Published:Updated:

மெட்ராஸின் அட்ரஸ்

மெட்ராஸின் அட்ரஸ்
பிரீமியம் ஸ்டோரி
மெட்ராஸின் அட்ரஸ்

தமிழ்ப்பிரபா, படங்கள்: மீ.நிவேதன்

மெட்ராஸின் அட்ரஸ்

தமிழ்ப்பிரபா, படங்கள்: மீ.நிவேதன்

Published:Updated:
மெட்ராஸின் அட்ரஸ்
பிரீமியம் ஸ்டோரி
மெட்ராஸின் அட்ரஸ்

`ன்ன்னாண்ணா... மனநிலை, சுச்சுவேஷன்னு இன்னான்னமோ சொல்ற... எதப்பத்திப் பாடணும்னு சொல்லு, இப்போவே, இங்கியே எழுதிப் பாடுறோம்” என்று சரவெடி சரண் சொல்ல, கானா குணாநிதி, கானா

மெட்ராஸின் அட்ரஸ்

பாலச்சந்தர், ஜூனியர் நித்யா வழிமொழிகிறார்கள். கானா பாடல்களில் கலக்கியெடுக்கும் வடசென்னை இளைஞர்கள் இவர்கள். சினிமாவிலும், யூடியூபிலும் இவர்களே ட்ரெண்டிங் ஸ்டார்ஸ்.

“மூக்குத்தி மூக்குத்தி வந்து வந்து கிள்ளிட்டுப்போ” உலோகக் குரலில் கானா பாலச்சந்தர் ஆரம்பித்தால் பக்கத்திலிருந்த தண்ணீர் பாட்டில் அதிர்கிறது. மைக்கை வாங்கிய குணாநிதி “ஆங் சங்கி மங்கி சங்கி மங்கியாம்.. என்றவர் பக்கத்திலிருந்த சரவெடி சரணைப் பார்த்து “நீ எப்போதுமே அய்க்கு லுங்கியாம்” எனக் கலாய்க்கிறார்.  “இந்த டிஷ்டி பொம்ம மூஞ்சிகள எடுக்க எதுக்கு சார் இவ்ளோ பெரிய கேமரா” என்று போட்டிக்கு  இழுக்கிறார் ஜூனியர் நித்யா. “வா நண்பனுக்கு கோயில் கட்டு.. அவன் போக மாட்டான் உன்னதான் விட்டு” என்று சுண்டி இழுக்கிறார் சரவெடி சரண். கானா இசை உலகில் ஒருவருக்கொருவர் போட்டிதான். கலகலவென எகிறியடிக்கிறார்கள் ஒவ்வொருவரும்.

மெட்ராஸின் அட்ரஸ்

``சினிமாவில் என்னென்ன பாட்டெல்லாம் பாடியிருக்கீங்க?’’ எனக் கேட்டதும்,  “ண்ணோவ் நா சொல்றேன்’’ என முந்திக்கொண்டுவருகிறார் கானா பாலச்சந்தர். “ `தெறி’ படத்துல `ஜித்து ஜில்லாடி’ பாட்டு மூலமா நான் அறிமுகமானேன். என்னோட முதல் பாட்டே தேவா சார் கூட சேர்ந்து அதுவும் விஜய் சார் படத்துல பாடின சந்தோஷம்லாம் வேற லெவல்ண்ணா. அடுத்து `த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்துல `வா வா வா... என் பட்டுக்குட்டி நீ. வெலகாம என் கூட ஒட்டு நீ’ னு ஒரு பாட்டுப் பாடினேன். இப்போ சந்தோஷ் நாராயணன் சார் மியூஸிக்ல `மேயாத மான்’ படத்துல பாடி இருக்கேன்” என்று சொன்னவருக்கு முகம் முழுக்கச் சிரிப்பு.

அடுத்து குணாநிதி... “என்னோட பதினாறு வயசுல நான் மொத பாட்டுப் பாடினேன். இப்போ `விக்ரம் வேதா’வுல கூட முகேஷ் அண்ணாகூட சேர்ந்து `டஸக்கு டஸக்கு’ பாடி யிருக்கேன்’’ என்றவரை, “மாமே அந்த லைனைப் பாடுடா. சூப்பரா இருக்கும்” என்று கொஞ்சு கிறார் ஜூனியர் நித்யா. `வங்காளக் கரை ஓரத்திலே... நம்ம வண்ணாரப் பேட்டை யிலே... சிமிட்ரி ரோடு சிக்னலிலே... நம்ம எம்.கே.பி நகரினிலே... மொத்தம் இங்க ஆயிரம் குடும்பம் தங்கும். இந்தத் கோட்டைக் குள்ளே காவலுனா வேதான்னு ஒரு சிங்கம்’ என்று முடிக்க ஏரியாவே `டஸக்கு டஸக்கு’தான்!

மெட்ராஸின் அட்ரஸ்

குணாநிதி தொடர்ந்தார் “ `சாவடி’ படத்துல ஒரு பாட்டுப் பாடி இருக்கேன். `மேயாத மான்’ படத்துல நானும் பக்கத்துல ஒக்காந்துனுகிறாரே பாலச்சந்தர், ரெண்டு பேரும் நடிச்சும் இருக்கோம்.  `குப்பத்து ராஜா’ படத்துல ஜி.வி. பிரகாஷ் சார்கூட நடிச்சுக்கிறோம். நெறைய படத்துக்குப் பாடிக்கிறோம்.. பாட்டெல்லாம் ரிலீஸ் ஆனா, ஒரு கலக்குக் கலக்குவோம்’’ என்கிறார் குணாநிதி.

அடுத்து யூடியூப் கானா பிரபலமான ஜூனியர் நித்யாவைக் கேட்டேன். ``சாவு வீடு, கட்சி மீட்டிங்னு எவ்ளோ நாள்தான் நாங்க அங்க மட்டும் பாடினு இருக்கிறது. நாமளும் யூடியூப்லாம் பாடி, நம்ம கானா பாட்டு வேர்ல்டு  ஃபுல்லா போவணும்னு தோணுச்சி. அதான் கானாவை வீடியோ பண்ணிப்போட்டோம். இன்னைக்கு எங்க கானா பாட்டுங்களாம் வித்தியாசமா இருக்குதுன்னு கேட்டு ஃபாரீன்காரங்களெல்லாம் ஜாலி பண்றானுங்கோ... லேட்டஸ்ட்டா நானும் என் ஃப்ரெண்ட் சஞ்சய்யும் `தல’க்கு ஒரு கானா பாட்டு எழுதி யூடியூப்ல வுட்டோம். செம்ம ஹிட்டு.

`கெளம்புற புயலுகூட அவர் பேர் சொன்னா நின்றும்...
தலதான் ஊன்னு சொன்னா வேர்ல்டு ஃபுல்லா மன்றம்...
சினிமால அவார்டு எல்லாம் அவருக்காக இருக்கும்...
கார குட்த்துப் பாருங்க ஃப்ளைட் மாறிப் பறக்கும்...
தேவைல்லாத வார்த்த உட்டா தொம்சம்டா.

கானா பாடகர் நாங்க எல்லாம் தலயோட வம்சம்டா’ ”  என அவர் உச்சஸ்தாயியில் பாட மற்றவர்கள் தாளம் போடுகிறார்கள்.

மெட்ராஸின் அட்ரஸ்

“ஜூனியர் நித்யா சொன்ன மாரி, எங்க தாத்தாங்கதான் மைக்செட்கூட இல்லாம, தரையில ஒக்காந்து பாடுனாங்கோ. நாங்களும் அங்கயே நின்னுனு இருந்தா, இன்னிக்கு வேலைக்கு ஆவுமா? பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி யூடியூப்ல அப்லோட் பண்ண ஆரம்பிச்சோம். செம்ம ரெஸ்பான்ஸ். நா இதுவரைக்கும் நாப்பது பாட்டுப் பாடிக்கிறேன். மைசூர், பெங்களூர்லலாம் கச்சேரிக்குக் கூப்டுவாங்கோ. ஒருவாட்டி மலேசியாவுல ஒரு கச்சேரிக்கு வரச் சொல்லி கூப்டாங்கோ. எங்கிட்ட பாஸ்போர்ட் இல்ல... அதனால போவ முடியல. அடுத்த வாரத்துல பாஸ்போர்ட் எடுத்துட்டன்னா, வேர்ல்ட் ஃபுல்லா  போவேன்’’ என்றவர்,

`கலரு டை அடிச்சிக்கினு சுத்தினு வருவேன் பைக்குல...
சத்தியமா  ஜெயிப்போம்டா எங்க ஃலைப்புல...
நாங்க யாரப் பாத்தும் இதுவரைக்கும் பயப்புடல்ல...
எங்ககூட எப்பவும் சுத்தும் ஒரு கைப்புள்ள’

என வாழ்க்கை லட்சியத்தையே பாடிக்காட்டினார் சரவெடி சரண்.
கன்ஃபார்மா ஜெயிப்பீங்க பாய்ஸ்!