வெளியிடப்பட்ட நேரம்: 19:42 (24/08/2018)

கடைசி தொடர்பு:19:42 (24/08/2018)

இப்போது குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பறக்கலாம்! - Sponsored Content

சிறிது படபடப்பான மனநிலையில் உள்ள யாழினியின் ஐடென்டிட்டி கார்டில் உள்ள முகம் அவள்தானா என  சோதித்திவிட்டு செக்யூரிட்டி உள்ளே அனுமதிக்கிறார். கையில் இருக்கும் லக்கேஜ் பைகளை ஸ்கேனருக்குள் அனுப்ப ஒரு பட்டாளம் வரிசையில் நிற்கிறது, யாழினியும் அவர்களோடு சேர்ந்துகொள்கிறாள். பயணச் சாமான்கள் எல்லாம் சோதனை செய்தபின் டேக் ஒட்டி, செக் இன் லைனில் பதட்டமாய் நின்று, டெர்மினலை அடைந்து பயணத்துக்கு தயார் ஆகிறாள் யாழினி. வாகனத்துக்குள் செல்லும் முன், அங்கே நிற்கும் சிப்பந்தி யாழினியை புன்னகையுடன் உள்ளே வரவேற்க, பதிலாய் ஒரு அசட்டுப் புன்னகை. ஜன்னல் ஒர சீட், அழகான பெண்கள் கையில் சில சாமான்களை வைத்து சைகையால் சில வித்தைகள் செய்கிறனர். பயணம் துவங்கவுள்ளது, சீட் பெல்ட் போட்டுக்கொள்ளுங்கள் எனவொரு குரல்... வாகனம் நகரத் தொடங்குகிறது... மரங்கள், கட்டிடங்கள் எல்லாம் அசுரவேகத்தில் பின்னோக்கி நகர்கின்றன... திடீரென மரங்கள் கட்டிடங்கள் எல்லாம் முன்பக்கமாய் கீழே சாய்கின்றன, யாழினியின் கண்கள் விரிகின்றன ... சாய்ந்தவை மரங்கள் அல்ல, நாம்தான் பறந்துகொண்டிருக்கிறோம் என்பது அவளுக்குப் புரிகிறது... முதல் சம்பளம், முதல் காதல் போல, இந்த முதல் ஃபிளைட் அனுபவத்தையும் இனி யாழினியால் மறக்கவேமுடியாது!

என்ன சொன்னாலும், விமானத்தில் செல்வது பிற வாகனங்களைக் காட்டிலும் வித்தியாசமான அனுபவம்தான். சிறுவயதில் விளையாடும்போது விமானம் பறந்துசென்றால் அண்ணாந்து கண்கொட்டாமல் பார்த்து, அப்படி என்னதான் இந்த ஃபிளைட்டில் இருக்கிறது, ஒரு முறையாவது உள்ளே சென்று பார்த்துவிடவேண்டுமே என்கிற எண்ணம் நமக்குள் ஓடாமல் இருந்திருக்காது! ஏற்கனவே ஃபிளைட்டில் சென்று வந்தவர்கள் பலருக்கும் தங்களின் பெற்றோரையும் குடும்பத்தினரையும் ஒருமுறையாவது பிளைட்டில் கூட்டிச்செல்லவேண்டும் என்கிற ஆசை கண்டிப்பாக இருக்கும். இந்த எண்ணத்தை நிறைவேற்றவிடாமல் தடுப்பது எது? ஒரே பதில்: விமான டிக்கெட் விலைதான் காரணம்!

குறைந்த விலையில் ஃபிளைட் அனுபவம் பெறுவது சாத்தியமா?

இந்தக் கேள்விக்கு ஆம் என்கிற அனுகூலமான பதிலை அளிக்கிறது இந்திய அரசாங்கத்தின் சேவையான ஏர் இந்தியா நிறுவனம். ஏர் இந்தியா, அதன் கிளை நிறுவனமான 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' மூலம் குறைந்த கட்டணத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவையை வழங்கி அசத்திவருகிறது. குறைவான கட்டணத்தில் சர்வதேச விமான சேவையை வழங்க ஆரம்பித்த முதல் நிறுவனமும் இதுதான்! தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் செயல்பட்டுவரும் இவர்களின் சேவை இந்தியாவில் மொத்தம் 17 நகரங்களிலும், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் 30 முக்கிய இடங்களிலும் கிடைக்கிறது. 

சிங்காரமான சிங்கப்பூர்:

தமிழர்கள் அதிகம் வாழும் நாடு சிங்கப்பூர். பிசினஸ் சம்பந்தப்பட்ட பயணங்கள், விடுமுறை நாட்கள் மற்றும் பிற தேவைகளுக்காக சிங்கப்பூர் செல்வோர் ஏராளம். வெளிநாடு என்பதால் சிங்கப்பூருக்கு செல்லும் விமானப் பயணச் செலவு கணிசமான தொகையாகவுள்ளது. இந்நிலையில், மதுரை மற்றும் சிங்கப்பூர் இடையிலான விமான சேவையை தினசரி வழங்கிவரும் ஒரே விமான சேவை நிறுவனம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மட்டுமே! இதனால் இங்கிருந்து செல்லும் பயணிகளும், அங்கிருந்து தாயகத்துக்கு திரும்ப நினைக்கும் பயணிகளும் சற்றும் தயங்காமல் ஏர் இந்தியா விமான சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம், டிக்கெட் விலையும் மலிவு என்பது நம்மை இப்போதே சிங்கப்பூருக்குச் செல்லத் தூண்டுகிறது!

பிசினஸ் ட்ரிப் இனி சுலபமாகிவிட்டது...

குறைவான கட்டணத்தில் விமானப் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு மட்டுமல்ல, அடிக்கடி வியாபாரம் சம்பந்தமாக பறந்துகொண்டே இருப்பவர்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்கும் சேவை ஒரு வரப்பிரசாதமாகும். வெளிநாடுகளுக்கு இடையறாத சேவை வழங்கிவரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இருப்பதால், அயல் நாடுகளில் பிசினஸ் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு அவசரமாக செல்லவேண்டிய நிலை ஏற்பட்டாலும் இனி கவலையில்லை, பயண தேதி அருகாமையில் வந்துவிட்டாலும் நியாயமான கட்டணத்தில் டிக்கெட் பெற்று உங்களுடைய பிசினஸ் ட்ரிப்பை வெற்றிகரமாக முடித்துக்கொள்ளலாம்!

ஹாலிடே ட்ரிப் செல்பவர்கள், தேனிலவு செல்லும் தம்பதிகள், வேலை சம்பந்தமாக பயணப்படுபவர்கள் - இப்படி யாவருக்குமான சேவையை குறைவான கட்டணத்தில் வழங்கி வருடாவருடம் பயணிகள் எண்ணிக்கையை அதிகரித்துவருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். முதல்முறை விமானப் பயணம் மேற்கொள்ள நினைக்கும் நண்பர்களே, உங்களின் கனவை நனவாக்கவே செயல்பட்டுவரும் "ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்"ஸின் சேவை, உண்மையிலே விலைமதிப்பற்ற சேவைதான்!

https://www.airindiaexpress.in/ தளத்துக்குச் சென்று நீங்கள் செல்லவேண்டிய இடம் மற்றும் தேதியை சரிபார்த்து, இப்போதே பயணத்துக்கான திட்டத்தை மேற்கொள்ளலாமே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க