Published:Updated:

ஏன்னா டிசைன் அப்படி!

ஏன்னா டிசைன் அப்படி!
பிரீமியம் ஸ்டோரி
ஏன்னா டிசைன் அப்படி!

ப.சூரியராஜ் - ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி

ஏன்னா டிசைன் அப்படி!

ப.சூரியராஜ் - ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி

Published:Updated:
ஏன்னா டிசைன் அப்படி!
பிரீமியம் ஸ்டோரி
ஏன்னா டிசைன் அப்படி!

டிஸ்ப்ளே சல்லி சல்லியாய் நொறுங்கிப்போன செல்போனை ரப்பர் பேண்டால் கட்டிக் கலந்துரையாடும் அப்பாவிகளையும் மாதத்திற்கு நான்கு மொபைல்கள் மாற்றும் அதிசயப்பிறவிகளையும் இந்தக் கடவுள் எப்படி டிசைன் செய்திருக்கிறார் என அடிமட்டம் வரை சென்று அலசியதில் மாட்டியவை...

ஏன்னா டிசைன் அப்படி!

மொபைலை அடிக்கடி மாற்றுபவர்களின் மொபைலில் ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் கடைகளின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். புது மொபைல் ரிலீஸாகும் தேதிகளில், `விவேகம்’ அஜித்போல ரெட் அலார்ட் அலாரம் வைத்தெல்லாம் புக் செய்வார்கள்.

ஒரே மொபைலை வைத்து ஒப்பேற்றுபவர்கள், சாலைகளில் தரப்படும் செல்போன் ஆஃபர் பிட்

ஏன்னா டிசைன் அப்படி!

நோட்டீஸ்களைக்கூட மடித்து ராக்கெட் செய்துவிட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப்பார்கள்.

தான் வைத்திருக்கும் மொபைல் மாடலின் பெயரோடு `ப்ளஸ்’ என்ற வார்த்தையை மட்டுமே சேர்த்து `இது புது மாடல்’ என நிறுவனங்கள் கொரளி வித்தை காட்டினாலும், அதை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என மொபைல் மாற்றிகளின் மனசு கடந்து தவிக்கும். கைகளில் காய்ச்சல் அடிக்கும்.

`புது மாடல் செமையா இருக்கு’ என யார் ஆசைகாட்டினாலும், `இந்த உலகத்துல எதை எடுத்தாலும் ஒண்ண விட ஒண்ணு பெட்டராத்தான் இருக்கும். அதுக்கு முடிவே இல்லை. அதுக்காக நம்ம மனசை மாத்திகிட்டே போகக் கூடாது’ என `ஜானி’ ரஜினிபோல் அட்வைஸைப் போடுவார்கள்.

அந்த போன் சிறந்ததா, இந்த போன் சிறந்ததா? என நண்பர்களுக்குள் நடக்கும் பட்டிமன்றத்திற்கு இவர்கள்தான் சாலமன் பாப்பையா. வீட்டு நடப்பு, நாட்டு நடப்பைவிட மொபைல் பற்றிய அப்டேட்டுகளையே நாக்கு மற்றும் விரல் நுனிகளில் ஸ்டோர் செய்து வைத்திருப்பார்கள்.

ஏன்னா டிசைன் அப்படி!

விரல்களால் அடிக்கடி டிஸ்ப்ளேவில் ஸ்வைப் செய்தால் சீக்கிரமே டிஸ்ப்ளே பழுதாகிவிடும் என்ற புரளியைத் தீர்க்கமாக நம்புவார்கள். சிலருக்குத் தனது மொபைல் மாடலின் பெயரே தெரியாது. என்ன மாடல் வெச்சுருக்கீங்க? என்ற கேள்விக்கு `சாம்சங்’ எனப் பதிலளித்துப் பல் இளிப்பார்கள். என் இனமய்யா நீங்கள்...

தான் வாங்கப்போகும் மொபைல் பற்றி கூகுளில் கூகையைப்போல் இரவு முழுக்க முழித்திருந்து தேடித்தேடி படித்திருந்தும், வாங்கும்போது கடைக்காரரிடம் குண்டக்க மண்டக்க கேள்விகள் கேட்டுக் கதறவிடுவார்கள். கடைக்காரரைவிட தனக்கு எல்லாம் தெரியும் என்பதை இந்த நல்லுலகிற்கு எடுத்துச் சொல்லும் அறிவுச்சண்டை அது.

இவர்களும் கடைக்காரரைக் கதறவிடுவார்கள். ஆயிரம் ரூபாய் முதல் அறுபத்தைந்தாயிரம் ரூபாய் வரை, எல்லா மொபைல்களின் சிறப்பம்சங்களையும் அக்குவேறாய், ஆணிவேறாய் கழட்டி டீட்டெயிலாகக் கேட்டுக்கொண்டிருப்பார்கள். ஆனால், உடல் பொருள் மட்டும் அங்கு இருக்கும், ஆவி ஓ.எல்.எக்ஸ் பக்கம் சுற்றிக்கொண்டிருக்கும்.

ஏன்னா டிசைன் அப்படி!

புதிய மொபைல் ஃபோபியாக்களிடம் கண்டிப்பாக ஓரிரண்டு காலி மொபைல் டப்பாகளாவது இருக்கும். அதற்குள் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஹெட்போன்களையும், மல்டிபின் சார்ஜர்களையும், மெமரி கார்டுகளையும் பதுக்கி வைத்திருப்பார்கள்.

ஒரே மொபைல் சின்ட்ரோம் கொண்டவர்களிடமும் ஒரு காலி மொபைல் டப்பா இருக்கும். அதற்குள் மொபைல் வாங்கிய பில்லில் ஆரம்பித்து, யூஸர் மேனுவல் வரை பத்திரமாக வைத்திருப்பார்கள். அதிலும் சிலர் சார்ஜர் வொயரைச் சேர்த்து முடித்துப்போட்டிருந்த குட்டி ப்ளாஸ்டிக் ஒயரைக்கூட பத்திரமாக எடுத்து வைத்திருப்பார்கள்.

புதிதாக ஒரு மொபைல் வாங்கினால் அதற்கு நார்மல் இந்தியர்களைப்போல பேக் கேஸ், சிலிக்கான் பவுச், ஸ்க்ராட்ச் கார்டு எல்லாம் வாங்கிப்போட்டுப் பாதுகாக்கமாட்டார்கள். `என்னத்த பேக் கேஸ், என்னத்த ஸ்க்ராட்ச் கார்டு’ எனச் சலித்துக்கொள்வார்கள்.

ஏன்னா டிசைன் அப்படி!

தான் புதிதாக வாங்கிய மொபைலைக் கைக்குழந்தையைவிட பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வார்கள். பேக் கேஸ், சிலிக்கான் பவுச், ஸ்க்ராட்ச் கார்டு, டெம்பர் க்ளாஸ் எனக் களத்தில் இறங்கப்போகும் ஓப்பனிங் பேட்ஸ்மேனைப்போல சகலத்தையும் மாட்டிவிடுவார்கள்.

புது மொபைல் வாங்கிய பிறகு, தனது பழைய மொபைலைத் தூக்கிப்போட்டு விளையாடுவார்கள்.  குழந்தைகளிடம் கொடுத்து `எங்கேயும் நகராத... இங்கேயே சேஃபா உட்கார்ந்து விளையாடு’ என போனைக் கொடுத்துக் கொடைவள்ளல் ஆவார்கள். அதைத் தனது புது மொபைலில் ஒரு செல்ஃபியாகவும் எடுத்து ஃபேஸ்புக்கில் தட்டுவார்கள்.

குழந்தைகள் வேதாளங்களாக மாறிக் கழுத்தைப் பிடித்துத் தொங்கினாலும், கையில் இருக்கும் மொபைலை அவர்களிடம் தரவே மாட்டார்கள். வீட்டிற்குக் குழந்தைகள் யாராவது வந்தால் மொபைலை சைலன்ட்டில் போட்டுப் பரணில் ஒளித்துவைப்பார்கள். ஏன்னா டிசைன் அப்படி!