இந்தியாவில் பிறந்த முதல் பென்குயின் உயிரிழந்த சோகம்..!

மும்பையிலுள்ள உயிரியல் பூங்காவில் சுதந்திர தினத்தன்று பிறந்த ஹாம்போல்டு வகையைச் சேர்ந்த பென்குயின் இன்று இறந்துவிட்டது. இந்தப் பென்குயின் இந்தியாவில் பிறந்த முதல் பென்குயின் என்ற பெருமையைப் பெற்றிருந்தது.

பென்குயின்

பென்குயின்கள், அண்டார்டிகா போன்ற குளிர் பிரதேசங்களில் மட்டுமே வாழ்பவை. பறவை இனத்தைச் சார்ந்த இவற்றால் பறக்க முடியாது. தன் வாழ்நாளில் 75 சதவிகிதத்தை நீருக்கடியில் உணவு தேடியே கழித்துவிடும். கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம், தென்கொரியத் தலைநகர் சியோலிலிருந்து ‘ஹாம்போல்டு’ வகையைச் சேர்ந்த சில பென்குயின்கள் மும்பையில் உள்ள பைகுல்லா உயிரியல் பூங்காவுக்கு எடுத்துவரப்பட்டன. இவை, தென் அமெரிக்க நாடுகளில் அதிகம் வாழ்கின்றன. 

மும்பையைத் தவிர இந்தியாவில் வேறு எந்த உயிரியல் பூங்காவிலும் பென்குயின்கள் இல்லை. இதற்காக பைகுல்லா பூங்காவில் 16 -18 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் சுமார் 1,700 சதுர அடிக்கு செயற்கை இடம் உருவாக்கப்பட்டு, அங்கு இந்தப் பென்குயின்கள் வளர்க்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், அங்குள்ள மோல்ட் என்ற ஆண் பென்குயினுக்கும் ஃபிலிப்பர் என்ற பெண் பென்குயினுக்கும் ஆகஸ்ட் 8-ம் தேதி, 2 மணியளவில் இந்தப் பென்குயின் பிறந்தது. இந்தப் பென்குயின், இந்தியாவில் பிறந்த முதல் பென்குயின் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. பென்குயின் முட்டை, சுமார் 40 நாள்களாகப் பராமரிக்கப்பட்டு சுதந்திர தினத்தன்று அந்தப் பென்குயின் பிறந்தது. அந்தப் பென்குயின் இன்று உயிரிழந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!