வருகிறது பி.பி.சி-யின் அடுத்த பிரமாண்ட வைல்ட்லைஃப் மினி சீரிஸ்

இயற்கை சார்ந்த வைல்ட்லைஃப் டாக்குமென்டரிகளுக்கென்றே தனிப்பெயர் பெயர் பெற்ற நிறுவனம் பி.பி.சி. இதில் இயங்கிவரும் Natural History Unit (NHU) பிரிவு கடந்த வருடங்களில் பல புதுமையான முயற்சிகளை முன்னணி தொழில்நுட்பங்களுடன் முன்னெடுத்து என்றும் இல்லாததுபோல் இயற்கையின் அழகியலில், அதன் ஆற்றலில் நம்மை மயங்கிப்போகச் செய்யும் தொடர்கள் பலவற்றை தயாரித்துவருகிறது. அந்த வரிசையில் பி.பி.சி எர்த்தின் அடுத்த பிரமாண்ட தொடராக கருதப்படும் 'Dynasties' தொடரின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

பிபிசி Dynasties

இந்தத் தொடருக்கு எப்போதும் போல் மிகவும் பிரபலமான இயற்கையியலாளர் சர் டேவிட் அட்டன்ப்ரோவ் வர்ணனை செய்கிறார். ஐந்து பாகங்களைக் கொண்ட இத்தொடரானது உலகின் மிகவும் பிரபலமான, அதே சமயத்தில் அழிவின் விளிம்பில் இருக்கும் எம்பேரர் பென்குவின், ஆப்ரிக்க சிம்பன்சி, கென்யாவின் சிங்கம், ஜிம்பாப்வேவின் ஓநாய், இந்தியா வங்கப்புலி ஆகிய விலங்குகளின் வாழ்வியல், அவற்றுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மையமாக கொண்டு நகரும். முக்கியமாக மாறிவரும் காலங்களில் இந்த அறிய விலங்குகளைப் எப்படியெல்லாம் பாதுகாப்பது என்பதை ஆராய்ந்து நமக்குக் கூறுகிறது இத்தொடர்.

நான்கு வருட கடின உழைப்பில் தயாராகியுள்ள இத்தொடர் 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் பிபிசி அமெரிக்கா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது. அங்கு ஒளிபரப்பான பின் சில மாதங்களில் தொடர் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கலாம். ஏற்கெனவே 2016-ம் ஆண்டுக்கான சிறந்த டாக்குமெண்டரி சீரிஸ்க்கான எம்மி விருதை 'பிளானட் எர்த் 2' தொடருக்காக பெற்ற பிபிசி நிறுவனம் இந்த வருடமும் 'ப்ளூ பிளானட் 2' தொடருக்காக ஐந்து பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே 'Dynasties' தொடருக்கு வைல்ட்லைஃப் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!