத்திலுள்ள விஷயங்கள் தெரியாது. கண்ணாடிகளில் சிந்திய தண்ணீர் உலர்ந்த பிறகும் சைனிங்கதான் தெரியும். தண்ணீர் துளிகள் விழுந்த தடம் தெரியாது.

* வீட்டில் எங்கு கண்ணாடி வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், அவற்றின் மீது பிரதிபலிப்புகாக, அட்ராட்டிவான விளக்கின் (எல்.இ.டி லைட்) வெளிச்சம் படும்படி செய்தால், கண்ணாடி வேலைப்பாடுகளை மெருகேற்றிக் காட்டலாம்.

இன்டீரியர்

* முன்பெல்லாம் நார்மல் கண்ணாடிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டது. அவற்றில் அதிக டிசைன்கள் இருக்காது; உறுதித்தன்மையும் குறைவாக இருக்கும். தற்போது, 'டஃப்பன் கிளாஸ் வித் டிசைன்' முறையே எல்லா வகை கண்ணாடி வேலைப்பாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, வலிமையுடன் எளிதில் உடையாது. பல ஆயிரக்கணக்கான டிசைன்களும் உள்ளன. வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ற டிசைன்களிலும் (கஸ்டமைஸ்டு) வேலைப்பாடுகள் செய்துகொடுக்கப்படுகிறது.

விலை: 

சதுர அடிக்கு 500 ரூபாய் முதல் 3,500 ரூபாய் வரை செலவாகும். இது, டிசைன் மற்றும் வேலையைப் பொறுத்து மாறுபடும். ஆடம்பரமான வீடுகளுக்கு, 3 லட்சம் ரூபாய்க்கு அதிகமான பட்ஜெட்டில் கண்ணாடி வேலைப்பாடுகளைச் சிறப்பாகச் செய்ய முடியும். நடுத்தர பட்ஜெட் வீடுகளுக்கு, 1 லட்சம் முதல் 2 லட்சம் பட்ஜெட்டில் கண்ணாடி வேலைகளை நிறைவாகச் செய்யலாம். எளிமையான அல்லது லோ பட்ஜெட் வீடுகளுக்குப் பல ஆயிரங்களில் கண்ணாடி வேலைப்பாடுகளைச் செய்யலாம்.

இன்டீரியர்

பாதுகாப்பு:

* கிளாஸ் வேலைப்பாடுகள் என்றாலே, பாதுகாப்பு பற்றித்தான் பலரும் நினைப்பார்கள். தற்போது, அதிகம் பயன்படுத்தப்படும் 'டஃப்பன் கிளாஸ்' வகைகள் உறுதியானது என்பதால், பாதுகாப்புக்குப் பயப்படத் தேவையில்லை. கண்ணாடி வேலைப்பாடுகளை ஃபிட்டிங் செய்யும் வேலைகளுக்குரிய முக்கியத்துவம் கொடுத்து, தரம் வாய்ந்த ஃபிட்டிங் உபகரணங்களையும் பயன்படுத்த வேண்டும். அதனால், 10 - 20 ஆண்டுகளுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. எவ்வளவு வெப்பநிலை நிலவினாலும் உடையாது. இருப்பினும், கண்ணாடியில் ஏதேனும் விரிசல், சேதம் ஏற்பட்டிருந்தால் உடனடியாக மாற்றிவிட வேண்டும். 

* குறைந்தபட்சம் 5 - 6 மில்லிமீட்டர் தடிமனிலிருந்து, தேவையைப் பொறுத்து கண்ணாடி வேலைப்பாடுகளின் தடிமனை விரிவுபடுத்திக்கொள்ளலாம். டீப்பாய் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் கண்ணாடிகளின் மீது குழந்தைகள் ஏறி நிற்பது, அதிக எடையுள்ள பொருள்களை வைப்பது கூடாது.

* சாதாரண தண்ணீர் அல்லது தண்ணீரில் ஷாம்பு பாக்கெட் ஒன்றைக் கலந்து அவற்றைக் கண்ணாடியின் மீது ஸ்ப்ரே செய்து துடைக்க வேண்டும். இப்படி 15 - 30 நாள்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்தால், பொலிவுடன் இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!