Published:Updated:

கேட்டுட்டாங்கய்யா 2 கேள்விகள்

கேட்டுட்டாங்கய்யா 2 கேள்விகள்
பிரீமியம் ஸ்டோரி
கேட்டுட்டாங்கய்யா 2 கேள்விகள்

பரிசல் கிருஷ்ணா - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

கேட்டுட்டாங்கய்யா 2 கேள்விகள்

பரிசல் கிருஷ்ணா - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
கேட்டுட்டாங்கய்யா 2 கேள்விகள்
பிரீமியம் ஸ்டோரி
கேட்டுட்டாங்கய்யா 2 கேள்விகள்
கேட்டுட்டாங்கய்யா 2 கேள்விகள்

ட்விட்டர், ஃபேஸ்புக் என சோஷியல் மீடியாவில் இரண்டு கேள்விகள்தான் இப்போது ட்ரெண்டிங். ``கேளுங்களேன்... ஜாலியா பதில் சொல்வோம்...’’ என உற்சாகமானார்கள் நம்ம ஊரு ஸ்டார்ஸ். ஜாலியாகவும், சீரியஸாகவும் சொன்ன இவங்க பதில்கள்ல... நாட்டுக்கொரு சேதி  இருக்கு மக்களே! 

கேட்டுட்டாங்கய்யா 2 கேள்விகள்

ஆர். ஜே. பாலாஜி

``உங்க பேரை இன்றிலிருந்து மாத்திக்கணும். என்ன பேர் வெச்சுப்பீங்க?’’

``என் வீட்ல என்னைத்தவிர எல்லோருக்கும் ஃபேன்ஸி பேரு. எனக்கு மட்டும் எதிர்வீட்டு ஆன்ட்டி ‘திருப்பதி பாலாஜி, பையனா பொறந்துட்டார்’னு சொல்லி இந்தப் பேரை வெச்சுட்டாங்க. நாங்க அஞ்சு பேர். தங்கச்சிங்க பேரு சிந்துஜா, பூஜா, தனுஜா. தம்பி பேரு ஹ்ரித்திக் ரோஷன். பார்த்துக்கங்க. எனக்கு ஸ்டைலிஷான பேரு வெச்சுக்கணும்னு ஏக்கம் இருந்துச்சு. நான் அமிதாப் பச்சன், ஷாரூக் கான், வாஜ்பாய், மன்மோகன்னு பாப்புலரான பேர் வெச்சுக்குவேன். குறிப்பிட்ட பேர் சொல்லணும்னா ‘ஒபாமா’ன்னு வெச்சுக்குவேன். என் தம்பி பேரைச் சொன்னா, அவனைத் திரும்பிப் பார்ப்பாங்க. பாலாஜின்னா அஞ்சாறு பேர் இருப்பாங்க. ஸோ, ஒபாமாதான் என் பேரு.’’

கேட்டுட்டாங்கய்யா 2 கேள்விகள்``இன்றிலிருந்து பெண்ணா மாறணும்னு கட்டளை. யாரா மாறுவீங்க?’’

``ரெண்டு பேர். எங்க அம்மாவா மாறணும்னு நினைப்பேன். நாங்க அஞ்சு பேர். எங்களை வளர்த்து ஆளாக்கக் கஷ்டப்பட்டிருக்காங்க. அதுல சில நல்ல முடிவுகள் எடுத்திருக்காங்க; சில முடிவுகள் தப்பா எடுத்திருக்காங்க. அப்போ சண்டை போட்டிருக்கேன். அதனால அவங்க இடத்துல இருந்து அதையெல்லாம் பார்க்கணும்.

இன்னொண்ணு ஜெயலலிதா. ஒரு வீட்ல அவ்ளோ கஷ்டங்களைச் சந்திச்சு, சினிமாவிலேயும் அரசியல்லேயும் வளர்ந்து இத்தனை வருஷம் தமிழ்நாட்டை ஆண்டிருக்காங்க. ஜெயலலிதாவா இருந்தாதான் வெற்றி தோல்வி என்னென்னு தெரிஞ்சுக்கணும்னா, அவங்களா இருந்தாதான் முடியும்.’’ 

கேட்டுட்டாங்கய்யா 2 கேள்விகள்

சதீஷ்

``இதே உடல். ஆனால், இன்னொருத்தரோட மனம் உங்களுக்கு கிடைக்கும்னா யாரை செலக்ட் பண்ணுவீங்க?’’


``சினேகன் மனசு ப்ரோ. எல்லாரையும் அரவணைச்சுப் போற தாய் மனசு இருக்கே... ஹலோ... தாய்ன்னா, தாய்லாந்துக்குப் போய்டாதீங்க. அந்த தாயுள்ளம் பிடிக்கும்.’’

``இன்றிலிருந்து உங்க க்ளோஸ் ஃப்ரெண்ட் ஒருத்தரை, ஒரு அப்ளிகேஷனா மாத்தி உங்க ஃபோன்ல இன்ஸ்டால் பண்ணிக்கலாம்னா, யாரை என்ன அப்ளிகேஷனா மாத்துவீங்க?’’


 ``அனிருத்தை ட்விட்டர் அப்ளிகேஷனா மாத்துவேன். அனிருத்னா பொண்ணுகளுக்குப் பிடிக்கும். ட்விட்டர்னா பொண்ணுக, பசங்க எல்லோருக்கும் பிடிக்கும். எனக்கு ட்விட்டர், அனிருத், பொண்ணுக, பசங்க எல்லாம் பிடிக்கும். ஹி... ஹி...’’

கேட்டுட்டாங்கய்யா 2 கேள்விகள்

ஐஸ்வர்யா ராஜேஷ்

``கோடி ரூபாய் கொடுத்தாலும் செய்ய மாட்டேன்னு நீங்க சொல்ற வேலை என்னவா இருக்கும்?’’


``மொக்கைப் படத்துல வெறும் கிளாமரா மட்டும் வந்துபோற கேரக்டரைச் செய்யவே மாட்டேன்.’’

``உங்க லைஃபை பயோகிராஃபியா எடுத்தா, படத்தோட டைட்டில் என்னவா இருக்கணும்?’’

``நான் சென்னையில பிறந்து வளர்ந்த சாதாரண பொண்ணு. எந்தப் பெரிய பின்புலமும் இல்லாம வந்தப்போ ‘நீயெல்லாம் நடிகையாக முடியாது’ன்னு பலர் சொன்னாங்க. இப்போ நடிகையும் ஆகி, நல்ல பேரும் சம்பாதிச்சுருக்கேன். ஆனா, பயோகிராஃபிலாம்... (சிரிக்கிறார்) சரி... அப்படி வந்தா, `சென்னைப் பொண்ணு’ இதுதான் படத்தின் டைட்டில்.’’

கேட்டுட்டாங்கய்யா 2 கேள்விகள்

கோபிநாத்

``நீங்க இன்றிலிருந்து ஒரு கிழமையா மாறுறீங்கன்னா எந்தக் கிழமையா மாறுவீங்க?’’


``ஞாயிற்றுக்கிழமைதான். என்ன இருந்தாலும் சண்டேன்னா கொண்டாட்டமா இருப்பாங்க எல்லோரும். ஆனால், எனக்கு ஞாயிறுதான் பிஸியான கிழமை. அப்படி பிஸியா இருக்கிறதும் எனக்குப் பிடிக்கும். அதனால சண்டேதான்.’’

``நான் இந்தப் பாட்டு மாதிரின்னு சொல்லணும்னா... என்ன பாட்டா இருக்கும் அது?’’

``சந்தேகமே இல்லாம,  ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ தான். `வானம் எனக்கொரு போதிமரம்... நாளும் எனக்கது சேதி தரும்... ஒருநாள் உலகம் நீதி பெறும்... திருநாள் நிகழும் தேதிவரும்’ அப்படிங்கிறதுல நான் உறுதியா இருக்கேன். அதனால கேள்விகளால் வேள்விகளை நான் செய்றேன். மீடியாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே எனக்கான பாட்டு இதுதான்.’’

கேட்டுட்டாங்கய்யா 2 கேள்விகள்

வினோதினி வைத்தியநாதன்

``இந்த விஷயத்தைக் கத்துக்கவே மாட்டேன்னு நினைக்கிறது என்ன?’’

``இந்தி கத்துக்கவே மாட்டேன்.  பேசுறப்போ ‘ஹேஹேஹே’னு விரட்டுற மாதிரி இருக்கும். எழுத்தைப் பாத்தா, எல்லாம் தூக்குல தொங்குற மாதிரி இருக்கும். பிடிக்கவே மாட்டேங்குது.’’

``வரலாற்று நாயகர்கள்ல நீங்க ஒருத்தரை சந்திச்சு ஒரே ஒரு கேள்வி கேட்கணும்னா யார், என்ன கேள்வி?’’


``ஒளரங்கசீப். ‘யோவ்.. பதவிக்காக பெத்த அப்பனையே கொல்லுவியா?’ன்னு கேட்பேன்.’’

கேட்டுட்டாங்கய்யா 2 கேள்விகள்

ஆர். ரவிக்குமார் (இயக்குநர்)

`இப்போ டைம் மெஷின் கிடைச்சா, எங்கே யாரைப் பார்க்கப் போவீங்க?’’

``அம்பேத்கரைப் பார்ப்பேன். பார்த்து இப்போ நடக்கிறதெல்லாம் சொல்லி, `சட்டத்தைப் பயன்படுத்தறவங்களை விட, அதோட ஓட்டைகளைத்தான் அதிகமாப் பயன்படுத்துறாங்க அண்ணல். கொஞ்சம் அந்த ஓட்டையெல்லாம் அடைச்சுக் கொடுங்க’ன்னு சொல்வேன்.’’

``புதுசா ஏதாவது கண்டுபிடிக்கணும்னா என்ன கண்டுபிடிப்பீங்க?’’

``மூளையில இருக்கிற பிற்போக்குத்தனங்களை அழிக்கிற கருவியைக் கண்டுபிடிச்சு, ஆட்சி, அதிகாரத்துல இருக்கிறவங்களை நைஸா கூப்பிட்டு உட்கார வெச்சு அதெல்லாம் அழிச்சு அனுப்புவேன்.’’

கேட்டுட்டாங்கய்யா 2 கேள்விகள்

பூஜா தேவரையா

``இன்னொரு நாட்டுக் குடியுரிமை உங்களுக்கு கிடைக்கும்னா, எந்த நாட்டைத் தேர்ந்தெடுப்பீங்க, ஏன்?’’


``குடியுரிமையை மாத்திக்க மாட்டேன். குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு நாடா சுற்றுவேன். உலகத்துல பார்க்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு.’’

``ஓர் அறைக்குள்ள 30 நாள் இருக்கணும். ஒரே ஒரு பொருளை நீங்க எடுத்துக்கலாம். எதை எடுத்துப்பீங்க?’’


``30 நாளுக்கு உண்டான  மியூஸிக் ப்ளே லிஸ்ட். எல்லா சூழல்லேயும் இசை எனக்குத் துணையா இருந்திருக்கு.’’