Published:Updated:

இங்கு எல்லாமே காஸ்ட்லி!

இங்கு எல்லாமே காஸ்ட்லி!
பிரீமியம் ஸ்டோரி
இங்கு எல்லாமே காஸ்ட்லி!

கார்க்கிபவா

இங்கு எல்லாமே காஸ்ட்லி!

கார்க்கிபவா

Published:Updated:
இங்கு எல்லாமே காஸ்ட்லி!
பிரீமியம் ஸ்டோரி
இங்கு எல்லாமே காஸ்ட்லி!

மிழக சூப்பர் ஸ்டார்கள் படம் ரிலீஸ் ஆகிறது என்றால் போதும், டிக்கெட் விலை ஆயிரத்தைத் தாண்டிவிடும். “ஒரு படத்துக்கா இந்த விலை” எனக் கொதிப்பவர்கள், ஏக்கப் பெருமூச்சு விடுபவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். லண்டனில் ஒரு செல்போனின் விலை106 கோடி ரூபாய். ஒரு செஸ் போர்டின் விலை மூன்று கோடியே 85 லட்சம் ரூபாய். நிஜமாகவா? என்றால் ஆமாங்க ஆமாம்! உலகின் காஸ்ட்லியான பொருள்களைப் பற்றிப் படித்தால் திறக்கும் வாயை மூடவே சில நாள்கள் ஆகும் போலிருக்கிறது. ``இவ்ளோ காஸ்ட்லியா’’ என ஆச்சர்ய எமோஜி போட வைக்கும் சில அயிட்டங்கள் மட்டும் இங்கே! 

இங்கு எல்லாமே காஸ்ட்லி!
இங்கு எல்லாமே காஸ்ட்லி!

ஹோட்டல் பிரெசிடென்ட் வில்சன், ஜெனீவா

ஜெனீவா நகர ஏரிக்கரையோரம் இருக்கும் இந்த ஹோட்டலில் ஒரு சூட் இருக்கிறது. ஓர் இரவுக்கு அங்கே தங்கக் கட்டணம் 41 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய். ஹோட்டலின் 8-வது தளம் முழுக்க விஸ்தாரமாக இருக்கும் இந்த சூட்டில் இருந்து கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்தால், ஆல்ப்ஸ் மலைத்தொடர் அத்தனை அழகாய்த் தெரியும். உலகின் விலை உயர்ந்த லாட்ஜிங் இதுதான். இந்த விலைக்கு தனி வீடே வாங்கிடலாம் என்கிறீர்களா?

இங்கு எல்லாமே காஸ்ட்லி!
இங்கு எல்லாமே காஸ்ட்லி!

ஒடியன் பென்ட்ஹவுஸ் 

இங்கு எல்லாமே காஸ்ட்லி!மொனோக்கோ நகரில் இருக்கும் ஒடியன் பென்ட்ஹவுஸ்தான் (Odeon Tower Penthouse, Monaco) உலகிலேயே அதிக விலையுள்ள அபார்ட்மென்ட். லண்டன், நியூயார்க் போன்ற நகரங்களைவிட மொனோக்கோ காஸ்ட்லியானது என்பதே ஆச்சர்யம்தான். கடலுக்கு எதிரே வீடு, வாட்டர் ஸ்லைடு என இங்கிருக்கும் வசதிகள் எல்லாமே வாவ் வாவ் வாவ்தான். விலைதான் கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுக்கும். ஒரு வீடு ஜஸ்ட் 2,820 கோடி ரூபாய். அபார்ட்மென்ட்டே இந்த விலை என்றால், தனி வீடு இதை விட அதிகமாகத்தான் இருக்கும். அந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கும் வீட்டின் சொந்தக்காரர் நம் முகேஷ் அம்பானி. மும்பையில் இருக்கும் இந்த வீட்டின் மதிப்பு 12,500 கோடி ரூபாய்!

இங்கு எல்லாமே காஸ்ட்லி!

Mercedes Benz Maybach Exelero

இங்கு எல்லாமே காஸ்ட்லி!

உலகின் விலையுயர்ந்த காரை (Mercedes-Benz Maybach Exelero) தயாரித்திருப்பது பென்ஸ் நிறுவனம். 2004-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த மாடலில் இரண்டே கதவுகள்தான். 2004-ல் இதன் விலை 51.5 கோடி ரூபாய். 13 ஆண்டுகளுக்காகப் பொருளாதாரச் சம்பிரதாயங்களைக் கூட்டிக் கழித்தால் இதன் இன்றைய விலை 64 கோடி ரூபாய் என்கிறார்கள்!

இங்கு எல்லாமே காஸ்ட்லி!
இங்கு எல்லாமே காஸ்ட்லி!

Dodge Tomahawk

இது பைக்தான். ஆனால், தெருக்களில் ஓட்டுவதற்காக அல்ல, இதற்காக இருக்கும் தனி டிராக்குகளில் மட்டுமே ஓட்ட முடியும். 2003-ம் ஆண்டு அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைக், 2.5 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 650 கி.மீ வேகம் வரை பறக்கும். இந்த ஸ்பெஷல் நான்கு சக்கர பைக்கின் விலை ஜஸ்ட் 4.5 கோடி ரூபாய்!

இங்கு எல்லாமே காஸ்ட்லி!
இங்கு எல்லாமே காஸ்ட்லி!

பிரஸ்டிஜ் ஹெச்.டி சுப்ரீம் ரோஸ் எடிஷன்:  (PrestigeHD Supreme Rose Edition)

கலர் டி.வி-யில் இருந்து கர்வ் டி.வி வரை பார்த்திருப்போம். இது கொஞ்சம் வித்தியாசமானது; விலை உயர்ந்தது. முதலையின் தோல் அமெரிக்காவில் புகழ் பெற்றது. அந்தத் தோலைக் கையால் நெய்து இந்தத் தொலைக்காட்சிக்கு கவர் செய்திருக்கிறார்கள். அந்தத் தோலின் மேல் எண்ணற்ற வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. அணைத்து வைக்கப்பட்டாலும் இந்தத் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் என்னும் அளவுக்கு அழகான வடிவமைப்பு. விலையை மட்டும் கேட்கக் கூடாது. 14.72 கோடி ரூபாய்!

இங்கு எல்லாமே காஸ்ட்லி!

iPhone Black Diamond Edition

ஆப்பிளின் மொபைல்கள் சாதாரணமாகவே நம்மை உலக அழகி வென்றவரை போல வாய் மூட வைக்கும். ஸ்பெஷல் எடிஷன் என்றால் சொல்ல வேண்டுமா? இந்த iPhone Black Diamond Edition மாடலில் காஸ்ட்லியான வைரங்களை பதித்து வைத்திருக்கிறார்கள். கருப்பு நிறம் என்பது கூடுதல் கவர்ச்சி. விலை, 106 கோடி மட்டுமே!

இங்கு எல்லாமே காஸ்ட்லி!
இங்கு எல்லாமே காஸ்ட்லி!

`சார்லஸ் ஹாலண்டர் செஸ் செட்’

லிமிட்டட் எடிஷன் என்பார்கள். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் ஒரு பொருளைத் தயாரித்து அதைச் சந்தையில் விற்பார்கள். அப்படி வந்த ஒன்றுதான் `சார்லஸ் ஹாலண்டர் செஸ் செட்’. இந்த செஸ் போர்டும் , காய்களும் செய்ய 320 காரட் வைரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கருப்புக் காய்களுக்கு கருப்பு நிற வைரங்கள்.இந்த வகை செஸ் போர்டுகள் உலகில் மொத்தமாக ஏழே ஏழுதான். இதன் விலை, 3.8 கோடி ரூபாய்!

இங்கு எல்லாமே காஸ்ட்லி!
இங்கு எல்லாமே காஸ்ட்லி!

DKNY PERFUME

அந்தக் கால ராஜாக்கள் வாசனை திரவியங்களுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள் எனப் படித்திருப்போம். அப்படி என்றால், இந்தக் கால ராஜாக்களும் அதைச் செய்தாக வேண்டுமே என அது பற்றித் தேடினேன். நினைத்தது வீண் போகவில்லை. DKNY என்றொரு பிராண்ட் பெர்ஃப்யூம் இருக்கிறது. அவர்கள் தங்க நிறத்தில், ஆப்பிள் வடிவில் ஒரு பாட்டிலில் பெர்ஃப்யூம் வெளியிட்டிருக்கிறார்கள். தங்க நிறம் மட்டுமல்ல; 14 காரட் தங்கத்திலான பாட்டிலேதான். அதன் மேல் வைரங்களும் உண்டு. எதற்கு இப்படியொரு காஸ்ட்லியான பாட்டில் என்பதை உணர, அந்த பெர்ஃப்யூமை ஒருமுறையாவது நுகர வேண்டும் என்கிறார்கள். அப்படியொரு வாசனை. இதற்கு DKNY வைத்திருக்கும் பெயர்... மில்லியன் டாலர் ஃப்ராக்ரன்ஸ். மில்லியன் டாலர் விலை என்பதால் இந்தப் பெயர். இந்திய ரூபாயில், 6.4 கோடி ரூபாய்!